Gopurapatti

//ஸ்ரீ://

கோபுரப்பட்டி ஸ்ரீ ஆதிநாயகி ஸமேத ஸ்ரீ ஆதிநாயகர் பெருமாள் ஸந்நிதி, அழகிய மணவாளம் PO., மண்ணச்சநல்லுார் தாலுக்கா. திருச்சி

வைணவம் வளர்த்த ஊர்..!

1323ம் ஆண்டு வீர வல்லாளன் என்னும் ஹொய்சாள மனனனால் குடமுழுக்குச் செய்விக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் போன்றதொரு நிர்மாணம்..! இந்த பெருமாளும் தெற்குப் பார்த்த சயனம்..! பெருவள வாய்க்கால், கம்பலாறு எனும் இரு காவிரி நதி பாயும் வாய்க்கால்கள் நடுவே அமைந்த ஊர்..!

1324 – மாலிக்காபூர் திருவரங்கத்தின் மீது படையெடுத்து 12000 வைணவர்களின் தலையினை கொய்து பெருங்கொலை செய்துள்ளான்..! சுமார் 750 வைணவர்கள் மட்டும் “கந்தாடை தோழப்பர்” என்பார் தலைமையில் இந்த ஊரில் தஞ்சம் புகுந்து இந்த அரங்கனை ஸ்ரீரங்கம் போன்று கொண்டாடியுள்ளனர்..! ஸ்ரீரங்கத்தில் இறந்தோர் அனைவருக்கும் நீத்தார் கடன்களை பெருவள வாய்க்காலின் கரையில் செய்துள்ளனர்..! இந்த சடங்கினை இன்று வரை இந்த கிராமத்து மக்கள் பிரதி வருடந்தோறும் ஆடி அமாவாஸை அன்று, பெருவள வாய்க்காலின் கரையில், செய்து வருகின்றனர்..! நம்பெருமாள் , அழகிய மணவாளம், கோபுரப்பட்டி ஆகிய ஊர்களில் தங்கியிருந்து, அஙகிருந்து மதுரைக்குத் தப்பிச் சென்றுள்ளார்..! திரும்ப 1371ம் ஆண்டு கோபண்ணா தலைமையில் திரும்ப ஸ்ரீரங்கத்திற்கு பெரும் படையுடன் திரும்பிய போது, இந்த ஊர் மக்கள் ஸ்ரீரங்கம் சென்று தயிர் விற்பவர்கள் போன்றும், வணிகர்கள் போன்றும் மாறுவேடத்தில் உளவறிந்து வந்திருக்கின்றனர்..! இநத ஊரின் வழியே, இங்கெல்லாம் தஙகி உபசாரங்கள் கண்டருளியபடி, திருவரங்கம் திரும்பியுள்ளார் திருவரங்கன்..! எஞ்சியிருந்த வைணவர்களைக் காத்த ஊர்..! வைணவம் வளர்த்த ஊர்..!

வீர வல்லாளன் பெரும் வீரன்..! அசகாய தீரன்..! அரங்கனின் பக்தன்..! மொகலாயர்களிடம் அஞ்சாத நெஞ்சுரத்துடன் போர் புரிந்துள்ளான்..! இவர்களை ஓட ஓட விரட்டியுள்ளான்..! மதுரை வரை சென்று போரிட்டு மாய்ந்து்ள்ளான்..! மதுரை மதில் சுவரில் இவன் உடம்பை பதப்படுத்தி மாலிக்காபூர் படையினர் தொங்கவிட்டுள்ளனர்..! இவன் போர் புரிந்த போது இவனது வயது 86..!

இத்தகைய பெருமைகள் வாய்ந்த கோபுரப்பட்டி 2010ம் ஆண்டு பழமை மாறாமல் புனுருத்தாரணம் செய்விக்கப்பட்டு, தற்சமயம் முத்தங்கியுடன் பழமையான மூலவர், புதுப் பொலிவுடன் சேவை சாதிக்கின்றார்..!

