Mantras & Articles

திருநெடுந்தாண்டகம்
தீர்க்கமான ஆயுஸ். தொண்டுக் கிழமன்று. தொண்டில் பழுத்த கிழமையின் அழகு. காவி உடை உலகை வெறுத்த நிறமாக இல்லாமல் உலகை உத்தமனின் வடிவாகக் கண்ட தர்சனத்தால் மஹா கல்யாண நிறமாகக் காட்சியளிக்கும் தேஜஸ். வயோதிகம் தன்னை அறிவித்துக்கொள்ளும் கைகளோடு அந்திப்பொழுதில் இருவர் தாங்கி நிற்க இருள் கடியும் யதிராசர் அந்தி வேட்டு அர்க்கியம் விடுகிறார். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்ட எம்பெருமானார் அந்தி முடித்து அணுக்க முதலிகளை அழைத்து கூரத்தாழ்வான் மகனாரை அழைத்துவரும்படிக் கூறுகிறார். பராசர பட்டர் வந்ததும், வாஞ்சையோடு அவரிடம் வார்த்தையாடி, அவர் கையில் கிரந்தம் ஒன்றைத் தந்து படிக்கச் சொல்லி அருகில் உள்ளாரை நோக்கி, ‘இவனை நம்மை நோக்குவதுபோல் நோக்கிக் கொள்ளுங்கோள்’ என்று ஆணையிடுகிறார். பராசர பட்டரிடம், ‘குழந்தாய்! என் தள்ளாத வயது. ஒரு பணி இன்னும் முடியவில்லை. நீதான் அதை முடிக்க வேண்டும். மேல்நாடு எனப்படும் மைசூர் பிராந்தியத்தில், மாதவ வேதாந்தி என்று ஒரு வித்வான். ஆறு தர்சனங்களும் அவருக்கு கையிலங்கு நெல்லிக்கனி. மாயாவாதத்தில் மிகுந்த ஊற்றம் உடையவர். அவரை எப்படியாவது நம் தர்சனத்திற்கு அழைத்துவர வேண்டும். உனக்கு இது நான் விட்டுச் செல்வது.’

 நாட்கள் நகர்ந்தன. நாரணன் தன் தனிமையைப் போக்கிய நல்லவர் இட்ட கட்டளையை சுமந்தபடி பட்டர் தகுந்த காலம் வாய்க்கக் கருதிக் காத்திருந்தார். ஒரு நாள், ஒரு தேசாந்திரி பிராம்மணன் ஒருவர் பட்டரிடம் வந்து தாம் மைசூர் பிராந்தியமெல்லாம் போய் வந்திருப்பதாகவும், அங்கு மாதவ வேதாந்தி என்னும் மஹா வித்வானைக் கண்டதாகவும், அவரிடம் பராசர பட்டரைப் பற்றி பிரஸ்தாபித்ததாகவும் கூறினார். பெயரைக் கேட்டதும் பட்டர் கூர்ந்து கேட்கத் தொடங்கினார். தேசாந்திரி கூறினார், ‘வித்வானிடம் ஸ்ரீரங்கத்தில் பராசர பட்டர் என்னும் மிகப்பெரிய வித்வான் வசிப்பதாகக் கூறினேன். அதற்கு மாதவ வேதாந்தி ‘அப்படியா? அவர்க்கு என்னென்ன சாஸ்திரங்கள் போரும் ?’ என்று கேட்டார். நானோ நியாயம், மீமாம்ஸை, காவ்யம், ஸகல வேத வேதாந்தங்கள் என்று சொன்னேன். ‘ என்றார் தேசாந்திரி. அதற்கு பட்டர், ‘அதெல்லாம் இருக்கட்டும் ஸ்வாமி. நீர் பல நகரங்களைக் கண்டு பல ஸ்தலங்களில் இருக்கும் விசேஷங்கள் எல்லாம் அறிந்தவராய் இருக்கும் நாகரிகராய் இருக்கிறீர். ஒருவரைப் பற்றிச் சொல்லுமிடத்தே அவருக்குத் தெரிந்த சாதாரண சாஸ்திரங்களைச் சொல்லியா அறிமுகப் படுத்துவது? அவருக்குத் தெரிந்த விசேஷ சாஸ்திரம் பற்றிச் சொன்னால் அன்றோ கேட்பவருக்கு விசதமாகத் தெரியவரும். அதைவிடுத்து ஸாமாந்ய க்ரந்தங்களை நமக்குத் தெரிந்ததாகச் சொல்லிவந்தீரே!’ என்று கூறினார். தேசாந்திரிக்கோ ஆச்சரியம். கற்போர் கற்கும் உயர்ந்த பட்ச சாஸ்திரங்களை எல்லாம் தாம் சொல்லாநிற்க, பட்டர் தமக்குத் தெரிந்த விசேஷம் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்கிறாரே! நாட்டில் நடையாடும் வித்யைகளைத்தானே ஒருவர் கற்றிருக்க முடியும்? இதையெல்லாம் விடுத்து வேறு என்ன விசேஷ சாஸ்திரமாக இருக்கக் கூடும்? என்று நெடுநேரம் சிந்தித்து பட்டரையே கேட்டுவிட்டார். பட்டர், ‘ஸ்வாமி நமக்குத் திருநெடுந்தாண்டகம் போரும் என்று சொன்னீரோ?’ என்று கேட்டார். (போரும் போரும் என்றால் நன்கு தெரியும், கைவரும் என்று பொருள். ) தேசாந்திரி திகைத்தார். அப்படி ஒரு சாஸ்திரம் இருப்பதாகத் தாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ‘சரி அடுத்த முறை போகும் பொழுது நிச்சயம் சொல்கிறேன்’ என்று சொல்லிப் போய்விட்டார்.

