ஸ்ரீ:
Pictures/articles published in Events Today page earlier have been moved to this page.
2018
இன்று மார்கழி கேட்டை – ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார திருநக்ஷத்ரம்
தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹணியம்
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே
மண்டங்குடியென்பர் மாமறையோர்மன்னியசீர்த்
தொண்டரடிபொடி தொன்னகரம்-வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானை பள்ளி யுணர்த்தும் பிரானுதித்த வூர்.
மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர் !*
என்னிதனுக் கேற்ற மெனி லுஉரைக்கேன் * – துன்னுபுகழ்
மாமறையோன் தொண்டரடிப்பொடி யாழ்வார் பிறப்பால் *
நான்மறையோர் கொண்டாடும் நாள் .
தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழி திருநாமம் : –
மண்டங்குடி அதனை வாழ்வித்தான் வாழியே *
மார்கழியில் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே *
தெண்திரை சூழ் அரங்கரையே தெய்வமென்றான் வாழியே *
திருமாலை ஒண்பதஞ்சும் செப்பினான் வாழியே *
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்துரைத்தான் வாழியே *
பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே *
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே *
தொண்டரடிப்பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே *
Day 01 – Vaikunda Yekadasi – 18/12/18
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
Kindly click the following link for photos :
====================================================
The following link gives vaibhavam of Vaikunda Yekadasi Utsavam :
SRIRANGAM ATHYAYANA UTSAVA VAIBHAVAM – KOIL ATHAN FILE
Kindly click the following link for articles, photos published during Namperumal Thiruadyayana utsavam last year (2017)
https://srirangapankajam.com/gallery/
நாச்சியார் திருக்கோலம் – 17.12.18
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
வரும் 17.12.2018 அன்று நம்பெருமாள் மோஹினி அலங்காரம்..!
எம்பெருமான் உறங்கும் சமயம் “முரன்“ என்னும் ஒரு அசுரன் அவரை அழிக்கவருகின்றான். அப்போது எம்பெருமானின் திருமேனியிலிருந்து ஒரு சக்தி வெளிப்பட்டு அவனை அழித்தது. அந்த சக்திதான் “மோஹினி அவதாரம்“.
தேவர்களை ரட்சிக்க அவர்களுக்கு அமுது கிடைக்க எடுத்த அவதாரமும் மோஹினி அவதாரமே.
ஆக தன்னை ரட்சித்துக்கொள்ளவும், தேவர்களை ரட்சிப்பதற்காகவும் எடுத்த ரட்சணத்தின் வடிவம்தான் “மோஹினி அவதாரம்“. இன்று நம்மையெல்லாம் ரட்சித்து நமக்கும் வைகுண்ட பேறு உய்ய, அரங்கன் மோஹினி அவதாரத்தில் காட்சித் தருகின்றான்.
என்னைப் பொறுத்தவரை “மோஹினி அவதாரம்“ என்ற வார்த்தையினை விட “நாச்சியார் திருக்கோலம்“ என்ற வார்த்தைதான் மிக மிகப் பொருத்தமானது..!
அரங்கன் தாம் பூண்ட இத்திருக்கோலம் கண்டு மிக்க பூரிப்பு..! பராசர பட்டர் வருகின்றார்..! தாயாரின் மூக்குத்தி,..! தாண்டா வைத்து பின்னிய கூந்தலங்காரம்..! திருமார்பினில் பவழ மாலை, இரட்டை முத்துச்சரம், திருமாங்கல்யம்..! எல்லாம் பொலிவுடன் மிளிர நாச்சியார் திருக்கோலத்தில் பரிமளிக்கின்றார்.!
”பட்டரே..! எப்படி இருக்கின்றேன்.? ” – அரங்கன் வினவுகின்றார்..!
தாயார் கோலத்தில் அரங்கனைக் கண்ட பட்டர் கண்குளிர நமஸ்கரிக்கின்றார்..!
“நாயன்தே..! அற்புதம் அடியேன்..! ஆனாலும் ஒரு சிறு குறை..!” என்கிறார்..!
எனன குறை கண்டாய் பட்டரே..?
”எவ்வளவுதான் கனகச்சிதமாக இந்த திருக்கோலம் அமைந்தாலும், தாயாரின் திருக்கண்களில் காணப்படும் காருண்யம், வாத்ஸல்யம் இல்லையே ப்ரபோ..!” என்கிறார் அனுதினமும் தாயாரை போற்றி, தம் சிந்தையில் ஏற்றி வழிப்பட்ட பட்டர்..!
அபரிமித வாத்ஸல்யத்தோடு தாயார் – அடைக்கலம் புகுந்தார்க்கு “அஞ்சேல்” என்று அபயமளிக்கும், தஞ்சமளிக்கும் அரங்கன்..! இந்த திவ்யதம்பதிகளிருக்க இனி நமக்கு குறையேது..? இனியொரு பிறவியேது..?
அன்பு என்னும் ஆறு பெருக்கெடுத்து ஓடும் போது தாய்மை என்னும் பண்பு பூர்ணம் பெறுகின்றது…!
இந்த திருநாள் முழுவதுமே அரங்கன், ஆழ்வார்களின் அன்பு மற்றும் அனுபவ பெருக்காகிய தீந்தமிழ் பாசுரங்களைக் கேட்ட வண்ணம் இருப்பான்..! ஆழ்வார்கள் மீதும், அவர்கள் வழி வந்து வணங்கும் அவர்களது அடியார்கள் மீதும் அவனது கருணை ஒரு தாயின் பரிவோடு பெருக்கெடுத்து ஓடும் தருணமிது..!
அவன் இன்று “அரங்கத்தம்மா…!” ஆகின்றான்..! ஆம்..! ஓப்பில்லா நாச்சியார் திருக்கோலம் ஆகின்றான்..! ஆயர் குலத் தலைவனாம் இந்த அரங்கத்தம்மாவின் சரண் புகுவோம்…! உய்வடைவோம்…!
நன்றியுடன் …. -முரளீ பட்டர்- 13.12.18
————————————————————————-
”வைகுண்ட ஏகாதசி” – 18/12/18 (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணா அவர்கள் ஏகாதசி விரதத்தினைப் பற்றி பல புராணங்கள், சாஸ்திரங்களிலிருந்து தமது “ஸ்ரீபாகவத தர்ம சாஸ்திரம்“ என்னும் நூலில் விரிவாகக் கூறியுள்ளார். அவரது திருவடிகளை மனதினால் வணங்கி, வைகுண்ட ஏகாதசி சம்பந்தமான சில செய்திகளைக் காண்போம்.
மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் கேசவனை ஆராதித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். பிரும்மஹத்தி தோஷம் கூட விலகும் – பாத்ம புராணம்-
இப்போது ஏகாதசி நிர்ணயம் பற்றிய சர்ச்சைகள் பல ஏற்படுகின்றன. இந்த ஏகாதசி நிர்ணயம் பற்றி சில வரிகள்..!
கங்காஜலம் பவித்ரமாயினும், கள்ளு கலந்துவிட்டால் அசுத்தமே. பஞ்சகவ்யம் பவித்ரமாயினும் நாய் முகர்ந்தால் அசுத்தமே. அதுபோன்று இரண்டு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசியில் தசமி கலந்தால் அதை விட்டுவிடவேண்டும். தசமி கலந்த ஏகாதசி அஸூர ப்ரீதி – ப்ருஹன் நாராயணீயம் –
தசமி கலந்த ஏகாதசி அசுரர்களுக்கு ஆயுளும் பலமும் தரும். இந்த ஏகாதசி விரதம் பகவானுக்குப் பிடிக்காது. – பாத்ம புராணம்-
தசமி ஒரு வினாடி இருந்தாலும், அந்த ஏகாதசி ஆகாது. பல கேடுகளை விளைவிக்கும் – ப்ரம்ம வைவர்த்தம்-
உதயத்திற்கு முன்பே தசமி வேதையிருந்தாலும் ஏகாதசியினை விட்டு விட வேண்டும் -கருட புராணம்-
ஆக எக்காரணம் கொண்டும் ஏகாதசியன்று தசமி திதி கலக்கக்கூடாது. சூர்யோதயத்திற்கு முன்பு வரும் பிரும்ஹமுகூர்த்த காலத்தில் தசமியிருந்தாலும் கூடாது. (சூர்யோதயம் முன்பு நான்கு நாழிகைகள் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) பிரும்ஹமுகூர்த்தக் காலம்).
தாஸன்
– முரளீபட்டர்-9.12.2018
வைகுண்ட ஏகாதசி-02
(Murali Battar)
இந்த உற்சவமானது, ஸ்ரீமந் நாதமுனிகளின் காலத்தில்தான் இருபது நாட்கள் உற்சவமாக விரிவானது. பகல் பத்து , இராப்பத்து எனப் பிரிந்து பகல்பத்து திருமொழித் திருநாளாக இதர ஆழ்வார்களின் பாசுரங்களும், இராப்பத்து திருவாய்மொழித் திருநாளாகவும் விரிவு பெற்றது.
நாதமுனிகள்தான் அரையர் வம்சத்தின் முதல் அரையர். அவர் தமது மருமகன்கள் மேலை அகத்தாழ்வார், கீழை அகத்தாழ்வார் ஆகிய இருவருக்கும் இந்த “அரையர் இசை மற்றும் நாட்டியம்“ முதலானவற்றைத் தெளிவாகக் கற்றுத் தந்து அரையர்களின் கொண்டாட்டத்தினைத் தோற்றுவித்தார்.
அரையர்கள் நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கு வியாக்யானம் முதலானவற்றிக்கு “தம்பிரான் படி“ என்னும் பழங்கால ஈட்டினைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தம்பிரானைப் பற்றிய விவரங்கள் ஏதும் இன்னமும் அடியேனுக்குத் தெரியவில்லை..!
ஒருமுறை நம்பெருமாள் விக்ரஹம் கொள்ளையடிக்கப்பட்டு டில்லி பாதுஷா வசம் சென்றபோது, அரையர்கள்தாம் அரங்கனுக்காக அந்த முகலாய மன்னரிடம் “ஜக்கணி“ என்னும் நடனம் ஆடிப்பாடி அவனை மகிழ்வித்து நம்பெருமாளை மீட்டதாக வரலாறு.
ஆளவநதார் தம் ஐந்து சீடர்களை, தமக்குப் பின்னால், ஸ்ரீரங்கஸ்ரீயை நிர்வஹிக்கவரும் எமபெருமானாருக்கு உபதேசிக்க நியமித்தார்..!
(1) பெரியநம்பிகள் — உடையவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்தார்
(2) திருக்கோஷ்டியூர் நம்பி — திருமந்த்ரம் மற்றும் சரம ஸ்லோகம் அர்த்தங்கள் கற்பித்தார்
(3) பெரிய திருமலை நம்பி — இராமாயணம் போதித்தார்
(4) திருமலை ஆண்டான் — திருவாய்மொழி உபதேசித்தார்
(5) திருவரங்கப் பெருமாளரையர் — அருளிச்செயல்கள், ஆச்சார்ய நிஷ்டை, மற்றும் பல அர்த்த விசேஷங்களை்த் தெளிவுடன் தெரிவித்துருளினார்..!
திருப்பாற்கடலில் உறையும் எம்பெருமானே, ஆச்சார்யர்களாக அவதரித்துள்ளனர் என்று உடையவர் உணர்ந்தார். உலகிற்கும் தாம் செய்த கைங்கர்யங்கள் மூலம் உணர்த்தினார்..!
நம்பிள்ளை, ஈடு வியாக்யானம் செய்கையில், “பாலேய் தமிழர் இசைக்காரர்” (திருவாய்மொழி 1-5-11) என்ற பதத்தினை விளக்குகையில், ”இசைக்காரர் என்றால் திருவரங்கப்பெருமாளரையர் என்பர் ஆழ்வான்” என்று விவரித்தார்..! திருவரங்கப்பெருமாளரையர், பாசுரங்கள் பாடும் போது, எத்துணை ரம்யமாகயிருக்கும் என்பதனை இதன் மூலம் அறியலாம்..!
திருவரங்கப் பெருமாளரையர் என்னும் அரையர் பெருந்தகையினிடத்து, ஸ்வாமி இராமானுஜர் கற்றது ஏராளம்..! இந்த அரையர் ஸ்வாமிக்கு ஸ்வாமி இராமனுஜர் எண்ணை தேய்த்து விட்டிருக்கின்றார். வெந்நீர் வைத்துக் கொடுத்திருக்கிறார்..! பல கைங்கர்யங்கள் செய்து கற்றிருக்கின்றார்…!
அரையர்களின் கைங்கர்யம் ஏராளம்..! அரங்கனுடைய பூர்ணமான அன்புக்குப் பாத்திரமானவர்கள் அரையர்கள்..! இந்தத் திருநாள் முழுவதுமே அரையர்களது கொண்டாட்டமும், அரங்கனது திகட்டாதக் கோலங்களும், மாயங்களும்தான்…!
தாஸன் -முரளீ பட்டர்- 10.12.18
வைகுண்ட ஏகாதசி எனும் அத்யயன உற்சவம்
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
எனது இனிய நண்பரும், பாஞ்சராத்ரத்திற்காகவே வாழும் தேரேழுந்துார் ஸ்ரீராமன் பட்டாச்சார்யரின் திருக்குமாரன் ஸ்ரீ ஸ்ரீராமன் பாலாஜி, தம் தந்தைப் போன்று, பாஞ்சராத்ரம் பற்றிய பல அரிய தகவல்களை வெளியிட்டும், பாஞ்சராத்ர சதஸ்களில் தம் தந்தைக்கு அரிய முறையில் கைங்கர்யமும் செய்து வருகின்றார்..! அவருக்கும் அவர் தந்தைக்கும், ஒரு பல்லாண்டு பாடி, வைகுண்ட ஏகாதசி பெருமைப் பற்றி மேலும் காண்போம்..!
முதலில் இதற்கு ஏன் “அதயயன உற்சவம்“ என்று பெயர் வந்தது..?
“அத்யயனம்“ என்றால் சொல்லுதல் என்று பொருள்..! “அனத்யயனம்“ என்றால் சொல்லாமலிருத்தல்..! பாஞ்சராத்ர ஆகமம், பல உற்சவங்களை, அததற்குரிய காலத்தில் செய்யச்சொல்கின்றது..! அதில் மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று ஆரம்பித்து, பத்து நாட்கள், “வேத அத்யயனம்“ செய்யச் சொலகின்றது..! இது போன்று சயனத்திற்கு ஏன் ஊடல் குறித்துககூட ஒரு உற்சவத்தினைப் பரிந்துரைக்கின்றது..! இந்த ஊடல் உற்சவம்தான் பங்குனி மாத பிருமமோற்சவத்தில் மட்டையடி உற்சவமாக நடைபெறுகின்றது..! இதுப்பற்றி தனியே பின்பு காண்போம்..! இந்த வேத அதயயன உற்சவமானது, திருமங்கையாழ்வார் காலம் வரையில் வேதத்திற்கு ஏற்பட்ட உற்சவமாகத்தான் நடந்து வந்தது..! திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரின் திருவாய்மொழி உற்சவமாக, சுக்லபட்ச ஏகாதசி தொடங்கி பத்துநாட்கள், இந்த உற்சவத்தினை அரங்கனருளுால் மாற்றியமைத்தார்..! வெகுகாலம் வரை ஆழ்வார் திருநகரியிலிருந்து, ஸ்ரீரங்கம் கோயில் பரிஜனங்களோடு, வேதபாராயணம், திவ்யபிரபந்தத்தோடு, நம்மாழ்வார் எழுந்தருளுவார்..! அந்த சமயம், சில முக்ய கைங்கர்யபரர்களைத் தவிர, யாருமில்லாததால், வேத பாராயணம் போன்ற கைங்கர்யங்கள் நடைபெறவியலாததால், கைசிக ஏகாதசி தொடங்கி, நம்மாழ்வார் இங்கு எழுந்தருளும் காலம் வரை “அனத்யயன” காலம் ஆனது..! இந்த ஸம்பிரதாயங்களை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக இம்மாதிரி பல நிகழ்வுகள் இன்னமும் ஸ்ரீரங்கத்தில் நடைமுறையிலிருந்து வருகின்றது..!