எப்படிச் சென்றாலும் ஸ்ரீரங்கத்திலிருந்து 15 கி.மீ க்குள் ஊர் வந்து விடும்..! அடியார்களை காத்த இவ்வரங்கனையும் தரிசிப்போம் வாருஙகள்..! தாஸன் – முரளீ பட்டர்

 ——————————————
கோபுரப்பட்டியில் பங்குனி உத்திரம்.. 21.03.19
Image may contain: 1 person, indoor
—————————————————–
கோபுரப்பட்டிப் பெருமாள்..!ஏகாதசி திருமஞ்சனம் கண்டருளிய பிறகு..! – 17.03.19
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/53850210_2119592951427277_6433221282619195392_n.jpg?_nc_cat=102&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=22cb8f762bcb2a09851d6e06bd1094e0&oe=5D02DDA6
கோபுரப்பட்டி பெருமாள் – புதிய சேஷ வாஹனத்தில் – 12.10.13
 For pictures. Please click the following link:
================================================

Gopurapatti – Garuda Vahana Purapaddu 5.10.2013

For pictures, please click the following link:
============================================================

Panguni Uthiram at Gopurapatti – 26.03.2013

For pictures, please click the following link 

https://picasaweb.google.com/111085385486355286722/GopurapattiPanguniUthiraUtsavam26032013

KalyanaUtsavam@Gopurapatti on

25.1.2013

FOR PICTURES, PLEASE CLICK HERE:

https://picasaweb.google.com/102169178831268784829/KalyanaUtsavamGopurapattiOn2512013#

——————————————————————————–

கோபுரப்பட்டி வளர்ந்த கதை…!

வளர்ச்சி-15  29.6.2011

(கோபுரபபட்டி தாயார் – மூலவர்)

ஸ்ரீ குணரத்னகோசத்தில் பட்டர் தாயாரைப் பார்த்து ஒரு ஸ்லோகத்தில்

”ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:

பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய். இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே! நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி, நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய். இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

விளக்கம் – இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் – இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா? நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.”

-(நன்றி  திரு ஸ்ரீதரன் www.namperumal.com)

என்று வர்ணிககின்றார்.  இந்த வர்ணனை அடியோங்களைப் பொறுத்தவரை

முழுவதும் உண்மையாக ஆனது.  எந்தவித மூலதனமும் இன்றி தாயாரின் கடாக்ஷம் ஒன்றே பெருந்தனமாகக் கொண்டு ஆரம்பித்த இந்த கோபுரப்பட்டியின் கைங்கர்யத்தில் தாயாரின் அற்புதமான கடாக்ஷம் எழுத்தால் விவரிக்க இயலாதது.

இங்கு விக்ரஹரூபத்தில் பெருமாளைக் கூட விட்டுவிட்டு தாம் மட்டும் தனியே சென்னைக்குப் பயணித்தாள்.   அங்கு உருப்பட்டூர் திரு.சௌந்திரராஜ ஸ்வாமியின் இல்லத்தில் சுமார் ஒரு வருடகாலம் அதியற்புதமாய் ஆராதிக்கப்பட்டாள்.  சென்னையிலும், ஏன் உலகமெங்கும் தாயாரின் கடாக்ஷமும், கோபுரப்பட்டியின் கைங்கர்யமும் பரவலாயிற்று.  கோபுரப்பட்டியினையும்,  தாயாரையும் பட்டித்தொட்டிகளில் எல்லாம்

பரக்கப் பேசவைத்தவர் உருபட்டூர் ஸ்வாமி அவர்கள்.  தாயார் அவரது இல்லத்தில் ஒரு மூத்த உறுப்பினராகவே ஆனாள்.

அங்கிருந்தபடி கோபுரப்பட்டியின் கைங்கர்யத்திற்கு அவர் ஒப்புக்கொண்டதைவிட இருமடங்கிற்கும் அதிகமாகவே செல்வம் சேர்த்தாள்.

இதைத்தவிர நிறைய வஸ்திரங்கள், நகைகள, பூஜா பாத்திரங்களும் கோபுரப்பட்டிக்குச் சேர்ததாள்.

பிரதிஷ்டை ஏதும் ஆகாமலிருந்தபோதே தாயாரின் கருணையும், லிலைகளும் அபாரமாய் இருந்தது.  நிறையபேர்களின் வேண்டுதல் நிறைவேறியது.  எங்களின் பெரும்பாரமும் தீர்ந்தது.  ஆம்..!  தாயார் ஸந்நிதி பணி நிறைவேறி மீதமுள்ள பணம் பெருமாள் ஸந்நிதி நிர்மாணத்திற்கும் பயன்பட்டது..!

-தொடரும்..!