தேசங்களைச் சுற்றி வருமிடத்தே மைசூருக்கு வந்த அளவில் மாதவ வேதாந்தியைச் சந்தித்துப் பேசினார். மாதவ வேதாந்தியே, ‘பராசர பட்டர் எப்படி இருக்கிறார்?’ என்று கேட்டார். தேசாந்திரி, ‘அவர் நலமே உள்ளார். சென்ற முறை நான் அவருடைய வித்வத்தைப் பற்றிக் கூறுமிடத்தே, முக்கியமாக அவருக்குத் தெரிந்த விசேஷ சாஸ்திரம் ஒன்றைக் குறிப்பிடத் தவறிவிட்டேன் . அந்த சாஸ்திரத்தின் பெயர் திருநெடுந்தாண்டகம் என்பது’ என்றார். மாதவ வேதாந்தியோ பெரிதும் மனம் கலக்கம் உற்றார். ‘அடடா! சாஸ்திரத்தின் பெயர் கூட நாம் கேள்விப்பட்டதில்லை. அதில் அவரோ பெரும் நிபுணர். அவர் எத்தகைய வித்வானாய் இருக்க வேண்டும். நாமோ எல்லாரும் அறிந்த சாஸ்திரங்களையே அறிந்துவிட்டு, ஆறு தர்சனங்களுக்கு ஆறு ஆஸனம் இட்டு அமர்ந்திருக்கிறோம்.’ என்று.
 சில மாதங்கள் கழித்து பராசர பட்டர் மேல்நாட்டிற்குப் பயணமானார். அப்பொழுது தேசாந்திரியிடம் தம் எண்ணத்தைக் கூறிய பொழுது, தேசாந்திரி, ‘ஸ்வாமி! நீர் இப்படியெல்லாம் வெளிப்படையாகப் போனால் ஒரு நாளும் மாதவ வேதாந்தியைச் சந்திக்கவே முடியாது. காரணம் நீர் வாதத்திற்கு வந்திருப்பதாகத் தெரிந்ததும் அவருடைய சீடர்க் குழாங்கள் உங்களைச் சூழ்ந்துகொண்டு நாட்கணக்கில், மாதக்கணக்கில் வாதம் செய்தே நோக அடித்து விடுவர். அவர்களைத் தாண்டிப் போக முடியாது’ என்றார். பட்டரோ அவரையே பதிலுக்குக் கேட்டார். ‘சரி அப்படியானால் எப்படித்தான் சந்தித்து அவரோடு வாதம் செய்து நம் தர்சனத்திற்குக் கொணர்வது?’ தேசாந்திரி சொன்னார், ‘ ஸ்வாமி! அவரிடம் நேரே போகவேண்டும் என்றால் தினமும் அவர் அன்னதானம் செய்வார். அந்த வரிசையில் சென்றால் யாரும் தடுத்து நிறுத்த மாட்டார்கள். அங்கு அவரே நேரில் வந்து நின்று கவனிப்பார். அப்பொழுது பார்க்க முடியும்.’
 பராசர பட்டர் தமது உடன்வந்தவர்களை ஊருக்கு வெளியிலேயே இருக்கச் சொல்லிவிட்டுத் தாம் மட்டும் ஒரு தடுக்கு இலையைக் கையில் சுருட்டிக் கொண்டு பிக்ஷைக்கான வரிசையில் பொறுமையாய்ச் சென்று கொண்டிருந்தார். மாதவ வேதாந்தியை வரிசை நெருங்கியதும் பட்டர் வரிசையை விட்டுப் பிரிந்து நேரே மாதவ வேதாந்தியை நோக்கிப் போனார். ஸ்வாமி! வரிசை அங்கே அங்கே என்றார்கள். மாதவ வேதாந்தி கிட்ட வந்தவரிடம் ‘கா பிக்ஷா?’ என்று கேட்டார். பட்டரோ ‘தர்க்க பிக்ஷா’ என்று பதில் சொன்னார். ஒருகணம் துணுக்குற்ற மாதவ வேதாந்தி கூர்ந்து நோக்கி ‘நீவிர் பராசர பட்டரோ?’ என்று கேட்டார். ஆம் என்றதும் ஆஸனங்கள் இடப்பட்டன. வாதம் வெகுநாள் தொடர்ந்தது. மாதவ வேதாந்தி நஞ்சீயராய் ஆவதற்கான மனநிலையை அடைந்தார். பராசர பட்டரோ ‘அவசரப் படவேண்டாம். பொறுமையாக உமது அனைத்து ஐயங்களையும், பழைய வாஸனைகளையும் அகற்றிப் பின் முடிவெடுப்பீர்’ என்று கூறித் திரும்பினர் திருவரங்கம்.
 பராசர பட்டருக்கு ஒரு பழக்கம். தாம் எங்கு வெளியூர் சென்றாலும் திருவரங்கம் திரும்பியதும் முதலில் ஸ்ரீரங்கநாதன் சந்நிதி சென்று மகன் தந்தையிடம் விவரிக்கும் பாவனையில் தாம் சென்ற செய்தி, நடந்த வ்ருத்தாந்தங்கள் ஒன்றுவிடாமல் சொல்லிக் களிப்புறுவார். அது போலவே இப்பொழுதும் உள்ளம் களிநடம் பொங்கச் சென்று புகும் போது அர்ச்சக ஆவேசத்தில் அருளரங்கன் அருளப்பாடு ஆயிற்று. ‘ மேல்நாட்டில் நீர் வேதாந்தியை வென்றவிதம் எங்ஙனே” என்று. மகனை விட தந்தைக்கு suspense தாங்கவில்லை போலும். 
என்று சொல்லி திருநெடுந்தாண்டகத்தின் அர்த்த விசேஷங்களைப் ‘பெற்றோர்’ முன்பே சொல்லிக்காட்டினார். தாயும் தந்தையும் தனயருமாய், அவர் தயவால் பின்வந்த மகவுகளாய் நாமும் கூடிக்களிக்க இன்றளவும் பகல்பத்து தொடங்குவதற்கு முந்தைய நாள் அமாவாஸ்யை ராத்திரி ‘திருநெடுந்தாண்டகம்’ என்று அந்தத் திருவோலக்கம் கொண்டாடப்பட்டு வருகிறது. 
 பராசர பட்டருக்குப் பிடித்த சாஸ்திரமே இந்த திருநெடுந்தாண்டகம். திருமங்கை மன்னனின் இந்தத் தாண்டகம் 30 கொண்டே மேல்நாட்டு அத்வைத வேதாந்தியை வென்றார் என்றால் அந்த முப்பதிலும் ‘மைவண்ண நறுங்குஞ்சி’ என்று தொடங்கும் பாடல் பட்டருக்கு உயிர். அவர் எந்நேரம் கேட்டாலும் அதன் அர்த்த பிரபாவத்தில் ஆழ்ந்து பரக்க உபந்யஸிக்கத் தொடங்கிவிடுவார் என்கிறது குருபரம்பரா பிரபாவம்.
அத்தனையையும் பரக்க விளக்கி எழுதும் உத்வேகம் எழுகிறது. ஆயினும் நமக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற அச்சம் பின்வாங்குகிறது. ‘இவ்வண்ணத்து இவர்நிலைமை கண்டும் தோழீ! நம்மை நாம் ஓர்பொருட்டாய் எண்ணினோமே.’


“மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார் கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் மரவிந்த மடியு மஃதே அவ்வன்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ! அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.” (21)

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
==================================================================================
Sri:SrimatE rAmAnujAya Nama:

Srimath Varavara MunayaE Nama:

*“Glimpses of Swami Nampillai Eedu”*

In 2011, adiyaen took some initiative and I was started writing some
glimpses of Eedu vyAkyana anubhavam but owing to some issues, there was
some intermission in the kainkaryam and thereby adiyaen could not continue
to write. adiyaen would like to resume this EEdu vyAkyanam anubhavam now.
adiyaen humbly share few amazing and wonderful Eedu anubhavam starting
from “* Thiruvaimozhi **Second Centum **”. *
Everyone is aware that Swamy nammAzhwAr’s Thiruvaimozhi is a magnum opus
and swAmi Nampillai Eedu mupathArAyirappadi vyAkyAnam is incomparable to
any other vyAkyanam. In entire Thiruvaimozhi Eedu avatharikai, it is
mentioned that swAmi Nampillai’s commentary on this particular second
centum avatharikai contains all vedAnta sAram inner meanings and swAmi
Nampillai beautifully summarizes the essence of Kainkaryam in a nice
sequence.

Emperumān, out of his causeless mercy (nirhētuka kaţākśam), bestowed “mayarvu
ara mati nalam” to Swāmi Nammāzhwār. Subsequently, Nammāzhwār has stated
this in the first pAsuram of his Tiruvaimozhi(1.1.1).

swAmi Nammāzhwār clearly established in first centum, that ‘bhaghavad
kainkaryam’ is the parama purushArtham for everyone.

swami Nampillai says:-

*”முதற்பத்தால் பகவத்கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அருதியிட்டார் “;*

*இரண்டாம் பத்தால்- அந்தக் கைங்கர்யத்தில் க ைள அறுத்தார்!*
In first pasuram itself (1.1.1), Nammāzhwār asserts his mind to perform
kainkaryam –

“*sudar adi* thozhuthezhuen mananE!* to the feet of Kanchi deva perumAl by
seeing all His parthuvAm and soundaryam, vAtsalyam and all other
Thirukalayana gunangal.
In the last pAsuram, AzhwAr says ,1.1.10(tanivilar karparEl,* kalvi vAyumE
*). ‘Kalvi’ here means the ‘Knowledge’.The ultimate knowledge is nothing
but the divine Kainkaryam to emperumAn. The vedAnta scholars define
this as “Upakrama
upasamhAram” nyAyam, which means Azhwar clearly emphasize the essence of
Kainkaryam in the beginning(thozhuthezhuen mananE-1.1.1) and at the end
of that thiruvAimozhi*(*kalvi vAyumE 1.1.10*) **.*

When vEdAnta scholars convey any Sastric meanings, they try to articulate

the inner meanings in many places repeatedly and give importance , this is
called ‘AbhyAsam’ in our sampradAyam. Our beloved Nammāzhwār, follows this
similar pattern:

naadaatha malar_naadi* naaL dhORum naaraNan dhan* (1.4.9)

ayarppilan alaRRuvan* thazhuvuvan vaNankuvan amarnthE.(1.3.10).

niRkum ammaan_seer,* kaRpan vaikalE (1.8.4).

swAmi Nampillai says, the whole first centum is to establish the parama
purushArthamAna Kainkaryam and its purpose and all other Nine centums
would explain the same kainkaryam further with all arthapanchakam details.

*இத்தால்- முதற்பத்து பிரதாநம், ஒன்பது பத்தும் த்த்சேஷம்!*

*புருஷார்த்தமான கைங்கர்யமே பிரபந்தத்துக்கு பிரதாந தாத்பர்யம்!!*

*இரண்டாம் பத்தால்- அந்தக் கைங்கர்யத்தில் க ைள அறுத்தார்!*

*க ைள அறுத்தார்!**-***

swAmi Nampillai says , there are two ways of obstruction ( two Virodhis)

we face when performing Kainkaryam.**

1) * **bhAgya Virodhi:- * The external Virodhi from this material
world due to prakruthi sambandham and which in turn influence all our sense
organs to influence the bad things, this is called bhAgya Virodhi. *(பிரக்ரூதி
சம்பந்த: பாஹ்ய விரோதீ.**)*

AzhwAr emphasize this clearly in :-kaLippum kavarvum aRRup*
piRappup piNi mooppu iRappaRRu(2.3.10)
2) * **Anthara Virodhi:*- The internal Virodhi which is caused due to
our swAnthanthriyam (free independence will) and doing things to our own
happiness is called Anthara Virodhi. *(ஸ்வார்ததயா கரணம் ஆந்தர விரோதீ*).

AzhwAr emphasize this clearly in “emmaavItdu” pathigam:- “thanakkEyaaka*
enaikkoLLum IthE”(2.9.4)

The essence of our kainkaryam is to ultimately make Sriman nArAyanan happy
but not to perform kainkaryam for our own happiness.