நாதமுனிகள் காலத்தில், நாதமுனிகள் இவ்வைபவத்தினை, பகல் பத்து, இராப்பத்து, என இரண்டாக பிரித்து, பகல் பத்தில் நம்மாழ்வார் தவிர்த்த இதர ஆழ்வார்களின் பாசுரங்களை “திருமொழித் திருநாளா”கவும், இராப்பத்தினை “திருவாய்மொழி”த் திருநாளாகவும், தம் மருமகன்களான மேல அகத்தாழ்வார், கீழை அகத்தவார்களுக்கு இயல், இசை, நாடகமாக, திவ்யபிரபந்தங்களுக்கு மெருகூட்டி, திறம்பட போதித்து அரையர் ஸேவைக்கு ஆதாரமானார்..! அன்றுந்தொட்டு இன்று வரை இவ்வைபவம் சிறப்புற, வேதம் தமிழ் செய்த மாறனுக்கு பொலிவு தரும் வைபவமாக “நம்மாழ்வார் மோட்ச“த்துடன் இனிதே தொடர்ந்து நடந்து வருகின்றது..!
இவ்வைபவத்தில் அரங்கனுக்கு, ஆழ்வார் மீதும் அவர்கள் பாடிய தீந்தமிழ் பாசுர்ங்கள் மீதும் கொண்ட பாசம் அபரிமிதமானது..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவம்தான் நெடிய உற்சவம்..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவ காலத்தில், அரங்கன் தம்மை அலங்கரித்துக் கொள்வதிலும், ஆழ்வார் பின்னே அலைந்து திரிவதிலும் அதிக நாட்டமுடையவனாக உள்ளான்..! இந்த உற்சவத்தில் அவனது தேஜஸ், காந்தி, கீர்த்தி, தயை மிக மிக அதிகம்..!
சூரிய குல வம்ச அரசர்கள் (கட்வாங்கன், இஷ்வாகுஈ தசரதன், ராமன்) போன்றவர்களும், சந்திர குல வம்ச அரசர்கள் (சந்தனு) போன்றவர்களும் வணங்கி உய்வடைந்தனர்..! இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக சூரியனுக்குரிய நவரத்னமாகிய ரத்னாங்கியை நம்பெருமாள் அணிந்தும், சந்திரனுக்குரிய நவரத்னமாகிய, நல்முத்த்ங்கியைப் பெரிய பெருமாள் அணிந்தும், எளியவராகிய நாமும் உய்யும் வண்ணம், வைகுண்ட ஏகாதசியன்று சேவை சாதித்தருளுகின்றார்..!
எல்லா பெரிய ரக்ஷா பந்தன உற்சவத்தின் போதும், ஏழாம் திருநாள் தாயார் ஸந்நிதி எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளிச் செல்வார்..! ஆனால் இந்த இருபது நாள் உற்சவத்தில் ஒரு நாள் கூட தாயார் ஸந்நிதி பக்கம் திரும்பமாட்டார்..! ஆழ்வார்களையும், அரையர் கொண்டாட்டத்தினையும் ரசிப்பதில், அவன் அதில் லயித்து கிடப்பதில் அலாதி பிரியம் அவனுக்கு..!
தாம் ஜீவித்திருக்கும் வரை, தமது தீராத ஒர் ஆசையினை, எ்ம்பெருமானாருக்கு, அவருக்குப் பின் வந்த தரிசன ப்ரவர்த்தகர்கள், அவரது அர்ச்சா திருமேனியுடன் இருககும் போது பூர்த்தி செய்துள்ளார்கள்..! ஆம்..! திருக்கச்சி நம்பிக்கு பிரஸாதம் அமுது செய்தபின், எம்பெருமானார், அவரது சேஷத்தினை பிரஸாதம் கண்டுருளுவார்..! ஜீவிதத்துடன் இருந்தபோது உள்ள உள்ளக்கிடக்கையினை, ஏக்கத்தினை, அவர் அர்ச்சா திருமேனியுடனிருக்கும் போது தீர்த்து வைத்துள்ளார்கள்..!
நாச்சியார் திருக்கோலம், நம்பெருமாளின் வேடுபறி, நம்பெருமாள் கைத்தல சேவை, நம்மாழ்வார் கைத்தல சேவை, நம்மாழ்வார் மோக்ஷம் ஆகிய உற்சவங்கள் அவசியம் கண்டு, உள்வாங்கி, நாம் உணர்ந்து, உய்ய வேண்டிய ஒரு அற்புத உற்சவம், இந்த அத்யயன உற்சவம்..!
இந்த உற்சவத்தில, அடியோங்களுக்கு அரங்கனிடத்து ஒரு பெரிய பிரார்த்தனையும் உண்டு..! நலலுள்ளம் கொண்ட உங்களனைவரையும் கூட பிரார்த்தித்துக் கொள்ள வேண்டுகின்றேன்..! தயை கூர்ந்து யாரும் இது குறித்து சர்ச்சைக்குரியக் கருத்துக்களை வெளியிட வேண்டாமெனவும் பிரார்த்திக்கின்றேன்..! அரங்கன் கண்டிபபாக நம் அனைவரின் பிரார்த்தனையும் செவிமடுப்பான்..! அது..
1) ஸ்ரீரங்கஸ்ரீயினைக் காப்பாறறியதில் முக்ய பங்கும், திவ்யதம்பதிகளின் பேரன்பிற்குப் பாத்ரமானவருமான ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகனும் (2) நாலாயிரமும், அரையர் சேவையும், நமக்குக் கிடைக்கச் செய்த ஸ்ரீமந் நாதமுனிகளும், ஆழ்வார்கள், ஆச்சார்யர்களோடு இவ்வைபவத்தில், அர்ச்சா திருமேனியோடு எழுந்தருளி அனுக்ரஹிக்க வேண்டும் என்பதே மிகப் பெரிய பிரார்த்தனை்..!
தாஸன் -முரளீ பட்டர்-13.12.2018
Want to know more information about Vaikunta ekadashi and Adhyayana utsavam , then please click the link below…
“வைகுண்ட ஏகாதசி..”
திருமொழித்திருநாள் இனிதே முடிந்து, திருவாய்மொழித் திருநாள், நம்மாழவாரின் தீந்தமிழ் பாசுரங்களுடன், ஸ்ரீரங்கராஜன் கோலகலமாகக் கொண்டாடி வருகின்றான்..! ஆபரணத்தினால் அழகு சேர்ப்பவனாக அல்லாமல், ஆபரணத்திற்கு அழகு சேர்க்கும் பெருமாளாக, விலை மதிப்பில்லா ஆபரணங்களனைத்தும் இவனால் அழகு பெறுகின்றது..! மிளிர்கின்றது..!
17.12.2018 பின்னிரவு – ராணி மங்கம்மாள் அளித்த “ரத்னங்கி“யினை ஒவ்வொன்றாகத் தடவிப்பார்த்தப் போது, மனம் பூரிப்படைந்து, அநத மஹரராணியினை மானசீகமாக வணங்கியது..! இத்துணை ரத்னங்களையும், வைரங்களையும் அவர்களே வைத்துக் கொண்டிருந்தால், இந்நேரம் அவைகள் சிதறி, சின்னாபின்னமாகி, காணாமற் கூட போயிருக்கும்..! சில நுாற்றாண்டுகள் (கி.பி. 1689-1706) கடந்தும், இன்னமும், அகிலம் போற்றும் வகையில், அவள் செய்த தொண்டு, பாராட்டி தொழுதற்குரியது..! இதனை குவளக்குடி ஸ்ரீ.சிங்கமயயங்கார் எனும் பெருந்தகை, 1911ம் பழுது நீக்கி சீரமைத்துள்ளார்..! இன்று வரை அரங்கனிடத்து மிளிர்ந்து, நமமையெல்லாம் மிளிர்வித்துக்கொண்டிருக்கின்றது..!
மதியம் திருமாமணி மண்டபத்தில் அரங்கனடிக்கீழ்,
அமர்ந்திருந்தேன்..! என் இனிய நண்பர், பிரபல நடனக் கலைஞர் திரு. ஜாகீர் உசேன் தரிசிக்க வந்திருந்தார்..! அன்று அவரது “ரங்கநாயகம்“ எனும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது..! அவரை அருகில் அழைத்துத் தரிசனம் செய்து வைத்தப்போது, கண்களிலிருந்து கண்ணீர் பொங்கியது..! அடியேன் சற்றேத் தடுமாறினேன்..!
பின்னர் அவரே சொன்னது -, “இந்த நன்னாளில் எப்படியாவது ஸ்ரீரங்கத்தில் நடனமாட ஆசை..! இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான பணம் வரவிலலை..! ஆயினும் நான் அரங்கனது ராஜசபையில் ஆடப்போகின்றேன்..! அரங்கன் எனக்கு சன்மானம் கொடுத்துக் கௌரவிக்காமலா இருப்பான்..! நானெல்லாம் “தாஸ்யை“கள்..! அவனுக்கென ஆடுவதில் அலாதிப் பிரியம்..! இங்கு ஆண்டாளையும் (கூரத்தாழ்வார் மனைவி) பொன்னாச்சியையும், வெள்ளையம்மாளையும் நினைக்கும் போதெல்லாம் மனம் கசிகின்றது..! அரஙகன் எப்படியும் பார்த்துக்கொள்வான் என்ற உறுதியான துணிவுடன் இருந்தேன்..! நிகழ்ச்சி நடக்கவிருக்கும் இரு நாட்கள் முன்பு, யாரோ எனக்கு அதிகம் அறிமுகமில்லாத ஒருவர், U. S.லிருந்து, நிகழ்ச்சிக்குத் தேவையான ஒரு கணிசமான்த் தொகையினை அளித்து, ‘உங்கள் இஷ்டம் போல் செலவழித்துக் கொள்ளுங்கள்’ என்ற போது, அதிர்ந்து போனேன் – நீங்கள் சொன்னது போல் இவர் பேசும் பெருமாள்..!” என்று அழுத போழ்து, நானும் ஆடிப்போனேன்..! பெருமாளுக்கு திருவாலவடடங்கள் சமர்ப்பித்தார்..! அவர் முன்னே அரங்கன் ஆனந்தமாக, அவரது ஆலவட்டத்திலிருந்து பெருகியத் தென்றலை ஏற்றான்..! அல்லுாரி சமர்ப்பித்த பாண்டியன் கொண்டையினைப் பார்த்து பரவசப்பட்டார்..! தாமும் இது போன்று பச்சைப் பதித்த ஒரு கொண்டை செய்ய வேணும்..! என்று பிரார்த்தித்துக் கொண்டார்..!
நம்பெருமாள் அவருக்கு வேண்டிய அனுக்ரஹத்தினைக் கண்டிப்பாகச் செய்வார்..!
“வெள்ளையம்மாள் போன்று தியாகம் செய்த தாஸ்யைகள் சாகவில்லை..! அரங்கன் முன்பு இன்னமும் ஆடிக்கொண்டுதானிருக்கின்றனர்..!
தாஸன் – முரளீ பட்டர்- 19.12.18
திருநெடுந்தாண்டகம்
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
இன்று (7.12.2018 – வெள்ளிக்கிழமை) ஸ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் –
எப்படி இந்த உற்சவம் வந்தது…..?
பராசர பட்டர், மேல்கோட்டையில் “வேதாந்தி” என்கிற மஹாஞானமுடையவரோடு, வாதம் புரிந்து வெல்கின்றார்..! பட்டர் வென்றது, திருமங்கையாழ்வார் அருளிய திருநெடுந்தாண்டகத்திலுள்ள விசேஷார்த்தங்களைக் கொண்டு..!
இரண்டு மதங்கொண்ட யானைகள் மோதிக் கொண்டது போல் இருவரும் தர்க்கப்போரை நடத்துகின்றார். ஒன்பது நாளும் இத்தர்க்கத்திலேயே முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.
பத்தாம் நாள் பட்டர் விசிஷ்டாத்வைத பரமாக உபன்யாஸிக்கின்றார். இதனை கேட்க கேட்க வேதாந்தியின் உடல் நடுங்கியது. வேறொன்றும் சொல்ல முடியவில்லை. தேவரீரை ‘மநுஷ்யன் மாத்திரமே என்றிருந்தேன். நம்பெருமாளென்ன, நீரென்ன ஒரு பேதமும் இல்லை! உறங்கும் பெருமாள் அவர், உலாவும் பெருமாள் நீர்!’
என்று பட்டரின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கின்றார். பட்டரும் தாம் எழுந்தருளிய கார்யம் அதி சீக்கிரமாக பலித்ததையெண்ணி சந்தோஷமடைகின்றார். வேதாந்தி ‘அடியேனை இரங்கியருள வேணும்’ என்று விண்ணப்பிக்கின்றார். பட்டர் மிகவும் திருவுள்ளம் உகந்தருளி அவரை அங்கீகரிக்கின்றார் — அவர்தாம் நஞ்சீயர்..!
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆரம்பமாகப்போகின்றது. இந்த உற்சவத்திற்கு முதல் நாள், பட்டர் அவசர அவசரமாக, மேல் கோட்டையிலிருந்து, திருவரங்கம் வந்து சேர்கின்றார்..! நம்பெருமாளிடத்து, தாம் வேதாந்தியை, எப்படியெல்லாம், திருமங்கை மன்னனின் விசேஷார்த்தங்களையெல்லாம் எல்லாம் சொல்லி வென்றோம் என்று விவரிக்கின்றார்..!
இதேயே அரங்கன் தம் தலையாய விழாவான “வைகுண்ட ஏகாதசி“ பகல்பத்து உற்சவத்தின் ஆரம்ப விழாவாக, திருமங்கைமன்னன் நினைவாகவும், ஸ்ரீ பராசர பட்டர், ஞாபகமாகவும், இன்றளவும் கொண்டாடுகின்றார்..!
(இது நெடுந்தாண்டகம். எண்சீர் கொண்டது. இப்பிரபந்தத்தில் முப்பது பாசுரங்கள் உள்ளன. முதல் பத்துப் பாட்டுகள் எம்பெருமான் எல்லாம் தாமேயான தன்மையில் அமைந்தவை. இரண்டாம் பத்துப் பாட்டுகள் திருததாயார் வார்த்தையாக அமைந்தவை. மூன்றாம் பத்துப் பாட்டுகள் தோழியோடு பேசும் தலைமகள் வார்த்தையாக அமைந்தவை.)