இதன் முற்பகுதிகளைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

======================================================================

ஸ்ரீ ஆதிநாயகப் பெருமாள் ஸந்நிதி

கோபுரப்பட்டி

ஆவணி மாதம் 10ம் நாள்

27.08.2011

காலை 8.45 மணிக்கு மேல் 11.00 மணிக்குள்

ஸம்வத்ராபிஷேகம்

மற்றும்

துவாரபாலகர்கள், கருடன் ஸந்நிதி விமானம்

லகு ஸம்ப்ரோக்ஷணம்.

https://picasaweb.google.com/102169178831268784829/20110827SamvathsaraAbishekamGarudanSannidhiDwaraBalakaLaguProkshanam

மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை

திருக்கல்யாண உற்சவம்.

https://picasaweb.google.com/102169178831268784829/20110827ThirukalyanaUtsavam

இரவு 07.00 மணிக்கு மேல்

கருடவாஹனத்தில் ஆதிநாயகர் புறப்பாடு.

https://picasaweb.google.com/102169178831268784829/GarudaVahanam02

தொடர்புக்கு  +91 99442-82827 , +91 96008-57179, +91 99654-02405 மற்றும் +91 98654-76530

======================================================================

Gopurapatti in ‘The Hindu’ (a leading  News Magazine)

Please Click the link below.

http://www.hinduonnet.com/fr/2010/10/22/stories/2010102250770300.htm

இதன் முந்தைய பகுதியினைக் காண…

கோபுரப்பட்டிப் பிரதிஷ்டைக்குப் பின் பெருமாள் இரண்டு முறை கருடவாகனத்தில் எழுந்தருளி அனுக்ரஹித்துள்ளார்.  இந்த கருடவாகனம் அமைய உதவிய அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  கருடவாகனத்திற்கு உதவிய அன்பர்கள் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.  அவர்களுக்குக் கூடிய விரைவில் அரங்கனின் அருட்பிரஸாதமும் அவர்கள் செலுததிய பணத்திற்கான ரசீதும் அனுப்பி வைக்கப்படும்.  நன்றி..!

1) Saravana Prabu
saravanaprabu.dr@gmail.com

2)kasankar13 <kasankar13@gmail.com>

3)K.Veeraraghavan krishnaswamy <kvr210@hotmail.com>

4)Sowbhagyalakshmi Bharati <nammalvar2001@yahoo.co.in>

5)k.seshadri
ushaseshadri.
ushii22@rediffmail.com

6)Rangaswamy Ramaswamy Iyngar
Phone: 944390298 land line 0431-4345298
E-mail: rangalaw@gmail.com

7)Sri Rajadesikan & friends.

8) Krishnakanth

14.10.2010 – கோபுரப்பட்டி ஸ்ரீஆதிநாயகர் ஸந்நிதி

மண்டலாபிஷேகம் பூர்த்தி தின விழா

காலை  08.00 மணிக்கு ஹோமாதிகள்

https://picasaweb.google.com/102169178831268784829/20101014MandalaAbishekamHomams

காலை 11.00 மணிக்குத் திருமஞ்சனம்

https://picasaweb.google.com/102169178831268784829/20101014MandalaAbishekamPoorthi

மாலை 04.00 மணியளவில் திருக்கல்யாண உற்சவம்

https://picasaweb.google.com/102169178831268784829/20101014ThirruKalyanaUtsavamOnTheEveOfMandalaAbishekam

இரவு 07.00 மணிக்கு கருடவாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு.

https://picasaweb.google.com/102169178831268784829/20101014GarudaVahanamEveningDuringMandalaAbishekam

=====================================================================

FOR FURTHER DETAILS PLEASE CLICK HERE

GOPURAPATTI PRATHISHTAI THINA PATHIRIGAI

GOPURAPATTI PRATHISHTAI THINAM 2ND YEAR UTSAVAM –  THIRUMANJANAM – 27.08.12

FOR PICTURES PLEASE CLICK HERE

https://plus.google.com/u/0/photos/album/113864132662294287186/5782079302231517889#photos/113864132662294287186/albums/5782079302231517889

GO-PUJA AT GOPURAPATTI ON 26.08.12

Photo

FOR PICTURES PLEASE CLICK HERE

http://www.facebook.com/media/set/?set=a.398233423563247.103555.100001297782832&type=1&l=01df1089ab

Thirukarthikai Deepam at Gopurapatti – 28.11.12

The following link gives photos taken at Gopurapatti during Thirukarthikai kondattam

https://picasaweb.google.com/102169178831268784829/ThirukarthigaiDeepamGopurapatti2811201202?feat=content_notification#

கோபுரப்பட்டி பற்றிய மேலும் விவரங்களுக்கு

For more news on Gopurapatti  please click here

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s