*swAmi Nampillai gives wonderful dhrishtAntham here(க ைள அறுத்தல்):- *

In order to grow up the grains and seeds in the agriculture field properly,
the farmer usually ploughs the entire field repeatedly; and the primary
purpose of ploughing is to turn over the upper layer of the soil completely
to remove the dust and unusable grasses and to bring fresh nutrients to the
surface. This is called “Kalai paritthal” . Simillarly, our Athma(payir)
is considered as a grain field and it has to be ploughed to remove all
the other external influences and Virodhis to attain emperumAn’s feet. This
is done only through by our AchAryan Krupai.
*Second Centum- vAyum tirai ugalum*

 As we saw earlier, the ‘*ParAnkusa NAyaki’ * did not know and unable to

understand the natural phenomena and reality that the colors of water,
birds(nArai), dark night, moon, lamp etc., are naturally in its own color
but she felt that they were also in complete distress due to the separation
of EmperumAn like herself. *NAyaki *thought that EmperumAn is the same
cause for their distress also, like her. So she moans on-behalf of all
those natural things in this vAyum tirai ugalum 2.1.1.

Someone might object AzhwAr’s predicament here stating that why don’t
azhwAr realize that some of those are Achith and Achith tatvam by nature
don’t possess any intelligence and

non-sentient and how come they moans the separation of emperumAn like her?
Is this possible? Does azhwAr know tatva threyam here? Has it ever
happened earlier somewhere? Is there a proof?

Yes, in *Srimad BhAgavata Puranam*, last chapter, tenth skandam( *Dasama
Skandam*), having been plunged in to bhaghavad vishayam and in love with
beloved Krishna, the GopimArgal there expressed the similar moans like
our nammAzhwAr and also sent birds as messengers.

SB 10.47.11

*kācin madhukaraṁ dṛṣṭvā*
*
dhyāyantī kṛṣṇa-saṅgamam
priya-prasthāpitaṁ dūtaṁ
kalpayitvedam abravīt

Further swAmi Nampillai beautifully quotes the Sri Ramayana shlokam here from Ayodhya KAndam:

SumantrA narrates the ghastly fate of ayOdhyA to mahArAjar Dasaratha
stating both the animate and inanimate beings are suffering due to the
separation of Sri Rama pirAn.

विषये ते महा राज माम व्यसन कर्शिताः |

अपि वृक्षाः परिम्लानः सपुष्प अन्कुर कोरकाः ||

When Sri rAma PirAn exiled from AyodhyA , all the trees in AyodhyA did not

give any flowers, the plants did not give sprouts and flowers did not
give buds due to the separation of emperumAn , though all the trees had
all natural resources for photosynthesis process. (water and sunlight with
abundant in ayOdhyA).

उपतप्तोदका नद्यः पल्वलानि सरांसि च |

*परिष्कुपलाशानि वनान्युपवनानि च ||*

Owing to the separation of rAma PirAn, all the Rivers, pools and lakes 

were filled with hot water. There was no cold water anywhere and even all

the groves and gardens were with their leaves, parched up. That forest
became silent, predominated by full grief towards of Rama pirAn’s
separation.

*Vishaya and anubhava svabhAvam of AzhwAr:*

*Someone can raise a question here, howcome this love of AzhwAr towards
emperumAn intensifies exponentially and thereby got intoxicated towards
Him; *

We can see this clearly in ‘paththudai adiyavarkku eLiyavan’ pathigam
where AzhwAr fell down with unconscious for Six months; Later having been
plunged in to EmperumAn’s swarUpa, rUpa, guNa, vibhuthigaL and got
separated, she(azhwAr) sent messengers like birds in anchiRaiya mada
Naaraai(1.4.1); whereas in vAyum tirai ugalum(2.1.1),the distress for her
got aggravated completely and she was in deep dejection. “*ParAnkusa NAyaki*’”
could not resist for the immediate urge to have the bhOgiyam to enjoy
them with emperumAn outwardly in 2.1.1.

In reality, despite we do any work with more enthusiastic and
interest and if we continuously do the same work, at any point of
time, the tendency to get bored for any human is common ; it might be
due to prakruthi sambandham or non-co-operation of our sense organs .

But unlike us, AzhwAr’s love towards emperumAn is getting intensified
and intoxicated exponentially as we move further in every pathigam?
How is it possible? We already knew by the name of “AzhwAr” itself,
they are deeply immersed in bhaghavad Vishaya and anubhavam of
EmperumAn’s swarUpa, rUpa, guNa, vibhuthigaL ; and most importantly it
is from Emperumān, out of his causeless mercy (nirhētuka kaţākśam),
bestowed “mayarvu ara mati nalam” to Swāmi Nammāzhwār.

*But On this light, swAmi Nampillai gives a wonderful philosophical
meaning for us in the vyAkyAnam:*

“விஷய ஸ்வபாவ மாத்ரத்தாலன்றிக்கே , அநுபவித்ரு ஸ்வபாவத்தாலும்
ஆற்றாமை அதிகம் என்கிறார் ; அக்கார்ய வைஷம்யத்துக்கு அடி ஆற்றாமையின்
தாரதம்யம்;” *”பயிலப் பயிலவிறே இனிதாயிருப்பது இவ்விஷயம் “*

– *Vishaya svabhAvam:* The complete knowledge (ngyAnam) of
knowing emperumAn; parabrahmam.
– *anubhava svabhAvam:* Having the bhOgiyam of EmperumAn’s
swarUpam, rUpam, guNam, vibhuthigaL and experiencing it both inwardly
and outwardly.The emphasis on the word *”**பயிலப்பயிலவிறே *” is to
draw light on “abhyAsam” here . *பயிலப்பயிலவிறே இதி அப்யஸிக்க
அப்யஸிக்க என்றபடி ;*

*In arumpatham , swAmi Nampillai quoted a wonderful pAsuram from
periya ThirumoZhi of our beloved kaliyan Thirumangai azhwAr;*

where mother of “parakala nAyaki” telling to Thirukannapuram Sowriraja
perumAl that her daughter is moaning His name so badly;
“*வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் மணநாறுமென்கின்றாளால் “
இத்யாதி(meaning முழுவதும்)*
periya Thirumozhi 8-1-9 Thirukannapuram SowrirAja perumAl (one of the
AchAryans of kaliyan); In the third line on this above pAsuram, AzhwAr
said “paNdu ivaraik kaNdu aRivadhu * evvUril? yAm enRE payilginRALAl
*

parakAla nAyaki says:-

– I’m wondering where did I see Him(Thirukannapuram sowrirAjan)
earlier? In what divya Kshetram?
– The other meaning here is, nAyaki again says:- “No, No- This is
the first time I’m seeing Him now; I have not seen Him earlier
anywhere;

*swAmi periyaVAchan pillai beautifully descirbes the above meaning in
His vyAkyAnam:*

By seeing the above two meanings, this is what we conclude:-

Since nAyaki says *”பயில்கின்றாளால்”*(present continuous tense) which
shows that she is still doing the *abhyAsam of emperumAn*
Thiru nAmam continuously and having the bhOgiyam of emperumAn’s
thirumEni sowntharyam,; she has not yet finished it completely.