தாஸன் – முரளீ பட்டர்-
7.12.2018
Thirukarthikai – Namperual Purapadu – Chokkappanai – 23.11.18
————————————————————————
“திருநல்கார்த்திகை“ (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
”மாதங்களில் நான் மார்கழி” என்று கணணன் உரைப்பினும், கார்த்திகையில், கார்த்திகை நட்சத்திரத்தில் அவன் பிறப்பித்த, திருமங்கை மன்னனாலும், நம்பிள்ளை என்ற ஆச்சார்யராலும், கார்த்திகை ரோஹிணியில் அவதரித்தத் திருப்பாணாழ்வாராலும், கார்த்திகை பரணி நட்சத்திரத்தில் பிறந்த “அருளாளப்பெருமாள் எம்பெருமானாராலும் இந்த கார்த்திகை மாதம் “நல் கார்த்திகை“யானது. கார்த்திகையில் அவதரித்த வடமதுரை தாமோதரனால் “திருநல்கார்த்திகை“ என்றழைக்கப்படுவதே சிறப்புடையதாம்..! இதை அடியேன் கூறும் போது, நம் பூர்வாச்சாரியார்கள் ‘திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார். 1. திருப்பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர்போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும். 2. கமலப்பாதம்: ”பூவார் கழல்கள்” – புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம். 3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’ சமஸ்தலோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள். இது ஸ்ரீரெங்கநாதனுடையது! என அனுபவித்தது நினைவுக்கு வருகின்றது. கார்த்திகையில் கார்த்திகை அவதரித்தத் திருமங்கையாழ்வாரே, வைகுந்த ஏகாதசித் திருவிழாவினை ஆழ்வார்களின் அருளிச்செயல் விழாவாக மாற்றியமைத்த முன்னோடியாவார்..! நம்பெருமாள், கார்த்திகையில் கார்த்திகையன்று, கலியனை (திருமங்கை மன்னன்) மறக்கவியலாமல், சேர பாண்டியன் சிம்மாஸனத்தில், சுந்தரபாண்டியன் திருமுத்துப் பந்தலின் கீழ், ஹரிஹர ராயன் திருப்பள்ளிக் கட்டிலின் மேல், கலியன் பாட்டினை ஆனந்தமாகக் கேட்டு, அனுபவித்துக்கொண்டிருக்கையில் கோவணவர் (மணியக்காரர்) கொடவர் (இவரது வம்சம் தற்போதில்லை) கொடுவாள் எடுப்பார் (கந்தாடை முனி) ஆடுவார் (தாஸிகள்) பாடுவார் (அரையர் ஸ்வாமிகள்) தழையிடுவார் (வாதுால தேசிகர் – (ஸ்தலத்தார்களில் ஒருவர்)) மற்றுமுள்ள இராமனுஜ அடியோர்களும், நம் சடகோபனுக்கு (கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றுவதற்காக ஸ்ரீரங்கம் எழுந்தருளுகையில், ”நம் சடகோபனைப் பற்றி பாடினாயோ..?” என்று அரங்கன் வினவ, கம்பர் சடகோபர் அந்தாதி பாடிய பிறகே இராமாயணம் பாட அனுமதி கிடைத்தது வரலாறு.” – இங்கு சடகோபனுக்கும் “நம் சடகோபன்“ என்ற பெயர் ஏற்றம் கவனிக்கத் தக்கது..!) முன் பெற்ற பெரும் பேற்றினைத் தரவேணும் என விண்ணப்பித்தனர்..! இடைப்பட்ட சிறிது காலமாக இந்த உற்சவம் நடைபெறவில்லையா அல்லது ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வார் எழுந்தருளவில்லையா.? எனத் தெரியவில்லை..! மீண்டும் இந்த உற்சவம் நடைபெற எண்ணினார்கள் கோவிலார்கள்..! ஏற்றத் தருணம் எது..? என்று காத்திருந்தனர்..! கலியன் பாட்டினை நம்பெருமாள் ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டிருக்கும் காலமே உகந்தது என எண்ணி விண்ணப்பம் செய்தனர்..! அவர்கள் நினைத்தது நடந்தது..! உடனே நம்பெருமாள், நம்மாழ்வார் இங்கு வரக்கோரி ஒரு ஸ்ரீமுக பட்டயத்தினையும், தாம் சாற்றி களைந்த சந்தனமும், சூட்டிக் கழிச்ச சுகந்தமும், உடுத்திக் களைந்த உடையையும், சடகோபனுக்கு மரியாதை பொருட்டு, வாதுால தேசிகர் மூலம், ஆழ்வார் திருநகரிக்கே அனுப்பி வைத்து, முக்யமான கைங்கர்யபரர்கள் தவிர அனைத்துக் கோவிலார்களையும் கூடவே அனுப்பி வைத்தார்..! இங்கிருந்து சென்ற கோவிலார்கள், நம்மாழ்வாரை அங்கிருந்தே எழுந்தருளச் செய்து, வைகுந்த ஏகாதசியினைக் கொண்டாடியதாக வரலாறு..! மிக மிக முக்கியமான சில கைங்கர்யபரர்களைத் தவிர, கோவிலார்கள் அனைவரும் கோலகலமாக நம்மாழ்வாரை எழுந்தருளச் சென்றுவிட்டமையினால், இங்கு வேதம் ஓதுதல், திவ்யபிரபந்தங்களை அத்யயனம் (அத்யயனம் என்றால் சொல்லுதல் என்று பொருள்..!) செய்தல் ஆகியன நம்மாழ்வார், இங்கு ஸ்ரீரங்கம் வரும்வரை நின்று போயின..! இதனை நினைவுகூறும் வகையில் இன்றும் ஸ்ரீமுகபட்டயம் வாசித்தபின்பு, அனத்யயன காலம் (வேத, திவ்யபிரபந்தங்கள் சொல்லாமலிருத்தல்) என்று அனுஷ்டிக்கப்படுகின்றது..! நம்பெருமாள் எப்போது பரவசப்பட்டாலும், அவசரப்பட்டாலும் அர்ச்சகர்களின் கைத்தலத்தில் (கைகளில் எழுந்தருளுதல்) எழுந்தருளுதல் வழக்கம்..! கைத்தலம் என்றால் உடனேயே எழுந்தருளி விடலாமல்லவா..! நம்மாழ்வாரை அழைத்து வர ஆணையிட்ட சந்தோஷம், நம்மாழ்வார் எழுந்தருளுதலினால் கொண்ட மகிழ்ச்சி எல்லாம் மேலிட, இன்றும் கார்த்திகை ஸ்ரீமுகபட்டயம் வாசித்தப்பின்பு, அன்பு மேலிட்டு, அரங்கன் கைத்தலத்தில் எழுந்தருளுதல் கண்கொள்ளாக் காட்சியாம்..! நம்மாழ்வார், ஆழ்வார் திருநகரியிலிருந்து எழுந்தருளுதலில், நடுவே நிறைய சிரமங்களிலிருந்தன..! எனவே சில நுாற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கம் திருக்கோயிலிலேயே நம்மாழ்வார் விக்ரஹம் ஒன்று பிரதிட்டை செய்யப்பட்டது. தற்சமயம் ஸ்ரீமுகபட்டயமானது சேனை முதலியார் ஸந்நிதியில் வைக்கப்பட்டு, பின்பு இங்குள்ள நம்மாழ்வார் ஸந்நிதியில், நம்பெருமாளின் விருதுகளுடன் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆனந்தத்தில், நம்மாழ்வாரும் கைத்தலத்தில் எழுந்தருளுவார். ஆக, கார்த்திகையில் கார்த்திகை, ஒரு மகத்தான நாள்..! ஆழ்வார் ஆச்சார்யர், அவதரித்த நல்கார்த்திகையாம்..! நம்பெருமாள், பின்பு நம்மாழ்வார் ஆனந்தித்துக் கொண்டாடி, நம் அனைவரையும் கைத்தல சேவையில் அனுக்ரஹிக்கும் “திருநல்கார்த்திகை”..! தாஸன் – முரளீ பட்டர்-
——————————————————————————
Kaisika Yekadasi – 19/11/18
கைசிக புராணத்தின் கதை
திருக்குறுங்குடி – வைஷ்ண திவ்ய தேசங்களில் மிகவும் சிறந்த தலமாக கருதபடுகிறது. ஸ்ரீமன் நாராயணனை துதிப்பவர்கள் எல்லோருமே வைஷ்ணவர்கள்தான் இதில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை நம் திருக்குறுங்குடி நம்பி பெருமாள். ஆம் இந்த ஸ்தலத்தில் நடந்த ஒரு மனதை நெகிழ செய்யும் ஒரு சம்பவம் இன்றும் திருவரங்கத்தில் அரங்கனின் சன்னதியில் கைசிக ஏகாதசி அன்று படிக்கப் படுகிறது என்றால் அது எப்பேர்பட்ட நிகழ்ச்சி. வாருங்கள் என் அருமை சகோதர சகோதரிகள் நிகழ்ச்சிக்கு போவோம்.
நம் பாடுவான் என்பவன் நல்ல கவி திறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால் அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும் பெருமாள் என்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பண்களை (பாடல்களை) எல்லாம் அவன் காதாரக் கேட்டுகொண்டிருக்கிறான் அது போதும் என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான். கைசிகம் என்ற பண்ணில் நம்பியின் புகழை பாடி மகிழ்வான். நம் பாடுவான் தினமும் விடி காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்கு சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளை பாடுவான். இவனது பெருமையையும் பிரதிபலன் கருதா பக்தியையும் ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம் பாடுவான் எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மகாத்மியம் கைசிக புராணம் என்ற நாமம் தாங்கி வாராஹ புராணத்தில் உள்ளது. ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி இரவு அன்று நம்பாடுவான் திருக்குறுங்குடி நம்பி பெருமாள் கோவிலை நோக்கி செல்கிறான். அந்த இரவு நேரத்தில் அவன் செல்லும் வழியில் ஒரு ப்ரம்மரக்ஷஸ்(பிசாசு) அவனை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். ப்ரம்மரக்ஷஸின் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம் பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் ப்ரம்மரக்ஷஸின் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால் பயப்படவில்லை. ப்ரம்மரக்ஷஸை பார்த்து, “நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான். ஆனால் ப்ரம்மரக்ஷஸ் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது. தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்துக் கொண்டான் நம்பாடுவான். உடனே ப்ரம்மரக்ஷஸை பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து திருப்பள்ளி எழுச்சி பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பலமாக சிரித்து, “நீயோ தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய் சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பிவிடுவாய். அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான ப்ரதிக்ஞைகளை செய்கிறான். நான் திரும்ப வரவில்லை என்றால் : 1சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும். 2.பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும் 3.எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும் 4.எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன். 5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அவளை அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன். 6.எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிரானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும். 7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும். 8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு எதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு கொடாமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன். 9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன். 10.ஒரு பொருளை தானாமாக கொடுப்பதாக கூறி பின் மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையகடவேன். 11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையகடவேன். 12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையகடவேன். 13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும். 14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும். 15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் மகா பாவம் என்னை வந்தடையட்டும். 16. எவன் பிரம்மகத்தி செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, வ்ரத பங்கம் பண்ணுகிறானோ இப்படிபாட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன். 17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன். 18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும் , முக்கோடி தேவர்களாலும் முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேச்வரனான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும். நம்பாடுவான் மேலே சொன்ன பதினாறு ப்ரதிக்ஞைகளை சொல்லும் வரை ப்ரம்மரக்ஷஸ் தனது பிடியை தளர்த்தவில்லை. ஆனால் 17வது ப்ரதிக்ஞையை சொல்லியதுதான் தாமதம் உடனே பிடியை விட்டு விட்டது. அதுவும் 18 ஆவது ப்ரதிக்ஞையை கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தை புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது. ப்ரம்மரக்ஷஸ்ஸினால் விடப்பட்ட நம்பாடுவான் திருக்குறுங்குடி கோவிலை நோக்கி ஓடினான் ! நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம் பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. பெருமாளே ! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று அச்சப்பட்டேன். நல்ல வேளை உன்னை பாட வந்து விட்டேன். இதுவே எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாக பாடினான். உள்ளிருந்த நம்பி பெருமாள் நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். ஆம் தான் ஆட் கொள்ளவேண்டிய தனது பக்தனின் முகத்தை தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத் தான் அளிக்குகும் மதிப்புதான் என்ன என்று யோசித்தார். அவன் காண இயலாதிருந்தும் அவனை நாம் பார்த்து ரக்ஷிப்போம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது. ” விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும், அதை விட நான் அவனை காண வேண்டும்! விலகு” என்று தனது பார்வையாலேயே சற்று விலக்கினார். “பளிச்சென்று ஓர் ஒளி உள்ளிருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தான் பார்ப்பது நம்பிதானா என்று உள்ளம் குதூகலித்தான். ஆஹா பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம். நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண நேர தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது.அதைவிட தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்ம ராட்சசனை நோக்கி விரைந்தான் இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு ப்ரம்மரக்ஷஸ்ஸிநிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் ஜாஸ்தியாக காணப்பட்டது. அப்போது ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, “யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்.? நீ செல்லும் திசையில் ஒரு பிரம்ம ராக்ஷசன் இருக்கிறான்! அங்கே போகாதே : என்று கூறினான். நம்பாடுவானும், “சுவாமி அடியேனுக்கு அந்த ராக்ஷசனை பற்றி தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த ராக்ஷசன் நல்லவனில்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என கூற, நம்பாடுவான் “சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ் விரும்பவில்லை, ஆகவே என்னை செல்ல அனுமதியுங்கள் என்று வேண்டினான். பிராணனை விட்டாவது சத்தியத்தை காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டு சந்தோசம் அடைந்த சுந்தரபுருஷன் உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான். அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்ம ராக்ஷசையும் ஒருங்கே கடாக்ஷிக்க எண்ணினார். நம்பாடுவானும் ப்ரம்மரக்ஷஸ்ஸின் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் நம்பி பெருமாளை வாயாரப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியை போக்கிக் கொள் என்று கூறி நின்றான். பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த ப்ரம்மரக்ஷஸ், ” ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனை போற்றி பாடிய பாட்டின் பலனை எனக்கு கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்றது. அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தை காக்கவேண்டும் ஆகவே என்னை புசித்துக்கொள் நான் பாட்டின் பலனை கொடுக்க மாட்டேன் என்றான். அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னை புசித்து விடு என்று கூறினான். ப்ரம்மரக்ஷஸ்ஸும், “அப்பா ! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை ப்ரம்மரக்ஷஸ் ஜன்மத்திலிருந்து காப்பாற்று” என்று மன்றாடியது. “நீ ப்ரம்மரக்ஷஸ்ஸாகப் பிறக்க காரணம் என்ன?”என்று கேட்டான் நம்பாடுவான். அப்பொழுது ப்ரம்மரக்ஷஸ்ஸுக்கு பூர்வஜன்ம ஞாபகம் வந்தது, பூர்வ ஜன்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன். பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது ப்ரம்மரக்ஷஸ்ஸாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து என்னை காப்பாற்று என்று நம்பாடுவானை சரண் அடைந்தது. தன்னை அண்டிய அந்த ப்ரம்மரக்ஷஸ்ஸிற்க்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான். அதன்படியே, “நேற்றிரவு “கைசிகம் என்ற பண் பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்கு கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜன்மத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைவாய் என்று கூறினான். நம்பாடுவானின் வரத்தை பெற்ற ப்ரம்மரக்ஷஸ் ராக்ஷச ஜன்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோக்ஷத்தை அடைந்தது. நம்பாடுவானும் நெடுங்காலம் நம்பிபெருமாளை போற்றி பாடி மோக்ஷத்தை அடைந்தான். ஸ்ரீ ரங்கத்தில் ரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த பராசர பட்டர் என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதை கேட்டு சந்தோசமடைந்த அரங்கன் பராசர பட்டருக்கும் பரமபதத்தை தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார். ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. அப்பேற்பட்ட கைசிக மகாத்மியத்தை கோயிலுக்கு சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவர் என்று பூமி பிராட்டிக்கு வராஹ பெருமாளே சொன்ன சத்தியம் இது. ஆகவே அன்பர்கள் அனைவரும் இந்த மஹாத்மியத்தை படிக்க கொடுத்துவைத்தவர்கள். உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்.