When AzhwAr sees the emperumAn’s thirumEni sowntharyam for the first
time, it would make him to think that he had the vision of emperumAn
somewhere before in some place but not sure where it was and filled
*with some uncertainty*;After when AzhwAr embrace and trying to get
the outward bhaghavad anubhavam experience with emperumAn ; it would
make AzhwAr to dive deep in to the bhaghavad anubhavam nectar of
emperumAn and it never get bored for him (*தெகுட்டுதலின்றியே)* . The
conclusion here is, everytime when AzhwAR has the anubhavam of
emperumAn, emperumAn shows *azhwAr everytime newly with different
anubhavam f*or azhwAr . Such a great bliss for azhwAr. This is the
essence of the bhaghavad anubhavam .

*some vyAkyana panthigal for our bliss:*

“பண்டிவரைக் கண்டறிவது எவ்வூரில் யாமென்றே பயில்கின்றாளால்” என்ற
மூன்றாமடியின் விசேஷப்பொருள் குறிக்கொள்ளத் தக்கது; – இவ்விடத்துப்
பெரியவாச்சான் பிள்ளை வியக்கியான வாக்கியங் காண்மின் – முதல் நாள்
கண்டால் ஸவாபாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளியாலுமாக ‘முன்பே
கண்டறியும் முகமாயிருந்ததீ! எவ்வூரில்தான் கண்டது?’ என்னும்படி
யிருக்கும்; பிறந்தால் பின்பு’ முன் போரிடத்திலும் இவரைக் கண்டறியோம்’
என்னும்படியாயிருக்கும்; நித்யாபூர்வமான விஷயமென்றபடி.என்று. இதனை
விவரிப்போமிங்கு; – பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில்’ என்பதற்கு இரண்டு
வகையான பொருள் சொல்ல இடமுண்டு;
*1) ‘முன்பு இவரை எவ்விடத்திலோ பார்த்திருக்கிறோம் போல இருக்கின்றதே,
எவ்விடத்தில் பார்த்திருப்போம்!’ என்று விமர்சிப்பதாக ஒரு பொருள் .*
*2) பண்டு இவரை எவ்வூரில் கண்டறிவது – எவ்வூரிலும் கண்டறிந்ததில்லை;
இப்போதுதான் முதன்முதலாகக் காண்கிறொம் என்பதாக மற்றொரு பொருள். *
* ஒரு தடவை பிரயோகிக்கப்பட்டிருக்கின்ற வாக்கியம் இவ்விரண்டு பொருளையும்
ஏககாலத்தில் எங்ஙனே தருமென்னில்; மூலத்தில் “என்றே பயில்கின்றாளால்”
என்றிருப்பதால் ‘பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாம்’ என்னும்
வார்த்தையைப் பலகாலும் உருப்போடுகிறாள் என விளங்குதலால், அந்த வார்த்தையை
முதல் தடவை சொல்லும்போது முதற்பொருளும் அடுத்த தடவைகளிலெல்லாம் இரண்டாவது
பொருளும் சொல்லப்படக் குறையில்லையென்க. *

*இவ்விரண்டு பொருள்களின் ஸ்வாரஸ்ய மென்னவெனில் :– *

*எம்பெருமானை முதன் முதலாகக் காணும்போது திருமுகமண்டலத்தில் தண்ணளி
முதலியவற்றைக்கொண்டு ‘இவரை முன்பு எங்கோ கண்டாற்போலிருக்கிறதே!’ என்று
தோன்றும்; அதன்பிறகு எவ்வளவு நெருங்கிப்பழகினாலும் தெகுட்டுதலின்றியே
“எப்பொழுதும் நாள் திங்களாண்டூழி யூழிதொறும், அப்பொழுதைக்
கப்பொழுதென்னாராவமுதமே” என்னும்படியான விஷயமாகையாலே முன்பு
எங்குங்கண்டறியாதது போலவும் அப்பொழுதே புதிதாகக் கண்டு
அநுபவிப்பதுபோலவுந் தோன்றிக்கொண்டே யிருக்கும். மற்ற விஷயங்களிற்
காட்டில் பகவத் விஷயத்திற்குள்ள வைலக்ஷண்யம் இது – என்கை.*
*Further swAmi Nampillai shows an interesting comparison between
IlayaperumAl and NammAzhwAr and shows AzhwAr Arthi towards emperumAn
is so high than our Ilaya perumAl, How?:*

When rAma PirAn decided to leave AyodhyA ; Lakshmana pleaded to
emperumAn that he should also be allowed to accompany with rAma PirAn
into exile; Further Lakshmanan cited the example of the fish failing
to survive without water, thereby indicating that he cannot Survive
without his beloved Sri RAma PirAn. This is like how water is unto
the Fish; similarly Sri rAma Piran was unto Lakshmanan.

*But here Parankusa nAyaki says that the fish, water and herself and
all things completely depend on the bhaghavad Kunangal from emperumAn
and cannot brook separation from Him! ; *

*to be continued..**.*

Adiyaen varavaramuni dAsan,

Gopalakrishnan Gomadam Azhagiyamanavalan.

 

—————————————————————————————————————–|

Mantras

Articles

Purusha-Shuktham Paduka Sahasram
Sri_Sooktham AndalVaibhavam
Sriranga gathyam திருவாராதனக்கிரமம்
Abhideesthavam (கிரஹத்திற்கானது) :-
SriRanganathashtakam  (narrated by Shri K.Sreedharan,
Sri RanganathaStotram  moderator: namperumal.wordpress.com)
SriMahalakshmistotram  -தென்கலையார்
  -வடகலையார்
Advertisement

2 comments on “Mantras & Articles

 1. நல்லவை நானூறு—5
  ————————————
  41. கிளியும் கூண்டும் ————-!
  * கிளையைக் கூண்டில் அடைத்தால், அது எப்போது கூண்டைவிட்டு வெளியேறிச் சுதந்தரமாக ஆகாயத்தில் பறக்கலாம் என்று ஏங்குகிறது.
  ஆனால், மனிதன் அதைக் கூண்டில் அடைத்து வைத்து,அவ்வப்போது பழம் முதலியவற்றை உண்ணக் கொடுத்து,தான் பேசுவதை அதுவும் பேசக்
  கற்றுக்கொடுக்கிறான்.
  இந்தக் கிளி, ஸ்ரீரங்கத்தில் “கிளி மண்டபத்”தில் “ரங்கா—-ரங்கா—“என்று சொல்லிக்கொண்டே இருந்தால், இந்தக் கிளியைக் கொண்டாடலாம்.
  வேறு பேச்சுக்களைச் சொன்னால் கொண்டாடுவார்களா ? மாட்டார்கள்.
  ஜீவாத்மா—இதுவும் ஒரு கிளியைப்போலத்தான்.
  உடல் என்னும் கூண்டில் அடைபட்டுக் கிடக்கிறது.ஆனால், சுதந்தரமாகப்
  பறந்து செல்ல விரும்புவதில்லை. திரும்பத் திரும்ப, இந்த உடம்பு என்கிற கூண்டில் சிறைபடவே விரும்புகிறது. அது, எந்த உடலாக இருந்தால்
  என்ன ?மனுஷ்ய, ம்ருக , பறவை—இப்படி எந்த உடலாக இருந்தால் என்ன ?
  சிறைபட்டுக் கிடக்கவே விரும்புகிறது.
  ஒரு கிளி , கூண்டிலிருந்து விடுபடத் துடிக்கிறது.ஒரு கிளி கூண்டிலேயே அடைந்துகிடக்க விரும்புகிறது. ஆறு அறிவுள்ள கிளியைவிட ,அறிவு
  குறைந்த கிளி தேவலை. இதனிடமிருந்து, ஆறு அறிவுள்ள கிளி கற்றுக்கொள்ள வேண்டும். ஆறு அறிவுள்ள கிளிக்கும் இரண்டு இறக்கைகள்.
  ஞானம் , அநுஷ்டானம் என்கிற இரண்டு இறக்கைகள். இவற்றின் துணையால்,
  உடல் என்கிற கூண்டிலிருந்து விடுபடலாம். ஒருவரும் இந்தச் சிறகுகளை வெட்டப்போவதில்லை–
  42.ஆறும், ஆறுவகை நன்மையையும்——
  * 1. ஓடிவரும் ஜலத்தால்—-வெள்ளத்தால், ஆறு தன்னுடைய இருகரைகளையும் இணைத்துக் கொள்கிறது.( அதற்கு முன்பு, ஆற்று மணல் இணைத்தது)
  2.ஆற்று ஜலம், நித்ய கர்மானுஷ்டானங்களில் இழிய வைக்கிறது.
  3.ஆற்று ஜலம் குடிதண்ணீருக்கும்,குளிக்கவும்,மனிதர்கட்கும், விலங்குகட்கும் பறவைகட்கும் ,உதவுகிறது. துணிகள் துவைக்கவும் உதவுகிறது.
  4. ஆற்று ஜலம் ஏரி ,குளங்களை நிரப்புகிறது.
  5.ஆற்று ஜலம் ,கிளை வாய்க்கால்கள் வழியே ஓடி ,நெல் முதலிய பயிர்களை விளைவித்து,சகல ஜீவராசிகளுக்கும் உணவைக் கொடுக்கிறது.
  6. ஆற்று ஜலம் ,கோடையில் ஆவியாகி, மேகத்தில் சென்று , மழையாகி பூமிக்கு வந்து, ஆற்றில் மறுபடியும் வெள்ளமிடுகிறது.
  43. செடிகொடிகளில் புஷ்பங்கள்———!
  * பல செடிகளிலும் ,கொடிகளிலும் ,பலவித வர்ணங்களுடன் ,வாசனையுடன்
  புஷ்பங்கள் புஷ்பிக்கின்றன. அன்றாடம் செடிகொடிகளிளிருந்து கொய்யப்பட்டு
  (பறித்து எடுக்கப்பட்டு) மாலைதொடுப்பவர்களின் கைவண்ணத்தால், விதம்விதம்மான மாலைகளாக, அந்தப் புஷ்பங்கள் கண்ணுக்கு விருந்தாக அமைகின்றன.
  இந்த மாலைகளில் உள்ள புஷ்பங்கள், பகவானை—தாயாரை அலங்கரிக்கப் பாக்யம் செய்திருக்கின்றன.
  இன்னும் சில மாலைகளில் உள்ள புஷ்பங்கள், சுப கார்யங்களுக்கு–விவாஹம் ஸீமந்தம் போன்றவைகளுக்கு உபயோகப்பட்டு, சுபமாக அமைகின்றன.
  இன்னும் சில மாலைகளில் உள்ள புஷ்பங்கள்,—கலப்புத் திருமணங்களுக்கு உதவி,
  போலீஸ் ஸ்டேஷனிலோ ,ரிஜிஸ்திரார் ஆபீசிலோ தூக்கி எறியப்படுகின்றன.
  இன்னும் சில மாலைகளில் உள்ள புஷ்பங்கள், அந்திமக் க்ரியையில் ,சடலத்துக்குப் போய்ச் சேருகின்றன .
  அன்றாடம் பூக்கும் புஷ்பங்களும், பகவானின் அனுக்ரஹம் பெற்றிருக்கவேண்டும்.
  ஆனால், அவற்றைப் புஷ்பிக்கும் செடிகளும், கொடிகளும் புஷ்பங்களின் முடிவுக்காக வருந்துவதில்லை.