=============================================
——————————————————————————————
Sri Aandal Thiruvaadipura utsavam – 04.08.18 to 13.08.18
————————————————————————–
Namperumal Vasantha Utsavam – 21.05.18 to 29.05.18
Kindly c lick the following link for photos :
Viruppan thirunaal – 05.05.18 to 15.05.18
Day 09 – 13.05.18 – Thiruther
அரங்கனின் விருப்பன் திருநாள் – சித்திரைத் தேர்..! (முரளீ பட்டர்) எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி முதல் நாள் கூடி இரவில் கைக்குழந்தைகளுடன் திருக்கோயில் வளாகத்திலுள்ளும், வீதிகளிலும் படுத்துறங்கும் மக்கள்..! சித்திரை வீதியில் அங்க பிரதட்சணம் செய்யும் முரட்டு பக்தர்கள்..! இன்முகம் காட்டி, தயாள குணத்துடன் வீதிக்கு வீதி உணவுகள் விநியோகம் செய்யும் நல்லோர்கள்..! எல்லாவற்றையும் சாப்பிட ஆசைப்பட்டு வாய்ருசிக்குக் கொஞ்சம் சாப்பிட்டு மீதியினை தெருவில் எரியும் சிலர்..! தேர் வரும் முன் எவர் பாதங்கள் புண்பட்டால் என்ன..? நான் நடுத்தெருவில் சூடம் கொளுத்தி தேங்காய் உடைத்து அரங்கனை வழிப்பட்டேத் தீருவேன் என்று வழிபடும் சிலர்..! அந்த எரிகின்ற சூடம் அணைந்துவிடாமல் மேலும் மேலும் தேங்காய் நார்களையும், சூடங்களையும் சேர்த்து சொக்கப்பனையாக்கி மகிழும் மக்கள்..! கூடுமானவரை மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட்டு மக்களைக் காக்கும் தீயணைப்புப் படை வீரர்கள்..! அரங்கனைப் பற்றிய கிராமிய பாடல்கள்..! பல பக்தர்களின் பஜனைகள்..! தேர் இழுக்கும் பக்தர்களுக்கு விசிறி விட்டு, நீர் மோர் பானகம் கொடுத்து உற்சாகம் கொடுக்கும் தொண்டர்கள் குழாம்..! மிருதங்க ஒலி..! கர்ண கடூரமாக ஒலிக்கும் ஒலிப்பாண்கள்..! தேர் வடமிழுப்போரை இயங்கச் செய்யும் தேர் மேளம்..! இவை எல்லாவற்றிக்கும் நடுவே அரங்கன் – சிருங்கார சித்திரைத் தேரில்..!
இது பக்த ஜன வத்ஸலன் அரங்கனின் ஒரு விருப்பமான திருநாளும் கூட..! மக்கள் வெள்ளத்தை உயரத்தில் நின்று, அபயமளித்து, கண்டு களித்து, தேரில் அவன் அசைந்தசைந்து வருவதே ஒரு அழகு..! ஸ்ரீரங்கத்தினை மாலிக்காபூர் படையினின்று மீ்ட்டு, ஏராளமான கிராம மக்களை ஒருங்கிணைத்து, மீண்டும் ஸ்ரீரங்கத்தினை மிளரச் செய்த ஒரு வைபவம் – இன்றும் இந்த நாளின் போது மிளிர்கின்றது நம் திருவரங்கம்..! ஆய்ச்சியர்கள் தயிர் கடையும் போது கண்ணனின் லீலைகளை பாடிய வண்ணம் தயிர் கடைவர்களாம்..! அது, கண்ணன், வதம் செய்தவர்கள், ”ஐயோ..!” எனறு கத்திய, விண்ணில் பரவியுள்ள அமங்கல சப்த ஒலி தாக்கத்தினைப் போக்குமாம்..! அது போன்று இன்று திரண்ட கிராமமக்களின் ”கோவிந்தா” கோஷம் கடந்த வருடத்திலிருந்து திரண்டிருந்த அமங்கல ஓசை தாக்கத்தினைப் போக்காதா என்ன…?! கோவிந்த நாம கீரத்தன புண்யாஹம்…!
Kindly click the following link for photos :
——————————————————————————–
Chithira Pournami – Gajendra moksham – 29.04.18
Namperumal Kodai thirunaal – 19.04.18 to 28.04.18
Kindly click the following link for photos :
https://photos.google.com/share/AF1QipN-kDGvJUegZqfUnCeJY1kiAJZL2BxaWVtOkMAchwOiKBkaBo28A9qe-9PJbXYtZA?key=OWt0ckRFR2xGR2V6Njg1c3dnYndQZ1ZHNG5DajR3 ———————————————————————-
Theppa thirunaal – Thirupallioota utsavam – 18.02.18 to 26.02.18
Kindly click the following link for photos :
——————————————————————–
Bhupathith thirunaal – 22.01.18 to 01.02.18
Kindly click the following link for photos:
———————————————————————————
Kanu paarivettai – 15.01.18
14.01.18 – Sangaranthi (Pongal) purapadu – Thiruppavai satrumurai Pictures kind courtesy : Sri Vijayaraghavan Krishnan
Kindly click the following link for photos of Shangaranthi and Kanu Purapadu :
=========================================
2017
Erappaththu utsavam – Thiruvaimozhi thirunaal – 29.12.17 to 07.01.18
1st Day – Vaikunda Yekadasi – 29.12.17-Namperumal Rathnangi sevai
ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்பதம்..|
யத்கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம் ||
செல்வம் நிறைந்ததாய், மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கம் ஒப்பற்ற க்ஷேத்ரமாகும். அதையடைந்த மனிதன் நரகத்தையும் தாழ்ந்த கதிகளையும் அடைவதில்லை.
தாஸன்- முரளீ பட்டர்-
Day 02 – 30.12.17
Day – 31.12.17
Day 04 – 01.01.18
Day 05 – 02.01.18 – Vairamudi sevai
Day 06 – 03.01.18
Day 07 – 04.01.18
Day 08 – 05.01.18
Day 09 – 06.01.18
Day 10 – 07.01.18
Kindly click the following link for photos:
===================================================
Pagal Paththu utsavam – Thirumozhi thirunaal – 19.12.17 to 28.12.17
Day 01 – 19.12.17
வைகுந்த ஏகாதசி- பகல் பத்து – முதல் திருநாள் – 19.12.17 (முரளீ பட்டர் – முன்னதாக பதிவிட்டது 23.12.2012 அன்று)
இந்த வைகுண்ட ஏகாதசி உற்சவத்தினைத் தொடங்கி வைத்தவர் யார் தெரியுமா..?
திருமங்கை மன்னன்…!
அரங்கனிடத்துத் திருமங்கையாழ்வார் யாசித்தது மூன்று வரங்கள்தாம்..!
1) புத்த விஹாரங்களில் உள்ள தங்கத்தினை ஸ்ரீரங்கம் விமானத்திற்காகக் கொள்ளையடித்தப்போது நிறைய புத்த பிட்சுக்களும் புத்த மதத்தினரும் பலியானர். இவர்கள் அனைவருக்கும் நற்கதி கிடைக்கவேண்டும் என்று யாசித்தார்..!
2) திருமங்கைமன்னன் படித்துறையில் (இது வடதிருக்காவேரி கொள்ளிடம் அருகேயுள்ளது..) பிரேத சம்ஸ்காரம் ஆனவர்களுக்கு வைகுண்ட பிராப்தி வேண்டும் என்றார்..!
3)ஆழ்வார்கள் அருளிச்செயலுக்கு ஏற்றம் தரும் வகையிலும், நம்மாழ்வாரின் மோட்ச வைபவம் சிறப்பாக நடைந்தேற வேண்டியும், அத்யயன உற்சவத்திற்கு அரங்கன் அனுமதியளிக்கவேண்டும் எனவும் வேண்டினார்.
ஆழ்வார் வேண்டி அரங்கன் என்ன மறுக்கவா போகிறார்…? மனப்பூர்வமாக சம்மதித்தார் அரங்கன்..! ஆழ்வார்களுக்கு ஏற்றம் தரும் “அத்யயன உற்சவம்“ ஆரம்பமானது.
இது முதலில் பத்து நாட்கள் உற்சவமாகத்தான் ஆரம்பமாயிற்று. நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்கள் இசைக்கப்பெற்று உற்சவம் நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடைந்தது.
பின்னர் நாதமுனிகளின் காலத்தில் இருபது நாட்கள் உற்சவமாக விரிவானது. பகல் பத்து , இராப்பத்து எனப் பிரிந்து பகல்பத்து திருமொழித் திருநாளாக இதர ஆழ்வார்களின் பாசுரங்களும், இராப்பத்து திருவாய்மொழித் திருநாளாகவும் விரிவு பெற்றது.
நாதமுனிகள்தான் அரையர் வம்சத்தின் முதல் அரையர். அவர் தமது மருமகன்கள் மேலை அகத்தாழ்வார், கீழை அகத்தாழ்வார் ஆகிய இருவருக்கும் இந்த “அரையர் இசை மற்றும் நாட்டியம்“ முதலானவற்றைத் தெளிவாகக் கற்றுத் தந்து அரையர்களின் கொண்டாட்டத்தினைத் தோற்றுவித்தார்.
அரையர்கள் நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கு வியாக்யானம் முதலானவற்றிக்கு “தம்பிரான் படி“ என்னும் பழங்கால ஈட்டினைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தம்பிரானைப் பற்றிய விவரங்கள் ஏதும் இன்னமும் அடியேனுக்குத் தெரியவில்லை..!
ஒருமுறை நம்பெருமாள் விக்ரஹம் கொள்ளையடிக்கப்பட்டு டில்லி பாதுஷா வசம் சென்றபோது, அரையர்கள்தாம் அரங்கனுக்காக அந்த முகலாய மன்னரிடம் “ஜக்கணி“ என்னும் நடனம் ஆடிப்பாடி அவனை மகிழ்வித்து நம்பெருமாளை மீட்டதாக வரலாறு.
திருவரங்கப் பெருமாளரையர் என்னும் அரையர் பெருந்தகையினிடத்து, ஸ்வாமி இராமானுஜர் கற்றது ஏராளம்..! இந்த அரையர் ஸ்வாமிக்கு ஸ்வாமி இராமனுஜர் எண்ணை தேய்த்து விட்டிருக்கின்றார். வெந்நீர் வைத்துக் கொடுத்திருக்கிறார்..! பல கைங்கர்யங்கள் செய்து கற்றிருக்கின்றார்…!
அரையர்களின் கைங்கர்யம் ஏராளம்..! அரங்கனுடைய பூர்ணமான அன்புக்குப் பாத்திரமானவர்கள் அரையர்கள்..! இந்தத் திருநாள் முழுவதுமே அரையர்களது கொண்டாட்டமும், அரங்கனது திகட்டாதக் கோலங்களும், மாயங்களும்தான்…!
வைகுந்த ஏகாதசி – பகல் பத்து -2ம் திருநாள் – ஹேவிளம்பி மார்கழி-05 (20.12.2017)
செம்மையுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மை பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பார் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பர் ஆர் இனியே? (நாச்.திரு.11-10)
தம்மை உகந்த, உகுந்து புகுந்த ஆழ்வார்களை, அரங்கன் தாம் உகந்தான்..! அவர்களின் அருளிச்செயல்களை உகந்து கொண்டுள்ளான் இன்று..! ஆழ்வார்களின் சார்பாக, ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் புடைசூழ, அரையர்களின் கொண்டாட்டத்தினை ஆனந்தமாக ரசித்துக் கொண்டுள்ளான்..!
”அரையர்” என்று சொல்லும் போது, திரு. சாண்டில்யன் எழுதிய ஒரு கற்பனைக் கதை நினைவிற்கு வருகின்றது..!
ஒரு வயதான கண் பார்வை மிகக் குறைவான அரையர்..! அரங்கன் திருமுற்றம் முன்பு சதா திருவாய்மொழியினை அநுசந்தித்துக் கொண்டிருப்பவர்..! வெற்றிலைப் பாக்குப் போடும் வழக்கமுள்ளவர்..! வெற்றிலைப் பெட்டியில் ஒரு சிறு சாளக்கிராமத்தினையும் வைத்திருப்பாராம்..! அவ்வப்போது கவனக்குறைவால் அந்த சிறு சாளக்கிராமத்தினையும் தவறுதலாக வாயில் போட்டுக் கொண்டு, பின்பு தம் தவறுணர்ந்து, அந்த சாளக்கிராமத்தினை வேஷ்டியில் துடைத்து தம் வெற்றிலைப் பெட்டியினுள் வைத்துவிடுவாராம்..! இதனைப் பார்த்த ஒரு ஆச்சாரமான வைஷ்ணவருக்கு மிகுந்த வருத்தம்..! தம் வருத்தத்தினை அரையரிடத்து வெளிப்படுத்தி, தாம் சிரத்தையாக அந்த சாளக்கிராமத்திற்கு பூஜைகள் செய்வதாய் உறுதியளித்து, அவரிடமிருந்து இந்த சாளக்கிராமத்தினைப் பெற்று, அதற்குத் தகுந்த தோஷநிவர்த்திகளைச் செய்து, ஆராதனைகள் செய்தார்..! அவர் மனநிம்மதியுடன் படுத்து உறங்கலானார். அரங்கன் சற்று சீற்றமாக அவர் கனவில் வந்தார்..!
” ஏன் என்னை அரையரிடமிருந்து பிரித்தாய்..,?” என வினவினார்…!
”அரையர் தாங்களை சதா எச்சில் படுத்துகின்றார்..! மனம் பொறுக்கவில்லை..!” அந்தணர் குமறினார்..!
”அடேய்..! பைத்தியக்காரா..! அவரது வாயானது சதா திருவாய்மொழி சொல்லி நாக்குகள் தழும்பேறிய திருவாய்..! அங்கிருப்பதே எனக்கு ஆனந்தம்..! என்னை அவரிடமே சேர்ப்பித்து விடு” என்று கட்டளையிட, அந்தணர் அரையரிடத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்..! சாளக்கிராமம் மீண்டும் ஆனந்தமாக தாம்பூலப்பெட்டியில் குடியேறியது..!
திருவாய்மொழி மற்றும் அரையருக்குண்டான ஏற்றத்தினை, அரங்கன் திரு. சாண்டில்யன் மூலமாக இவ்வுலகுக்கு வெளிப்படுத்தியுள்ளான்..!
அரங்கன் என்றும் எளியவன்..! அன்புக்கு அடிமையானவன்..! ஆழ்வார்களின் அருளிச்செயலில் அலாதியான ப்ரியம் கொண்டவன்..!
இந்த ஆனந்தமயமான தருணத்தினை ஆனந்திக்கும் நம் அனைவருக்கும், நிச்சயம் ஏற்றம் தந்து மோட்சமும் தந்தருள்வான் அவன்..! ஆண்டாள் சொன்ன ”தம்மை உகப்பாரை தாம் உகப்பார்” எனும் வார்த்தைகள் பொய்யாக வாய்ப்பேயில்லை..! தாஸன் – ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்
Day 03 – 21.12.17
வைகுந்த ஏகாதசி – பகல் பத்து -3ம் திருநாள் – ஹேவிளம்பி மார்கழி-06 (21.12.2017)
”ஸ்ரீராமமிஸ்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம்!
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே!!”
”ஸ்ரீயமுனாச்சார்யரின் தெய்வீக புதல்வனும்,(இவர் ஆளவந்தாரின் பூர்வாஸ்ரம குமாரர்) அரங்கனது பூர்ணமான கடாக்ஷத்தினால் அவதரித்தவரும், ஸ்ரீபாஷ்யகாரரை சிஷ்யனாகக் கொண்டவரும், மணக்கால் நம்பியின் பாதகமலங்களில் உறையும் ஸ்ரீதிருவரங்கப்பெருமாளரையரைப் போற்றி பணிகின்றேன்.”.
இந்த வைகுந்த ஏகாதசித் திருநாளில், அரங்கன் உகப்புடன் பேசியவரும், ஆளவந்தாரின் பூர்ணமான நம்பிக்கைக்கும், கடாக்ஷத்திற்கும் பாத்திரமானவரும், ஸ்ரீரங்கஸ்ரீ நிர்வாகத்தினை, உடையவரை பரிபாலனம் செய்யும்படியாக செய்தவருமான “திருவரங்கப் பெருமாளரையரை” போற்றுவோம்.!
வைகாசி கேட்டையில் ஸ்ரீரங்கத்தில் அவதரித்து ஸ்ரீரங்கத்திலேயே பரமபதித்தவர் இவர். ஆழ்வார் பாசுரங்களின் இயல், இசை, நாடகம் என்ற மூன்று கலைகளையும் கசடறக் கற்றவர் திருவத்யயன உற்சவம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. திருவரங்கப்பெருமாளரையர் அதியற்புதமாக திருவாய்மொழியின் “கெடுமிடர் (திருவாய்மொழி-10-1) என்ற பாசுரத்திற்கு வியாக்னம் செய்து “திருவனந்புரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போல தொண்டு செய்யலாம்“ எனக்கூற அவ்விடத்தில் அமர்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்த ஆளவந்தார் உடனடியாக திருவனந்தபுரத்திற்கு மங்களாசாசனம் செய்தாராம். அவ்வளவு ஈர்ப்பு சக்தியுடைய குரல் வளமிக்கவர். இவர் பெரியபெருமாளிடத்தும், திருப்பாணாழ்வாரிடமும் அதீத ஈடுபாடு மிக்கவர். ஆளவந்தார் தமது அந்திம தசையில் திருவரங்கப்பெருமாளரையரை ஆஸ்ரயிக்குமாறு தமது சிஷ்யர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்..!
ஸ்வாமி இராமனுஜரை ஸ்ரீரங்கஸ்ரீக்கு பொறுப்பாளியாக ஆக்கிய பெருமை திருவரங்கப்பெருமாள் அரையரையேச் சாரும். எம்பெருமானார் துறவு பூண்டு காஞ்சிபுரத்தில் கைங்கர்யம் செய்து வந்தார். ஆளவந்தார் பரமபதித்தப்பிறகு அரங்கனுக்கு தம் திருக்கோயில் நிர்வாகத்தினை எம்பெருமான் நிர்வஹிக்க வேண்டும் என்று திருவுள்ளம். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் இசைப்பிரியர்…! இசையில் வல்லவரான திருவரங்கப்பெருமாளரையரிடத்து எம்பெருமானாரை திருவரங்கத்திற்கு அழைத்து வரும் பொறுப்பினை ஓப்படைக்கின்றார்.
அரங்கனைத் தவிர வேறேங்கும் கைங்கர்யம் செய்தறியாத, அரையர், அரங்கனின் ஆணையை சிரமேற்கொண்டு, காஞ்சி செல்கிறார்..! அரையரை அங்குள்ள திருகச்சிநம்பிகள், காஞ்சிபுரம் அரையர் வரந்தரும் பெருமாள் அரையர் ஆகியோர் மகிழ்வோடு எதிர்கொண்டழைத்து, பெருமாளை மங்களாசாஸனம் செய்விக்கின்றனர்.!
திருவரங்கப்பெருமாளரையர் வரதனை கண்குளிர
” கதாபுநச்சங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சநம் |
த்ரிவிக்ரம த்வச்சரணாம்புஜத்வயம்
மதீய மூர்த்தாநமலங்கரிஷ்யதி ||”
” “த்ரிவிக்ரமா! மங்களகரமான ஸுதர்சன சக்கரம், கல்பக வ்ருக்ஷ்ம், தாமரை போன்ற அடையாளங்களை உடைய உனது திருவடித்தாமரைகள் எப்போழுது என் தலையை அலங்கரிக்கப் போகிறது”.
பிரார்த்திக்கின்றார்..! இந்த தியான ஸ்லோகத்தில் ஒரு சூக்குமம் அடங்கியுள்ளது. (வரதனே ஒரு கற்பக விருட்சம்தான்..! கேட்ட வரம் தருபவன்..! திவ்யதேச பெருமாள்களிலேயே வெகுளியான பெருமாள் இவர்தாம் என்பேன்..!) தாம் நினைத்ததை நிறைவேற்றும் கல்பக விருக்ஷ அடையாளமுள்ள திருவடித்தாமரைகளைப் பிரார்த்திக்கின்றார்..!
வரதன் முன்பு,
பாலேய்தமிழான ஆழ்வாரின் பாடலான
“பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர்”
எனும் பாசுரத்திற்கும்
“தொழுதெழுதொண்டர்கள் தமக்கு பிணியொழிந்தமரர் பெருவிசூம்பருளும் பேரருளாளன்”
எனவும்.
” …கச்சிபோ் மல்லையென்று மண்டினார். உய்யல்லால் மற்றையார்க்கு உய்யலாமே?“
எனவும்
பாசுரங்களுக்கு அபிநயம் பிடித்து ஆடுகின்றார். தேன்மதுரக் குரலில் பாடுகின்றார்..!
வழக்கம் போல் வரதன் நெகிழ்ந்து,போகின்றான் – வரப்போகும் ஆபத்தை உணராமல்..!
”அனைத்தும் தந்தோம்..! என்ன வேண்டும் கேள்” என வரமளிக்க ”எம்பெருமானைத் தாரும்..!” என திருவரங்கப்பெருமாள் உரைக்க, திடுக்கிட்டாராம் வரதன். ”நம் இராமனுசனைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேள்” என தடுமாறினார் வரதன்..! அரையரோ திடமாக ” ‘ராமராக அவதாரம் எடுத்த நீர் இரு வார்த்தை அருளாலாகுமா’ என்று வினவ .
அப்பாவி வரதரும், பிரிய மனமில்லாமல் மிக்க சோகமுடன் “தந்தோம்..!’ எனத் திருவரங்கப்பெருமாளரையரிடம் நம் இராமனுசனை ஒப்படைக்கின்றார்..!
ஸ்ரீரங்கஸ்ரீயானது , அரங்கம் மனம் பூரிக்க, இராமனுசனிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இராமனுஜர் திருவரங்கப்பெருமாளரையரையும் தம் குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடத்து காலக்ஷேபங்களை கேட்டறிகறிந்தார்..! அத்யயன உற்சவத்தின் போது தம குருவான அரையருக்கு வெந்நீர் வைத்து, மூலிகை கலந்த எண்ணெய் தேய்த்து, அலுப்புத் தீர குளிப்பாட்டியிருக்கன்றார். ஸ்ரீரங்கஸ்ரீயையே நிர்வாகித்தப் போதும், ஒரு பண்புள்ள சிஷ்யராய் இராமனுசர் இருந்திருக்கின்றார்..!
திருவரங்கப்பெருமாளரையர் தம் தம்பிகள் தெய்வத்துக்கரசுநம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டைநம்பி ஆகியோரை இராமனுஜருக்கு சீடராக்கி மகிழ்ந்தவர்.
ஸ்ரீரங்கஸ்ரீயைப் போற்றிக் காப்பற்றியதில் அரையர்கள் பங்கு ஈடுயிணையில்லாதது. ஒரு முறை அரங்கனை மீட்டுள்ளனர். ஒப்பாரும் மிக்காருமில்லாத ஸ்வாமி இராமனுஜரை ஸ்ரீரங்கத்திற்குப் பெற்றுத்தந்துள்ளனர்..!
இவரது அர்ச்சா திருமேனி, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதியிலும், எம்பெருமானார் சந்நிதிக்கு அருகிலுள்ள ஸ்ரீபார்த்தசாரதி ஸந்நிதியிலும் உள்ளது. அவர்தம் பெருமைகளை நினைவுகூர்ந்து உளமார ஸேவி்ப்போம்.! தாஸன் – முரளீபட்டர்-.
Day 04 – 22.12.17
வைகுந்த ஏகாதசி – பகல் பத்து -4ம் திருநாள் – ஹேவிளம்பி மார்கழி-07 (22.12.2017).
ஆண்டாளிடமிருந்து துாது போன பறவைகளில் ஆண்டாளுக்கு மிகவும் பிரியமானது கிளியாகும். வில்லிபுத்துாரிலே தினம் ஒரு கிளி பச்சிலைகளில் அற்புதமாக செய்யப்பட்டு, ஆண்டாளின் திருக்கையில் ஆனந்தமாக அமரும். இன்று அரையர்களின கொண்டாட்டத்தில் நாச்சியார் திருமொழியிலிருந்து
”கண்ணனென்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில புளிப்பெய்தாற்போலப்
புறம் நின்றழகு பேசாதே
பெண்ணின் வருத்தமறியாத
பெருமானரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு – என்னை
வாட்டம் தணிய வீசீரே – நாச. திரு. 13.01
எனும் இந்த பாசுரத்திலிருந்து வ்யாக்யானம், அபிநயம் செய்வர்.. பாசுரவடிவான ஆண்டாளைத திருப்தி செய்ய அரங்கன் கையில் கிளியோடு ஸேவை சாதிக்கின்றான் போலும்..!
இம்மாதிரி பாசுரங்களுக்கேற்றவாறு அணிகல்ன்களை அரங்கன் அவ்வப்போது அணிந்து கொள்வான்..! உதாரணமாக அரையர் “முத்துக்குறி“ யன்று முத்து மாலை அணிவான்..! அர்ச்சகர் அறிந்தோ அறியாமலோ இம்மாதிரி ஏதேச்சயாகவும் சாற்றுப்படி செய்யப்போக – அசத்துபவன் அரங்கன்..!
ஒரு காலத்தில் பகல்பத்து பத்து நாட்களும் ராஜ மன்னார்குடியில் நடப்பது போன்று ஒவ்வோர் திருக்கோலம் சாற்றுபடி அரங்கனுக்குச் செய்ததாகவும் சொல்வர். தற்சமயம் “நாச்சியார் திருக்கோலம்” மட்டுமே வழக்கத்திலுள்ளது. இந்த கூற்று உண்மையானதுதானா..? என்பது ஒரு கேள்விக்குறி..!
ஏனெனில்..!
அரங்கன் தேவாதி தேவன்..! எவ்வித கட்டுக்கும் கட்டுப்படாதவன் – உண்மையான அன்பைத் தவிர..! திருக்கோலம் சாற்றுவதென்றால், அர்ச்சாத் திருமேனியின் சிரமம் குறித்து அர்ச்சகர்கள்
அனைவரும் உணர்வர். அரங்கன் ராஜாதி ராஜன்..! இதெல்லாம் அவனுக்கு ஆகாது..! இவனுக்கு மாலை சாற்றுவதற்காகத் திருமேனியில் சஙகு சக்ரத்தினோடுக் கட்டப்படும் மாலை தாங்கிக் கூட பிடிக்காது..! எவ்வளவு பெரிய மாலையானாலும் சிரஸ்ஸோடு சார்த்திக் கொண்டு கழட்டிக் கொள்வான்..!
நாச்சியார் திருக்கோலம்,….???
ஆழ்வார்கள் புடைசூழ, அவர்களது அருளிச்செயல்களில் ஈடுபட்டு, தன் தாயன்பை வெளிப்படுத்தும் விதமாக சாற்றிக் கொண்டு அருளுகின்றான் என்பது என்னுடைய அபிப்ராயம்..!
ஏனெனில் அம்ருதம் கடைந்த பிறகு எடுத்த அவதாரம் மோஹிணி அவதாரம்..! அமருதமாகிய திருமொழி திருநாள் பாசுரங்களை அனுபவித்தன் விளைவு “நாச்சியார் திருக்கோலம்..!” – தாஸன் -முரளீ பட்டர், ஸ்ரீரங்கம்
Day 05 – 23.12.17
Day 06 – 24.12.17
Day 07 – 25.12.17
Day 08 – 26.12.17
Day 09 – 27.12.17 – Muthangi Sevai
10th day – 28.12.17 – Pagal pattu satrumurai – Mohini alangaram (Natchiar thirukkolam)
Natchiar pinnazhku
Evening purapadu
”அரங்கன் எனும் அதியற்புதன்”
ஒரு சமயம் நம்பிள்ளை எனும் சிஷயன், நஞ்சீயர் எனும் அவரது ஆச்சார்யனிடத்தில் , ”ஒருவன் தனக்கு ஸ்ரீவைஷ்ணவத் தன்மை உண்டென்று அறிவது எவ்வாறு?’ எனக் கேட்கின்றார்.
இதற்கு நஞ்சீயர் ‘அர்ச்சாவதாரத்திற்கு பரத்வமுண்டென்று அறிந்த அளவில்’ என்று அருளுகின்றார். அதாவது
அர்ச்சை சொரூபம் (விக்ரஹரூபம்) எல்லாவற்றையும் விட சிறந்தது, மேன்மையானது என்று அறிந்த அளவில்“ என்கிறார்.
அரங்கன்…! நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அர்ச்சை ரூபத்திலிருக்கும் ஒரு உன்னத சக்தி…!
இவனிடத்து ஆட்பட்டோ அல்லது அகப்பட்டோ நம் முன்னோர்கள் அனுபவித்து அகமகிழ்ந்ததும் அதிகம்..! அல்லல் பட்டதும் மிக மிக அதிகம்..!
வைணவத்தின் ஆச்சார்யர்களில் இராமனுஜர் காலத்திற்குப் பின்வந்தவர்களில். பிள்ளைலோகாச்சாரியருக்கு முன், ஸ்ரீரங்கம் கோவில் பொறுப்பினை ஏற்று நடத்திய ஆச்சார்யர்களின் காலத்தினை ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். இராமானுஜருக்குப் பின், “பராசர பட்டர்“ காலம் தொடங்கி, ஸ்ரீ வேதாந்த தேசிகர் மற்றும பிள்ளைலோகாச்சார்யர் என்னும் ஆச்சார்யரின் 118ம் வயது வரை. ஸ்ரீரங்கம், ஆன்மீகம் வளம் பொருந்திய ஒரு அற்புத தலமாக திகழ்ந்தது. இவர்களது இடைப்பட்ட காலத்தில் பல அற்புத கிரந்தங்களுக்கு “ஈடு” எனப்படும் விசேஷமான அர்த்தங்கள்(வியாக்யானங்கள்) செய்யப்பட்டன. அற்புதமான பல வைணவ நுால்கள் இயற்றப்பட்டன. வைணவ ஸித்தாந்தங்கள் பிரபலமடைந்தன. நிலைநாற்றப்பட்டது. தேசமெங்கும் ஒரு ஆன்மீகத் தாக்கத்தினை ஏற்படுத்தி செம்மைச் செய்தனர். இவர்கள் ஸர்வக்ஞர்கள். அனைத்தும் அறிந்தவர்கள். பரமாச்சார்யர்கள்.
உலுக்கானின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கநாதரைக் காப்பாற்றியவர்களில் ஸ்ரீவேதாந்த தேசிகரும், பிள்ளைலோகாச்சார்யரும் செய்த கார்யங்கள், பெரும் பிரயத்தனங்கள் இன்று நினைத்தாலும் நம்மை புல்லரிக்கச் செய்கின்றது. இவற்றைத் தனியேப் பார்ப்போம். தாஸன் – ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்-
Pictures kind courtesy: Sri Vijayaraghavan Krishnan, Sri Bharath Rangarajan, Sri Elangovan Ramalingam and Sri Raghavan Nemili Vijayaraghavachari
==========================================================
திருமங்கை மன்னன்..!
இந்த வைகுந்த ஏகாதசி திருநாளில், மன்னன் திருமங்கையாழ்வாரைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்..!
திருமங்கை மன்னன் க்ஷத்திரியன்..! முரட்டு குணம் வாய்ந்தவன்..! முரட்டு பக்தியுடையவன்..! தாம் எண்ணியதை நிறைவேற்றும் குணமுடையவன்..! இவனது க்ஷத்திரிய முரட்டு குணம் பல படையெடுப்புகள், கொள்ளைகள் கொலைகளை சந்தித்துள்ளது. அதே சமயம் இவனது முரட்டு பக்தி அவனால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பல திவ்யதேச கைங்கர்யங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது..! அளவில்லாத அன்ன தானத்திற்கு பயன்பட்டது..! கொல்லபபட்ட ஆன்மாக்கள் கிடைத்தற்கரிய பேறு பெற்றன..! பரமபதத்தில் மீண்டும் பிறவியில்லாத பெருவாழ்வு பெற்றன..!