  இவற்றில், எது உசத்தி என்பது, அவரவர் மன ஓட்டத்தைப் பொறுத்தது.
  44. ஆரோக்யம் —-செல்வம்—-ஞானம் —மோக்ஷம் —–!
  * ஆரோக்யத்துக்கு ,ஸுர்யனை வணங்க வேண்டும்.(ஸுர்ய நமஸ்காரம் )
  செல்வத்துக்கு, அக்னியை வழிபடவேண்டும்
  ( ஔபாஸனம், ஸமிதாதானம் போன்ற ஹோமங்கள் )
  ஞானத்துக்கு ,மகேஸ்வரனைத் துதிக்க வேண்டும் (ருத்ரன் )
  மோக்ஷத்துக்கு ,ஜநார்த்தனனைத் துதிக்க வேண்டும்
  ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் ,ச்ரியமிச்சேத் ஹுதாசனாத் |
  ஞானம் மஹேச்வராத் இச்சேத் , மோக்ஷமிச்சேத் ஜனார்தநாத் ||
  இதனால், மோக்ஷத்துக்காகத் துதிப்பவர்களை, ஜனார்தனன் அனுக்ரஹிக்கிறார் என்றாலும், ஆரோக்யம் ,செல்வம், ஞானம் —
  இவற்றையும், கொடுத்து, மோக்ஷத்தையும் ஜனார்தனன் கொடுப்பார் என்று வைணவம் சொல்கிறது—அவன் ஒருவன் திருவடியைக்
  கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், இக சுகங்களையும் கொடுத்து, மோக்ஷத்தையும் கொடுப்பான் என்பதே உண்மை.
  45. சுற்றமும்—–நட்பும்——-
  * நமக்குச் சுற்றம்—திவ்ய தம்பதியான ,பகவானும் பிராட்டியும்தான்.
  நிரந்தரமான சுற்றம்—-அதாவது உறவு—ஒழிக்க ஒழியாத உறவு—
  நமக்கு நட்பு—-பிரமன் முதலான தேவதைகள் இந்த மாதிரியான தேவதைகளிடம் நட்பாக இருக்கலாம். பிரமன், ருத்ரன், அம்பிகை,
  இந்த்ரன் போன்ற தேவதைகளிடம் நட்பு பாராட்டலாம்—ஆனால், வைணவர்கள், உறவு கொண்டாட வேண்டியதில்லை.
  நட்பைவிட, உறவு உயர்ந்தது——
  46. தண்ணீரும், தெளிவும்——?
  * தண்ணீர்—-இது உடலில் பெரும் பங்கு வகிக்கிறது . முக்கால் பாகம் உடலில் தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
  இந்தத் தண்ணீர், நாம் கோபப்படும்போதோ, தாபப்படும்போதோ, ஆத்திரம் அடையும்போதோ, கர்வம் அடையும்போதோ அழுக்காகிறது.
  கலங்கிய நீராக ஆகிறது—-இது, தெளிவது எப்போது ?
  தினமும், கோயிலில் ஆராதனத் தீர்த்தத்தை ஸ்வீகரிக்கும்போது (அர்ச்சகர், தீர்த்தத்தை நமது உள்ளங்கையில் கொடுத்து நாம் அதைச் சாப்பிடும்போது)அந்தப் புனிதத் தீர்த்தத்தால், தெளிவடைகிறது.
  கோவிலுக்குப் போகமுடியாவிட்டாலும், தினமும் சாளக்ராம ஆராதன தீர்த்தத்தை ஸ்வீகரித்தாலும் இதே பலன்தான்.துளசிதள தீர்த்தத்தால்
  உடலில் உள்ள அழுக்கு நீர் உடனே ெளிவடையும்.இந்தத் தெளிவு,
  தெளிவான அறிவைக்கொடுக்கும்; தெளிவான ஞானத்தைக் கொடுக்கும்; அவற்றை அதிகரிக்கச் செய்யும்.
  47. நம்மிடம் இருக்கும் கல்வியையும் (ஞானத்தையும்), செல்வத்தையும், இல்லாதவர்க்கு இரக்கத்துடன் வழங்கி உதவுவது——
  * உடலில், இரண்டுவகைச் சுரப்பிகள் இருக்கின்றன.நாளமுள்ள சுரப்பி; நாளமில்லா சுரப்பி. நாளங்களில் நீர் எப்போதும் சுரந்துகொண்டே
  இருக்கின்றன.உடலில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் தோன்றி வளர்ந்துகொண்டே இருக்கின்றன.இந்த நாள நீர், அந்தக் கிருமிகளை
  அழிக்கும் வேலையைச் செய்கிறது . இடைவிடாது செய்துகொண்டே இருக்கிறது .ஆதலால், உடலில் நோய் தாக்குவது இல்லை. இதைத்தான்
  நோய் எதிர்ப்பு சக்தி என்கிறார்கள். சத்வ குணம் உள்ளவன், பிறர் கஷ்டத்துக்காக வருந்தும்போதும், அவர்களுக்கு உதவும்போதும் , தான தர்மம் செய்யும்போதும், இந்த நாளங்களில் சுரக்கும் நீர் அப்போதும் ,கிருமிகளை அழிக்கிறது.
  இவனே கோபப்பட்டு (ராஜஸ குணம்) கொந்தளித்து, வார்த்தைகளாலோ, கை,கால்களாலோ கோபத்தை வெளிப்படுத்தும்போது, நாளங்கள் ,நீரைச் சுரப்பதை நிறுத்துகின்றன.அப்போது, உடலில் கிருமிகள் வளருகின்றன.
  மன அழுத்தம், சர்க்கரைநோய், புற்றுநோய் போன்ற நோய்களால் உடல் தாக்கப்படுகிறது.
  திருமூலர் சொல்கிறார்:—
  உள்ளத்தின் உள்ளே உள்ள பல தீர்த்தங்கள்
  மெள்ளக் குடைந்து நின்று ஆடார்—-வினைகெட
  பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
  கள்ள மனமுடையர் கல்வி இலாரே