அரங்கன் ஆசையேதும் அற்றவன்..! ஒரு சிறிய உதாரணம்..! சுந்தர பாண்டியன் அளவு கடந்த பொன்னும், பொருளும், முத்துக்கள், ரத்னங்கள், மாணிக்கங்களோடு அரங்கனுக்கு சமர்ப்பிகக அவனது திருமுற்றத்திற்கு முன வந்து நிற்கின்றான்..! உள்ளுார தாம் கொண்டு வந்த பரிசில்களால் அரங்கன் ஆனந்தம் கொள்வான் என்ற ஒரு ஆணவம் எழுந்தது..! அரங்கன் உள்ளிருந்தபடியே “அங்கேயே வீசி விட்டு போ..!” என்று எதையும் பெற மறுத்து விட்டான்.! மன்னனின் ஆணவம் அழிந்தது..! அரங்கன் அன்பு கொண்டார்..! இன்றும் அரங்கனது திருவோலக்கத்தில் மன்னன் சுந்தர பாண்டியனின் ஞாபகமாக ”சுந்தர பாண்டியன் பிடித்தேல்“ என்று அருளப்பாடு உள்ளது.
நம்முடைய எண்ணங்கள் பார்வைகள் வேறு..! ஆழ்வாரின் பார்வை வேறு..! அனைத்தும் அறிந்த அரங்கனின் முடிவு வேறு..! இவையனைததும் நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை..!
அரங்கன், கள்வனாக மாறிய திருமங்கையாழ்வார் மனதினையும் கவருகின்றார். அரங்கன் கள்ளனுக்கெல்லாம் கள்ளன். திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் நீலன். கள்ளர் குலத்தவர். சோழபேரரசின் தளபதி. இவர் திருவாலி என்னும் ஊரில் குறையலூர் என்ற சிற்றூரில் ஆலி நாட்டு பெரிய நீலன் என்ற படைத்தளபதிக்கும் வல்லித்திரு எனும் நற்குண மங்கைக்கும் மகனாகப் பிறந்தார். போரில் எதிரிகளை கலங்கடித்தவர். பின்னர் சோழமன்னன் அவரை ‘திருமங்கை’ என்னும் சிற்றரசுக்கு அரசனாக்கினான். வீர இளைஞனான நீலன் திருவெளளக்குளம் என்ற ஊரிலுள்ள ஸ்ரீநிவாஸர் கோவிலில் குமுதவல்லி எனும் கபிலமுனியின் சாபத்தினால் மானுடவாழ்வெடுத்த தேவமகளை, தேவதையை, அழகு என்ற சொல்லுக்கே இலக்கியமானவளை, மஹாஞானியை பார்க்கின்றாh. தன் மனதினை பறிக்கொடுக்கின்றார். குமுதவல்லி இரண்டு கட்டளையிடுகின்றார்.
1) பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு திருமாலடியவனாய் மாறவேண்டும்.
2) அடியார்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் செய்ய வேண்டும்.
பஞ்ச சம்ஸ்காரம் யாரிடம் செய்து கொள்வது?. என்றும் உயர்ந்ததையே நாடும் நீலன் அன்று
திருநறையூர் ஸ்ரீநிவாஸனையே தேர்ந்தெடுத்தார் குருவாக. மன்னன் சித்தம் கேட்ட பட்டர் செய்வதறியாது திரைசேர்த்து வெளியேறினார். கருவறையில் ஸ்ரீநிவாஸன் எதிரே நீலன்!
பிடிவாதமாக அவர்தான் தமக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்ய வேண்டுமென்று கண்மூடி அசையாது அவரையே தியானித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம்தான் என்றாலும் கடுமையான தபஸ் அது.
மெய்யுருகி நின்றால் வெண்ணையுண்டவாயன் தான் உருக ஆரம்பித்து விடுவான். ஸ்ரீநிவாஸனின் சக்கரக்கையும் சங்கக்கையும் நீலனின் புஜங்களை தீண்டியது. நெற்றியில் ஊர்த்வபுண்டரமிட்டது. பரகாலன் என்று நாமமிட்டு அழைத்தது. திருமந்திரத்தை உபதேசித்தது. நீலனின் களை மாறியது. தேஜஸ் ஒளிர்ந்தது. புனித குமுதவல்லியுடன் திருமணம் இனிதே நடந்தது. அன்னதானம் ஆலிநாட்டில் சிறப்பானது. ஆலிநாடே அதிசயபட்டது. மன்னன் பரகாலன் புகழ் எட்டுதிசைகளிலும் பரவியது.
கப்பம் கட்டாத பரகாலனுடன் போரிட்டு வெல்லமுடியாது என்றறிந்த சோழமன்னன் தந்திரமாக அவனை ஒரு கோவிலில் சிறை வைத்தான். மூன்று நாட்களாக உண்ணாவிரதமிருந்த பரகாலனின் கனவில் பேரருளாளன் அத்திகிரி அருளாளப் பெருமாள் வரதன் தோன்றினான். காஞ்சிக்கு வரப் பணித்தான். கடனைத் தீர்ப்பதாக அறிவித்தான். அருளாளின் ஆணையை அரசிற்குத் தெரிவித்தார் பரகாலன். பரகாலன் சத்தியம் தவறாதவர் என்று நன்குணர்ந்த அரசன் ஒரு சிறு குழுவினை அவரோடு காஞ்சி அனுப்பி வைத்தார். மீண்டும் பரகாலன் கனவில் தோன்றிய அருளாளன் ஒரு புதையல் இருக்கும் இடத்தைக் காண்பித்துக் கொடுத்தார். வேகவதி ஆற்றங்கரையில் தோண்டினார் பரகாலன். பெரும் புதையலை கண்டெடுத்தார். அரசுக்கு செலுத்தவேண்டிய கப்பம் செலுத்தினார். மீதமானதை அன்னதானத்திற்கு எடுத்து வைத்தார். திருமங்கை விளைச்சலில் அரசுக்கு சேரவேண்டிய நெல்லைக் கேட்டனர் குழுவினர். அருளாளனின் மீது பாரத்தை போட்டுவிட்டு கண்ணை
மூடிக்கொண்டு உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆற்று மணலைக் காட்டினார் பரகாலன். என்ன ஆச்சர்யம்! அவர் காட்டிய இடமெல்லாம் மணல்துகளனைத்தும் நெல்மணிகளாயின! பரகாலன் பெருமையினை, தெய்வம் துணை நின்றதையறிந்த அரசன் தவற்றுக்கு வருந்தினான். அவரை சுதந்திரமாக திருமங்கையை ஆளவிட்டார்.
நீலன் மனப்பூர்வமாக வைணவனாக உறுதி பூண்டார். திருநறையூர் நம்பி அருள் புரிந்தார் இவரின் உறுதி கண்டு!. அன்னதானத்தின் பயன் அருளாளன் வரதன் அருள்புரிந்தார்.
ஆலிநாட்டின் பொருளாதாரம் வலுவிழந்தது. வளமுள்ளவரிடத்து கொள்ளயடித்தாவது இந்த கைங்கர்யத்தைச் செய்ய துணிபு பூண்டார் பரகாலன். வழிப்பறிக் கொள்ளையனாய் மாறினார்.
வயலாளி மணவாளனும் தாயாரும் புதுமணத் தம்பதியனராய் மாறினர். இவர்களின் ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடித்த பரகாலனால் நம்பெருமாள் கால்விரலில் அணிந்திருந்த விரலணியை கழற்ற இயலவில்லை. பரகாலன் பல்லால் கடித்தாவது கழற்ற முயலுகின்றார். அவரின் தலை இறையின் பாதங்களில் முட்டுகின்றது. பல்லினால் கடிக்கின்றார். தீண்டிய வேகத்தில் மெய்வண்ணம் உணர்கின்றார். திருமந்திரம் மீண்டும் உபதேசித்து பேரொளியாய் மறைகின்றான் மாயவன். கவி பிறக்கின்றது கள்வனுக்கு!
பொய் வண்ணன் மனத்தகற்றி புலனைந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மை வண்ணம் கருமுகில் போல் திகழ் வண்ண மரதகத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே
பொய்கள் போன்ற பலவிதமான பாவச் செயல்களை மனதிலிருந்து நீக்கி, ஐந்து புலன்களையும் தகாத வழிகளில் போகாத வண்ணம் நிலைநிறுத்தி, ஆத்மாவுடன் சேர்ந்து முழு உள்ளத்துடன் தன்னை வணங்குபவர்களுக்கு, தனது உண்மையான குணங்கள் முழுவதும் காண்பிப்பவனை, கண் மைப் போன்ற கரிய நிறமும், கரியமேகம் போல் ஒளிவீசும் நிறமும், மரகதம் என்ற ரத்தினத்தினைப் போன்ற பச்சை நிறமும் உடைய பெரியபெருமாளை, நான் திருவரங்கத்தில் கண்டு வணங்கினேன்.
திருமங்கையாழ்வார் பரம பாக்யசாலி. பகவானால் பஞ்சசம்ஸ்காரம் செய்யப்பட்ட ஒரே வைணவர் இவர்தான்!. இவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செய்த பல கைங்கர்யங்கள் கணக்கிலடங்கா! ஆனால் இந்த கைங்கர்யத்தினை நிறைவேற்ற இவர் கையாண்ட முறை வித்யாசமானது! எது வேண்டுமானாலும் பகவத் கைங்கர்யத்திற்காக துணிவோடு செய்வார். இவர் செய்த கைங்கர்யங்களுள் சாட்சியாகயிருப்பது இவரால் கட்டப்பட்ட மதில்களும், விமான, மண்டப, கோபுரங்களும் இவர் பாடிய பாசுரங்களும்தாம். திருவரங்கம் திருச்சுற்றில் நான்காவது திருச்சுற்று ஆலிநாடன் திருச்சுற்று என்றே திருமங்கை மன்னன் திருப்பணியை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது. நாகப்பட்டினத்தின் அருகேயுள்ள ஒரு புத்தர் கோவிலிலுள்ள சொர்ணத்தினாலான, எளிதில் திருடவே முடியாத, ஒரு புத்தர் சிலையை வெகு சாமர்த்தியமாகக் கொள்ளையடித்தார். பயணக்கப்பல் ஒன்றில் தன் பரிவாரங்களோடு பயணமும் செய்து பொய்வழக்காடி அந்த கப்பல் முதலாளியிடமிருந்து நிறைய தனத்தினைப் பெற்றார். இவையனைத்தையும் திருப்பணிக்காக செலவழித்தும் ஊழியர்களுக்கு சம்பளபாக்கி!. அவர்களனைவரையும் ஒரு ஓடத்தில் ஏற்றினார். அக்கரைச் சேர்ந்தவுடன் தருகிறேன் என்று கூறி கொள்ளிடம் நடு ஆற்றில் ஓடத்தைக் கவிழ்த்து அவர்கள்தம் பிறவிக்கடனை இவர் கழித்தார். அவரவர் உறவினர் இவரை மடக்க, இவரது ஸ்வப்னத்தில் (இங்குமா!?), அரங்கன் எழுந்தருளி உறவினர்களளனைவரையும் காவேரி ஸ்நானம் செய்து அழகிய மணவாளன் திருமண்டபத்திலே நின்று அவரவர் உறவினர் பெயரைக் கூப்பிட்டு காத்திருக்கச் சொல்லி மறைந்தார். அவ்வாறே ஆழ்வாரும் ஏற்பாடு செய்தார். மாண்டோர் அனைவரும் மீண்டனர். அவர்களனைவரும் அவர்கள்தம் உறவினர்களிடத்து ‘ஆழ்வாருடைய நிர்ஹேதுக பரம க்ருபையுண்டானபடியினாலே நாங்கள் பெரியபெருமாள் திருவடிகளையடைந்தோம்! நீங்கள் ஆழ்வார் திருவடிகளிலே அபசாரப்படாதீர்கள். சிலகாலம் இந்த ஸம்ஸார வாழ்க்கையினைக் கழித்து விட்டு ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்!’ என்று விண்ணப்பித்து மீண்டுபோனார்கள்.
இந்த க்ஷணம் அடியேன் சிலகாலம் முன்பு என் மனதில் போட்டு வைத்திருந்த ஒரு கேள்விக்கு அரங்கன் பதிலளித்துள்ளார். ஸ்ரீரங்கம் கோவிலில் முகலாயர்கள் படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கான வைணவர்கள் இறந்தார்களே? கோவில் வளாகத்திற்குள்ளேயே இறந்து போனார்களே? அப்பொழுதெல்லாம் ஏன் அரங்கன் அவர்களைக் காப்பாற்றவில்லை? அரங்கனுக்கு அவர்களைக் காப்பாற்றக் கூடிய சக்தியில்லையா? என்றெல்லாம் தோன்றியது. என்றாவது ஒரு நாள் பதில் தருவான் என்று மனதின் ஒரு மூலையில் கிடத்திய இக்கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. அரங்கனுக்குக் கைங்கர்யம் பண்ணிய அடியார்களை ஆற்றில் மூழ்கடித்தார் திருமங்கைமன்னன். நம் பார்வைக்கு அநியாயமாகக் கொல்லபட்ட அவர்களை அரங்கன் ஆட்கொண்டான். அவர்கள் பெரியபெருமாள் திருவடிகளடைந்ததை பிரத்யட்சமாக அழகிய மணவாளன் மண்டபத்தில் மீண்டு வந்து உணர்த்தினார்கள்.
இதை நாம் பிரமாணமாகக் கொள்ள வேண்டும்! அரங்கநகரப்பனைக் காக்கும் பொருட்டு தன் இன்னுயிர் துறந்தவர்களை சும்மாவா விடுவான் அரங்கன்? அவர்களைனைவரையும் அரங்கனே அவர்களது ஊழ்வினையறுத்து தம் திருவடிகளில் சேர்த்துக் கொண்டுள்ளார். உயிர் கூட்டினை விட்டு சாமான்யர்களின் உயிர்பறவை பிரிவதென்பது வலிதான். இவர்களனைவரும் சற்று கடுமையான வலியினைத் தாங்கியுள்ளனர். எவர் மூலமோ கொடுவாள் எடுத்து ஊழ்வினையறுத்து, அவனது நிர்ஹேதுக கிருபையினால் அவன் திருவடிகளையடைந்துள்ளனர். அவனது திருவடிகளடைந்து பரமபதம் சென்றாலும் அவர்கள் அவ்வப்போது திருவரங்கமும் வந்து சென்று அரங்கனை தரிசிக்கின்றார்கள். இதனை நான் சொல்லவில்லை. ஆழ்வாரே அறிவிக்கின்றார்! இதோ அவர் பாடல்!
ஏனமீனாமையோடு அரியும் சிறுகுறளுமாய்
தானுமாய தரணித்தலைவனிடமென்பரால்
வானும் மண்ணும் நிறையப்புகுந்து ஈண்டி வணங்கும்- நல்
தேனும் பாலும் கலந்தன்னவர்சேர் தென்னரங்கமே!
பரமபதத்தில் உள்ளவர்களும், இந்த பூமியிலுள்ளவர்களும் ஊர் முழுவதும் நிறைந்துள்ளது போல் இங்கு வந்து ஒன்றாகத் திரண்டு வணங்கும் இடமும், சுவையும் மதுரமும் உள்ள தேனும் பாலும் இரண்டற ஒன்றாகக் கலந்தது போல் இங்கு உள்ள அடியார்கள் சேர்ந்து நிற்கவும் ஆகிய திருவரங்கமானது – வராகமாகவும், மீனாகவும், ஆமையாகவும், நரசிம்மமாகவும், வாமனனாகவும் அவதாரங்கள் எடுத்துப் பின்னர் தானே ஒரு பூர்ணமான அவதாரம் எடுத்தப் பூமியின் தலைவனும், சக்ரவர்த்தித் திருமகனாம் ஆகிய இராமபிரானின் இடமாகும்.
திருமங்கையாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வாரைச் சந்தித்திருக்கிறார். திருமதிள் அமைக்கும் போது இவரது நந்தவனத்திற்கு எந்த ஊறும் ஏற்படாவண்ணம் திருமதிளை நந்தவனத்தை வளைத்துக் கட்டியுள்ளார். இதனைக் கண்டு மகிழ்ந்த தொண்டரடிப்பொடிகள் அவரை வாழ்த்தி, தான் பூக்களைப் பறிக்கும் சிறுகத்தி போன்ற ஆயுதத்திற்கு, திருமங்கைமன்னனின் மற்றொரு பெயரான ‘அருள்மாரி’ என்ற பெயரை வைத்துள்ளார்.
திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து சிலவற்றை யாசிக்கின்றார். அவற்றுள் சில
– தசாவதாரங்களையும் தரிசிக்க வேண்டும்
– திருமங்கைமன்னன் படித்துறைக்கு (மயானம்)
எந்தவித தோஷங்களும் கூடாது. அது எப்போதும் தோஷற்றதாக விளங்க வேண்டும்.
அரங்கன் ஆழ்வாரது கோரிக்கையை சந்தோஷமாக ஏற்கின்றான். எம்பெருமானின் தசாவதாரங்களையும் பாடிக் கொண்டிருந்த திருமங்கையாழ்வாருக்கு அந்த அவதாரங்களை தானும் ஸேவிக்க மிகுந்த ஆசையுண்டாயிற்று. ஆழ்வார்கள் வேண்டி அரங்கன் ஏதும் மறுப்பானோ? ஆழ்வார் உய்ய, அவர் பொருட்டு நாம் உய்ய அர்ச்சாரூபமான (சிலா ரூபத்தில்) தசாவதாரங்களையும் காண்பித்தருளினான். அப்போதே திருமங்கையாழ்வார் விக்ரஹத்தையும் தோன்றச் செய்தார். இவருக்குக் காட்சியளித்த விக்ரஹங்களனைத்தையும் இன்றும் ஸ்ரீரங்கத்தில் அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ‘தசாவதார ஸந்நிதியில்’ அதிவிசேஷமாகக் காணலாம். (இத்திருக்கோவில் ஒரு காலத்தில் கோயிலண்ணன் கட்டுப்பாட்டிலிருந்ததாகவும், 18ம் பட்டம் அழகியசிங்கர் காலத்தில் கைமாறியதாகவும் சொல்லுவர்). இங்குள்ள திருமங்கையாழ்வார் விக்ரஹம்தான் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவத்தின் போது எழுந்தருளப் பண்ணியதாகவும், இந்த உற்சவம் முழுவதும் வடக்குச் சித்திரை வீதியிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்கியிருந்ததாகவும் சொல்லுவர். அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது இந்த ஸந்நிதியினை ஸேவிக்கத் தவறாதீர்கள்!
இக்கலியனை மிகவும் கவர்ந்த திவ்யதேசங்கள் திருநறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம், திருவேங்கடம், திருக்குடந்தை ஆகிய திவ்யக்ஷேத்திரங்களாகும். இவர் நாலுகவிப் புலவராவார். அவையாவன ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி என்பதாகும். திருவரங்கத்தில் ஆழ்வார்களின் தீந்தமிழுக்கு, திருவாய் மொழித் திருநாள் ஏற்படுத்தி, பெருவிழா எடுத்த முதல்வர் இவர்தான். திருக்குடந்தை ஆராவமுதன் குறித்து இவர் இயற்றிய ‘திருவெழுக்கூற்றிருக்கை” ஒரு அற்புத சித்ரகவியாகும். காடு, மேடு, ஆறுகள், குன்றுகள் பலவற்றைக் கடந்து எண்பதிற்கும் மேலான திவ்யதேசத்து எம்பெருமான்களைப் பற்றி பாடியுள்ளார். அதிக திவ்யக்ஷேத்திரத்து எம்பெருமான்களை பாடிய பெருமை இவரையேச் சாரும். இவரது வாழ்க்கையும், பாக்களும் மிகவும் சுவாரசியமானவை. பாசுரங்கள் காந்தம் போன்று மனதினை கவர்ந்துவிடும்.
ஏழை ஏதலன் கீழ்மகனென்று எணணாது
இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கி உன் தோழி
உம்பியெம்பியென்றொழிந்தில்லை – உகந்து
தோழன் நீ எனக்கு இங்கொழியென்ற
சொற்கள் வந்து அடியேன் மனந்திருந்திட –
ஆழிவண்ண! நின்னடியினையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே!
ஞானமில்லாதவன், பகைவன், தாழ்ந்த பிறவியுடையவன் என்று சிறிதும் நினைக்காமல் மனதில் இரக்கம் கொண்டு, அதற்கும் மேலே அந்த குகனுக்கு உனது இனிய அருளையும் கொடுத்தாய். கள்ளம் கபடம் இல்லாத மானுடைய இனிமையான பார்வை போன்று கனிவான பார்வையுடைய ‘இந்த சீதை உனக்கு தோழியென்றும், என்னுடைய தம்பியான இலக்குவன் உனக்கும் தம்பியாவான்’ என்று கூறினாய். இதோடு நிற்காமல் மிகவும் உவகையுடன், ‘நீ எனக்குத் தோழன்’ என்று குகனைப் பார்த்துக் கூறினாய். உனது தம்பியான பரதன் ஆட்சி செய்யும் காலத்தில் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்க எண்ணி ‘நீ அங்கேயே இரு’ என்றாய். இவ்விதமான நீ அருளிய சொற்கள் பெரியோர்கள் மூலம் அடியேன் காதில் விழுந்து எனது மனதிலேயே தங்கிவிட்டது. கடல் போன்ற நிறமும் மனதும் உடையவனே! அழகான சோலைகளை உடைய திருவரங்கப் பெரிய பெருமாளே! உனது திருவடிகளே சரணம் என்று நான் வந்தேன்.
நம் தேகமே ஆத்மா, ஆத்மா நம்முடையது, நாம் சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகின்றோமே அதுதான் ஒரு பெரிய களவு. எப்போது மெய்ஞானம் தோன்றி அரங்கனிடத்து ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகின்றோமோ அன்றுதான் நமக்கு விடுதலை!
தாஸன் – முரளீபட்டர்-.
======================================================
————————————————————————————————-
Thondaradipodiazhwar varusha satrumurai – 17.12.17
Kindly click the following link for photos / videos :
Periya Nambi varusha satrumurai – 17.12.17
—————————————————————————–
Thirukarthikai – 03.12.17
Kindly click the following link for pictures:
SRIRANGAM THIRUMANGAI AZHWAR VARUSHA SATRUMURAI – 02.12.17
Following link gives photos taken on 02.12.17 :
Namperumal Kaisika Yekadasi – 30.11.17
Kindly click the following link for photos taken on 30.11.17 :
Namperual Dolosthavam (Unjal utsavam) – 06.11.17 to 14.11.17
Day 01 – 06.11.17
Day 02 – 07.11.17
Day 03 – 08.11.17
Day 04 – 09.11.17
Day 05 – 10.11.17
Day 06 – 11.11.17
Day 07 – 12.11.17
Day 09 – 14.11.17 – Theerthavari
==============================================
Mudalazhwargal varusha satrumurai – 30.10.17
——————————————————————-
Pillailokachariar varusha satrumurai – 28.10.17
———————————————————————
Namperumal Vijayadasamy purapadu – 30.09.17
Kindly click the following link for pictures:
Pictures kind courtesy : Sri Vijayaraghavan Krishnan
——————————————————————————
Uriyadi Utsavam – 14/09/17 – Thursday
Morning Sri Krishnar Purapadu
Evening Uriyadu Purapadu
Kindly click the following link for photos:
Pictures and video kind courtesy : Sri Vijayaraghavan Krishnan
===================================
Thirupavithra Utsavam – 02/09/17 to 10/09/17
Day 07 – 08.09.17
Day 09 – 10.09.17 – Theerthavari
Kindly click the following link for photos:
Video clip:
Pictures and video kind courtesy : Sri Vijayaraghavan Krishnan
Aadi 28 – Naperumal Purapadu – 13.08.17
Kindly click the following link for photos:
Video clip – Kind courtesy: Sri Vijayaraghavan Krishnan
Sri Andal Thiruvaadipura Utsavam at Srirangam Sri Paramapathanathan Sannathi-17th to 26th Jul 17
Pictures kind courtesy : Sri Rengarajan Ravi
Kindly click the following link for photos :
==============================================
Namperumal Jeshtaabishekam- 07.07.17
Kindly click the following link for pictures:
Pictures kind courtesy: Sri Rengarajan Ravi and Sri Elangovan Ramalingam
———————————————————–
Swami Emberumanar 1000th Varusha Thirunatchathiram – 01.05.17
Kindly click the following link for photos :
For Video :
https://m.facebook.com/story.php?story_fbid=1393834794029970&id=100002103890098&_rdr
Pictures and video kind courtesy : Sri Rengarajan Ravi
——————————————————————————
Namperumal Virippan Thirunaal – 17.04.17 to 27.04.17
Kindly click the following link for photos:
Pictures kind courtesy: Sri Rengarajan Ravi, Sri Vakulabharanan Kesavan, Sri Vijayaraghavan Krishnan and Shri Balaji
Thirumulai – 30.03.17
Nagara sothanai – 31.03.17
Kindly click the following link for photos:
———————————————————————–
Aadhi Brahmotsavam – 01.04.17 to 11.04.17
Kindly click the following link for photos:
Pictures kind courtesy: Sri Rengarajan Ravi Sri Vijayaraghavan Krishnan (Video clips and Pictures), Sri.ARS and Mast.Jutur Rishikes
—————————————————————————
Namperumal Theppa Thirunaal Utsavam – 28.02.17 to 08.03.17
Kindly click the following link :
Pictures kind courtesy : Sri.Rengarajan Ravi
=================================================
|
Kindly click the following link for photos:
?key=ZE1LaUpINkxtdDBOeHV6aTZPWVZZdERhR1ByMl93
Pictures kind courtesy : Sri Rengarajan Ravi
================================================
Namperumal Kanu Paarivettai Purapadu – 15.01.17
Kindly click the following link for photos:
Pictures kind courtesy: Sri Rengarajan Ravi
——————————————————————————–
Namperumal Sankaranthi Purapadu – 14.01.17
Kindly click the following link for photos:
Pictures kind courtesy: Sri Rengarajan Ravi
——————————————————————————–
NAMPERUMAL ERAPATHTHU UTSAVAM – 08.01.17 TO 18.01.17
Kindly click the following link for photos :
Pictures kind courtesy: Sri Rengarajan Ravi
NAMPERUMAL PAGAL PATHTHU UTSAVAM – 29.12.16 TO 07.01.17
Kindly click the following link for photos:
Pictures kind courtesy : Sri Rengarajan Ravi
2016
Sri Paramapathanathan Sannathi Sri Andal Markazi matha utsavam – 16.012.16 to 13.01.17
Kindly click the following link for photos :
http://antaryami.net/darpanam/category/news/temple-events/from-central-tn/
————————————————————————–
Namperumal Thirukkarthikai Purapadu – 14.12.16
Kindly click the following link for photos :
https://photos.google.com/album/AF1QipNMpqThf5g34kNLTAyu3mrcUqtiGvCw9lGb0549
Pictures kind courtesy: Sri Rengarajan Ravi
Sri Pillailokachariar varusha satrumurai – 07.11.16
Kindly click the following link for photos:
————————————————————————————
Namperumal Unjal Utsavam – 18.10.16 to 26.10.16
Kindly click the following link for pictures:
Pictures kind courtesy: Sri Rengarajan Ravi
—————————————————————————————————
Vijaya dasami purapadu – Namperumal ambu poduthal – 11.10.16
Kindly click the following link for photos :
https://photos.google.com/share/AF1QipNrz4FZWiZGECR_3BXlXfaJCUBqhKWjJZMBn5vzb6VSd2gFpQWFVBMUUI6hMaIAyA?key=ZFZoSU5hUGhXUGJSY3pqaU41S1ZaNXdabHM1TU9R
Pictures kind courtesy: Sri Rangarajan Ravi and Sri Elangovan Ramalingam
Thirupavithra Utsavam – 13.09.16 to 21.09.16
Kindly click the following link for pictures :
https://photos.google.com/album/AF1QipPh2XyM9MhbUviymgifDY_iRWIg9LKoHLYpmGBB
PICTURES KIND COURTESY: SRI RENGARAJAN RAVI
===========================================
URIYADI – 27.08.16
KINDLY CLICK THE FOLLOWING LINK FOR PHOTOS:
PICTURES KIND COURTESY: SRI RENGARAJAN RAVI
Aadi perukku – Namperumal muthal purapadu – 02.08.16
Kindly click the following link for photos:
https://picasaweb.google.com/111085385486355286722/6314089373880086961
Pictures kind courtesy : Sri Elangovan Ramalingam and Sri Rangarajan Ravi
————————————————————————————————–
Sri Andal Thiruvaadipura Utsavam at Sri Paramapathanathan Sannathi – 27.07.16 to 05.08.16
Kindly click the following link for photos:
https://picasaweb.google.com/111085385486355286722/6312407846332455345
Picture kind courtesy: Sri Rengarajan Ravi swami
Viruppan Thirunaal – 27.04.16 TO 07.05.16
Kindly click the following link for photos :
https://picasaweb.google.com/111085385486355286722/6278554834010015137
Picture kind courtesy: Sri Rengarajan Ravi swami, Sri Vijayaraghavan Krishnan swami, Sri Elangaovan Ramaingam
===============================================
————————————————————————
15.01.16 to 25.01.16 – Boopathy thirunaal utsavam
Kindly click the following link for photos:
https://picasaweb.google.com/111085385486355286722/NamperumalBoopathyThirunaalUUtsavam150116To250116
Pictures kind courtesy : Sri.Rengarajan Ravi
—————————————————————————
Namperumal Shangaranthi Purapadu – 15.01.16
Kindly click the following link for photos:
https://picasaweb.google.com/111085385486355286722/NamperumalSankaranthiPurapadu150116
Namperumal Kanu Parivettai – 16.01.16
Kindly click the following link for photos:
https://picasaweb.google.com/111085385486355286722/NamperumalKanuParivettai160116
Pictures kind courtesy: Annankoil Sri Ramunaja Srinivaan swami
2015
Namperumal Erappattu utsavam – 21.12.15 to 31.12.15
Kindly click the following link for photos:
https://picasaweb.google.com/111085385486355286722/NamperumalErappattuUtsavam211215To301215
Pictures kind courtesy: Srirangam Today Community
==============================================
Namperumal Pagal Pattu utsavam – 11.12.15 to 20.12.15
Kindly click the following link for Pagal Pattu utsava pictures:
https://picasaweb.google.com/111085385486355286722/NAMPERUMALPAGALPATTUUTSAVAM111215TO201215