  ஆதலால், நம்மிடம் உள்ள ஞானம் செல்வம் இவற்றை இல்லாதவர்க்கு இரக்கத்துடன் அளித்து உதவுதல் நன்று—இல்லையெனில், நம்மை
  வறுமையும் நோயும் நாடி வரும்
  48. பழைய வஸ்த்ரங்களும்,புது வஸ்த்ரங்களும் ——-?
  * சுபமாகச் செய்யும் கார்யங்களில் “கடஸ்தாபனம்” செய்து,அதில் தீர்த்தத்தைச் சேர்த்து, மந்த்ரங்களால் ஜபித்து, பிறகு அந்தக் கடத்தில்
  ( குடம்)உள்ள தீர்த்தத்தை சிரஸ்ஸில் அபிஷேகம்
  செய்துகொள்ளும்போது, அதுவரை உடுத்தியிருந்த புது
  வஸ்த்ரமோ அல்லது நல்ல வஸ்த்ரமோ ,அவற்றைக்
  களைந்துவிட்டு, பழைய வஸ்த்ரங்களை உடுத்திக்கொள்கிறோம் மந்த்ரங்களால் ஜபிக்கப்பட்ட தீர்த்தத்தில் நனையும் பாக்யம்
  பழைய வஸ்த்ரங்களுக்கே கிடைக்கிறது.; அதுவரை உடுத்தியிருந்த புது வஸ்தரங்களுக்கு இல்லை.
  பகவானுக்குத் திருமஞ்சனம் செய்யும்போது, அணிவித்திருக்கும் வஸ்தரங்கள் , திருமஞ்சனம் முடிந்தபிறகு, பீதகவாடைத் தீர்த்தமாக விநியோகிக்கப்படுகிறது. (ஈரவாடைத் தீர்த்தம் )
  அதை ஸ்வீகரிப்பவர்கள் , என்ன பாக்யம் —-என்ன பாக்யம் என்று கொண்டாடிக்கொண்டே ஸ்வீகரிப்பர்
  49. தர்மங்கள், தள்ளிப்போடுவதா ?
  * தர்ம கார்யங்களை ,தர்மம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் தோன்றியவுடனே செய்துவிடவேண்டும்.
  ஏன், என்பதை நாலடியார் (செய்யுள் 29 ) சொல்கிறது.
  புல்நுனிமேல் நீர்போல், நிலையாமை என்றெண்ணி
  இன்னினியே செய்க அறவினை–இன்னினிலே
  நின்றான், இருந்தான், கிடந்தான் , தன்கேள் அறச்
  சென்றான் எனப்படுதலால்.
  ” சற்று நேரத்துக்கு முன்பு நின்றுகொண்டிருந்தான்; பிறகு அமர்ந்தான்; பிறகு படுத்தான் ; சிறிது நேரத்தில், தன் உறவினர்கள் கதறி அழ, இறந்துபோனான்.” என்று , உயிர் இவ்வுலகில் வாழும் அவலநிலை
  எல்லாருக்கும் தெரிகிறது. பனித்துளிபோல் நிலையில்லாதது இந்த வாழ்க்கை .காலையில், சூர்யன் உதிப்பதற்கு முன்பு ,புல்நுனிமீது
  அமர்ந்திருக்கும் நீர்த்துளி, சூர்ய ஒளி பட்டவுடன் அழிகிறது. அதைப்போலவே, சடக்கென முறித்துப்போடும் வாழ்க்கை இது.
  ஆதலால், உயிர் உடலில் உள்ளபோதே தர்ம கார்யங்களைச் செய்யவேண்டும். அந்த எண்ணம் தோன்றியவுடனே செய்யவேண்டும்.
  50. நின்றான்–இருந்தான்–கிடந்தான்—சென்றான் —-?
  நின்றான்–இருந்தான்–கிடந்தான் –செல்லவில்லை —-?
  * நின்றான்–இருந்தான்–கிடந்தான்—
  உடல்பெற்றவன் முதலில் தவழ்ந்து, பிறகு நின்றான்; வயதானபிறகு, நிற்கமுடியாமல் இருந்தான்–உட்கார்ந்தான்; இன்னும் வயோதிகம்
  வந்தவுடன்–உட்காரவும் முடியாமல், ,கிடந்தான்; படுக்கையில் படுத்தான். நோய் வந்தது; சென்றான், உயிர் பிரிந்து சென்றான்.
  உயிர் எங்கோ சென்றது —-உடல் மண்ணில் அடக்கமானது அல்லது தீக்கிரையானது.——————-இது மனுஷ்யன்
  இன்னொன்று—-
  நின்றான்——வைகுந்தத்தில், நித்யசூரிகளும் முக்தர்களும் அனவரதமும் தோத்தரிக்கும் பகவான், சேதனர்களான நம்மைக் கடைத்தேற்ற,இவ்வுலகில்
  திவ்ய தேசந்தோறும் அர்ச்சாவதாரமாக நின்றான்.
  நின்று, நின்று பார்த்தும் சேதனர்கள் ,”உண்டியே—உடையே–“என்று உழல்வதால், இவர்களை, வைகுந்தத்துக்கு ஏற்றவேண்டுமென்கிற பரம கருணையால் இருந்தான்; பல திவ்ய தேசங்களில் அமர்ந்த திருக்கோலத்தில் ஸேவை சாதிக்கிறான். அப்படியும் சேதனர்கள் திமிறி ஓடுகிறார்கள் .
  இவர்களை அழைத்துக்கொண்டுதான் வைகுந்தம் புகவேண்டும் என்கிற றுதியில், கிடந்தான்—-சயன திருக்கோலத்தில் பல திவ்ய தேசங்களில்
  ஸேவிக்கலாம். அர்ச்சாவதார எம்பெருமான், திவ்ய தேசம்தோறும் நின்று—-இருந்து—–கிடந்து—–இருக்கிறானே தவிர,” நமக்கென்ன வந்தது–இந்த
  சேதனர்கள் எக்கேடுகேட்டுப்போகட்டும்” என்று சென்றுவிடவில்லை
  இதை அறிந்து, நின்றும் இருந்தும் கிடந்தும் ஸேவை சாதிக்கிற எம்பெருமானின்
  சரணார விந்தங்களைப் பற்றவேண்டும்
  அற்றது பற்று எனில், உற்றது வீடு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s