Pictures kind courtesy: Srirangam Today Community
—————————————————————————————
Namperumal Thirukkarthikai Purapadu – 26.11.15
Kindly click the following link for photos:
https://picasaweb.google.com/100487904221616748382/112815
Pictures kind courtesy: Sri Vijayaraghavan Krishnan swami
Kindly click the following links for pictures :
—————————————————
Namperumal Athyayana Utsavam – 22.12.14 to 10.01.15
Kindly click the following link for photos taken during Namperumal Pagal Pattu utsavam – 22nd to 31st Dec 2014
https://picasaweb.google.com/111085385486355286722/NamperumalPagalPattuUtsavam221214To311214
Kindly click the following link for photos taken during Namperumal Erapattu utsavam – 01st to 10th Jan 2015
https://picasaweb.google.com/111085385486355286722/NamperumalErapattuUtsavam010115To100115
Pictures kind courtesy: Sri Elangovan Ramalingam
2014
ஆதிபிரும்மாத் திருநாள் 05.04.2014 முதல் 15.04.2014 திருவரங்கா! உனை வழிபடும் போதினில் தர்மவர்மாவுடனே அருந்தவ ரிஷிகளும், மாந்தரும் அங்கே ஒருங்கே திரண்டிட்டுன் திருத்தரிசனங்கள் கண்டே உவகையும் பொங்கியே துதித்தார்கள்! ஒரு சிறுகாலம் அனைவரும் அரங்கா! உந்தன் தரிசனத்தைத் திருநகர் இதிலே கண்டே துதிக்க ஆசைமிகக்கொளவே அருளாளர் அத்தர்மவர்மாவும் வீடணன் அவனிடமே ஒரு பணிவோடு அதனைச் சொல்லியே அவன் அனுமதியோடு திருப்பிரம்மோத்ஸவம் நடத்தியே உகந்தான்! பின்னர் வீடணனும்பெருமானே! உனை விமானத்துடனே எடுக்கவே முயன்றிட்டுன் திருச்சங்கல்ப்பத்தால் இயலாமல் போயிட அவன் வருத்தத் திருப்பங்குனியில் ரோஹிணி நண்பகல் அபிஜித் முகூர்த்தத்தில் திருவரங்கத்தே திருப்பிரதிட்டை ஆனாய் அரங்கசோ! – (108 / 52 – 54) (திரு ஆர்.வீ.ஸ்வாமியின் திவ்யதேச மணிமாலையிலிருந்து) பிரும்மலோகத்தில் பிரும்மாவினாலும், அயோத்தியில் ஸ்ரீராமபிரான் உள்பட சூரியகுல மன்னர்களாலும், கொண்டாடப்ட்ட மிகமிக பழமைமிகு உற்சவம் இதுவே..! ஸ்ரீரங்கத்தில் அரங்கன் அமர பெருந்தவம் செய்த தர்மவர்மாவும், ராக்ஷஸகுல தர்மிஷ்டனான வீபிடணனும் ஒன்று சேர்ந்து கொண்டாடிய உற்சவம் இதுவே..! திருவரங்கத்தில் அரங்கன் அமர்ந்தபின் கொண்டாடிய முதல் உற்சவமும் முதன்மை பெற்ற உற்சவமும் இதுவே..! அரங்கனின் ஜன்ம நட்சத்திரம் ரோஹிணி..! பின்னாளில் கிருஷ்ணராக அவதரித்தப்போதும் இந்த ரோஹிணியில்தான் அவதரித்தார்..! ரோஹிணியின் மீதுள்ள மாறாப் பற்றினால், தான் முதன்முதலாக கொண்டாடும் இந்த ஆதிபிரும்மாத் திருநாளை ரோஹிணியில் கொண்டாடத் துவங்குகின்றார்..! ஸ்ரீரங்க மஹாத்மியத்தின் அவதாரிகையில், பிரும்மலோகத்தில் சாதாரண மானுடர்கள் உய்வதற்கு என்னவழி என்று நான்முகனும் மற்றைய தேவர்களும் சிந்தித்துக் கொண்டிருக்கையில்தான், ஸ்ரீமந் நாராயணன் இந்த பிரணவாகார விமானத்துடனும், துவாரபாலகர்களுடனும் மிகமிக விசேஷமாக திருப்பாற்கடலில்அவதரித்ததாகக் கூறுகின்றது. அங்கேயே நிலை கொண்டிருந்தால் மானுடம் எங்ஙனம் உய்வது..? எனவேதான் திருவரங்கத்தினைத் தேர்ந்தெடுத்து குடிகொண்டார். எல்லாம் சரி..! தாயார் கடாக்ஷம் இல்லாமல, அவளது அருள் இல்லாது உய்வது எப்படி..? இத்திருமகன் திருவரங்கத்திற்கு வருகைதரும் முன்பே திருமாமகளானஸ்ரீரங்கநாயகி ஸ்ரீரங்கத்திற்கு வந்துவிட்டதாக “திருஆனைக்கா புராணம்“ (திருவானைக்கோவில் பற்றிய புராணம் – திரு.கச்சியப்பர் எழுதியது) பறைகின்றது. தாயார் முன்கூட்டியே எழுந்தருளி காத்திருந்ததால்தான், பெருமாள் இங்கு எழுந்தருள ஒரு காரணமாயும் இருக்கலாம்..! தமக்கு மிகுந்த சந்தோஷத்தினை அளிக்கக்கூடிய திருவரங்கம் எழுந்தருளியாயிற்று..! எதனால் சந்தோஷம்..! மிக மிக முக்யமான காரணம் இங்குதான் மானுடம் உய்வு பெறும்..! முக்தி அடையும்..! தன்னுடைய சொத்து தன்னை வந்தடையும் எனும் மகிழ்வு..! தாயாரும் பெருமாளும் ஒருமித்து ஒன்றாய் இத்திருநாளில் பங்குனி உத்திரத்தன்று சேர்நதருளினர். பெருமாளின் அவதாரமாகிய ரோஹிணியில் உற்சவம் தொடக்கம்..! தாயாரின் அவதார திருநாளாகிய பங்குனி உத்திரத்தன்றுசேர்த்தி..! தாயார் பூரித்துப் போனாள்..! இம்மணணில் பிறந்த ஜீவன்கள் எல்லாம் கரைசேர்க்க இத்திருநாளில் சங்கல்ப்பம் கொண்டனர் திவ்யதம்பதிகள்..! இதனை பூரணமாக உணர்ந்தவர் நம் ஆச்சார்யரான ஸ்ரீஇராமனுஜர். சரணாகதி அடைய நல்லதருணம் இதுவே என உணர்ந்து “கத்யத்ரயம்“ என்னும் ஸ்ரீரங்ககத்யம், சரணாகதிகத்யம், வைகுண்டகத்யம் ஆகிய மூன்று ரத்னங்களாகிய பாசுரங்களை சமர்ப்பித்து, சாமானியர்களாகிய நாம் உய்யும் வழி காட்டினார். வாருங்கள்..! நாமும் இராமனுஜர் காட்டிய வழியில் இத்திவ்ய தம்பதிகளை வணங்குவோம்..! வாழ்வதனில் உய்வடைவோம்..! ———————————————-
==============================
Day 02 – 05.03.2014 – Wednesday – Evening Hanumantha vaghanam
Day 03 – 06.03.2014 – Thursday – Evening Karpagavirusham
Day 04 – 07.03.2014 – Friday -Evening Velli Garuda vaghanam
Day 05 – 08.03.2014 – Saturday – Irattai Prabhai
Day 06 – 09.03.2014 – Sunday – Yanai vaghanam
Day 07 – 10.03.2014 – Monday
Day 8 – Namperumal Theppam – 11.03.14
Evening purapadu
Theppam
Day 09 – 12.03.14 – Othai prabhai – Panthakatchi
Kindly clcik the following link for pictures:
https://www.facebook.com/media/set/?set=a.225816124211420.51687.172776926182007&type=3
https://plus.google.com/u/0/photos/105569632333377332934?cfem=1 Pictures kind courtesy: Sri Paramaswamy Soundarrajan swami








========================================================
தேரெழுந்துார் கண்ணன் பட்டரைப் பற்றிய ஒரு தகவலை பதிவிறக்கம் பண்ணியிருந்தேன்.
———————————————————————
========================================================
————————————–
ஸ்ரீமந் நாதமுனிகள் பயன்படுத்திய தாளம்..!
கீழ் குறிப்பிட்டுள்ள சுட்டியினை சொடுக்கவும்..!
https://www.facebook.com/photo.php?fbid=10203148398256712&set=gm.199633546896964&type=1
Kindly click the following link for pictures :
http://divyadesamyatra.blogspot.in/search/label/namperumal
Kind courtesy: Sri.Satish Kumar swami The following link gives vaibhavam of this utsavam:
ATHYAYANA UTSAVA VAIBHAVAM – KOIL ATHAN FILE
————————————————————–
Erappattu – 11.01.2014 to 20.01.2014
வைகுண்ட ஏகாதசி – இராபத்து – 1ம் திருநாள் (11.01.2014)
——————————————————–


சிந்திக்கும்; திசைக்கும்; தேறும்; கைகூப்பும்; “திருவரங்கத்துள்ளாய்!” என்னும்* வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்* அந்திப்போதவுணன் உடலிடைந்தானே! அலைகடல் கடைந்த ஆரமுதே!* சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே !..
வைணவர்கள் வாழ்வின் நோக்கத்தினை நமக்கு உணர்த்தும் திருநாள் – நம்மாழ்வார் மோக்ஷம்.
நம்மாழ்வாருக்காக முதல்நாள் பகலிலிருந்து விடிய விடிய அரங்கன் விழித்திருந்து, நம்மாழ்வார்க்கு மோக்ஷம் அளித்து, விடுதலை அளித்து, வந்திடாய் என்று தம் திருவடி கீழ் அமரச் செய்த அரும்பெரும் வைபவம், இன்று நடந்தேறியது.
அரங்கன் திருமாலையில்லாமல் தம் திண்தோள்களுடன் திவ்யதரிசனம் தருவது இத்திருநாள் ஒன்றுதான். நம்மாழ்வாருக்காக தம் மாலையினைக் களைந்து அவருக்கிட்டு, தாம் சாற்றியிருந்த கஸதுாரி திலகமுடன், தம் திருவடிசோதியில் சேர்த்த திருநாள் இது..!
=======================================================
NAPERUMAL PAGAL PATTU UTSAVAM – 01.01.14 TO 10.01.14 வைகுந்த ஏகாதசி – பகல் பத்து முதல் திருநாள் 1.1.2014





——————————————
—————————–
வைகுண்ட ஏகாதசி – பகல் பத்து 7ம் திருநாள் (7.1.2014)
——————————-
வைகுண்ட ஏகாதசி – பகல் பத்து 8ம் திருநாள் (8.1.2014)
ஸ்ரீரங்கத்தின் வரலாற்றில், நாம் என்றென்றும் போற்றி நினைவு கொள்ளும் வகையில், சிறப்பு பெற்ற பெண்மணிகள் ஆறு பேர்…! (வேறு எவரேனும் உள்ளனரா..?) பெரியாழ்வாரின் பெண்பிள்ளை ஆண்டாள் குலசேகராழ்வாரின் பெண்பிள்ளை குலசேகரவல்லி சுரதாணி எனும் பீவி நாச்சியார் பின்தொடர்ந்த வல்லி. கூரத்தாழ்வாரின் துணைவியார் ஆண்டாள். கோவில் தாஸ்யை வெள்ளையம்மாள். பெரியநம்பிகளின் மகள் நப்பின்னை. இவர்கள் அனைவரும் அரங்கனுக்காகவோ அல்லது அரங்கன் மீது அதீத அன்பு கொண்டவர்களுக்காக செய்த தியாகம், நாம் என்றும் போற்றி வணங்குதலுக்குரியது. இவர்கள் அல்லாது சரித்திரத்தில் இடம் பெறாத எத்தனை தியாகச்சுடர்களோ..! சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், சத்துணவு அமைச்சராக திரு. சௌந்தரராஜன் இருந்த சமயம், இந்த மார்கழி மாதத்திற்காக பெரிய பெருமாளுக்கு நான்கு வெல்வெட் அங்கிகள் வழங்கினார். அதில் 1) கீதா உபதேசம் 2) சுயம் வயக்த க்ஷேத்திரங்கள் 3) தசாவதாரம் 4) அஷ்ட லக்ஷ்மி ஆகியவை சமிக்கி வேலைப்பாட்டினால் அற்புதமாக அமைந்திருந்தது. “கிருஷ்ணாஜி“ என்ற நிறுவனத்தின் மூலமாக செய்து வந்தது. அப்போது திரு. சௌந்திரராஜன் அவர்கள், “இவை அனைத்தும் ஒரு முஸ்லீம் அன்பரால் செய்யபட்டது. நம் அரங்கனைப் பற்றி நன்கு அறிந்து, அவரும் இவரிடத்து ஆட்பட்டு, கடுமையான விரமிருந்து செய்தது முரளீ..!” என்று சொன்னபோது, அரங்கனின் அன்பு எங்கெல்லாம் பரவி பாய்கிறது என்று நினைத்து மிகவே மகிழ்ந்தேன். இன்றும் அவைகள் நேர்த்தியாக, புத்தம் புதிது போல் இருத்தலைக் காண்கையில் அந்த முஸ்லீம் அன்பரின் ஈடுபாடும், அன்பும், பெயர் தெரியாத அவரை நினைவு கூறச் செய்கிறது..! அரங்கனின் அன்பு அலை அலையாய் பாய்வது..! என்றும் ஓய்வில்லாதது..!



எல்லையில்லா அன்பைப் பொழிவதும் பெண்மையே..! அளவு கடந்த அட்டகாசத்தினை ஒழிப்பதும் பெண்மையே..! வைணவத்தில் பெண்மையின் பக்தி ஈடு இணையற்றது..! அளவற்ற காதலால் அரங்கனோடு ஜோதிர்மயமாய் கலந்தவர்கள் இருவர்.. ! ஒருவர் திருப்பாணாழ்வார் மற்றொருவர் ஆண்டாள்..!
அரங்கன் ஆசைப்பட்டு ஏற்றுக்கொள்ளும் ஒரே மாறுவேடமும் இந்த “மோகனாவதாரம்“ மட்டுமே..! ஆழ்வார்கள் அரங்கனைத் தாயாகவும் கொண்டாடியுள்ளனர். “திருவரங்கத்தாய்“ என போற்றியுள்ளனர்..!
“த்வமேவ மாதா ச பிதா த்வமேவ –
த்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவ,
த்வமேவ வித்யா திரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவா..”
”நீயே எனக்கு தாய், தந்தை, சகோதரன், பந்து, கல்வி, செல்வம் மற்றும் அனைத்துமே..!”
இவையனைத்திலும் தாயாக பாவிப்பது அவனது எல்லையற்றக் கருணையை நம்பால் பொழிய வைக்கும். ஏனெனில் நாம் எப்படி அவனை பாவிக்கின்றோமோ, அப்படி அவன் மாறும் சுபாவமுள்ளவன். (யத் பாவோ – தத் பவதி..!) தாய் – இயற்கையிலேயே பாசம் மிகுந்தவள் ஆவாள். ஆகவே அரங்கனைத் தாயாக பாவிப்பது சிறந்த பக்தி.
இத்திருநாளில் இத்திருவரங்கத்தாயின் திருவடி பணிவோம்..! உய்வு பெறுவோம்..!
======================================================================================
————————————————————————————————————————————-
2013
13.12.13 – கைசிக ஏகாதசி
Kindly click the following links to know the full details of Kaisiga Puranam:
TEXT BY SRI.K.SRIDHARAN SWAMI
AUDIO BY DR.M.A.VENKATAKRISHNAN SWAMI
Poigaiazhwar and Pillailokachariar Varusha thirunatchathiram – Aipasi Thiruvonam – 10/11/2013
Lokachariar, Srirangam
Kindly click the following link for songs written by Sri R.V.Swamy Pillai on Pillailokachariar
—————————————————————————————————————————————————-
KOIL SRI MANAVALAMAMUNIGAL AVATHARA UTSAVAM – 29.10.13 TO 08.11.13
Sri Serakulavalli thayar and Namperumal serthi sevai
=====================================================
Namerumal Serthi sevai
Namperumal and Kamalavalli Natchiar, Uirayur
Namperumal and Sri Ranganatchiar, Panguni Uthiram
Above pictures kind courtesy: Sri.V.P.Ravi swami
Namperumal and Sri Serakulavalli Natchiar – Sri Rama Navami
=====================================================
SRIRANGA MAHATHMIYAM
=================
THE KING OF THE SRIRANGAM KINGDOM
நாளும் பெரியபெருமாள் அரங்கர் நகைமுகமும்
தோளும், தொடர்ந்து என்னை ஆளும் விழியும்; துழாய் மணக்கும்
தாளும், கரமும், கரத்தில் சங்கு, ஆழியும், தண்டும், வில்லும்
வாளும் துணை வருமே தமியேனை வளைந்துகொண்டே..!
—————————————————————————————————-
09.03.13 – Sri Manavalamamunigal Thiruvathyayana utsavam
Sri Manavalamamunigal, Srirangam – Namperumal Acharian
The following link gives a brief details of this utsavam- This article was written by Sri.U.Ve,Sathabishkagam Govinda Narasimhachariar Swami, Srirangam:
MANAVALA MAMUNIGAL THIRUVADAYANA UTSAVAM AT SRIRANGAM-KOIL ATHAN FILE
==================================================
Srirangam Sri Koorathazhwan varusha satrumurai – 01.02.13
Pictures kind courtesy: Srirangam Sri Madhavan swami
————————————————————————
Srirangam Thirumazhisai azhwar varusha thirunatchathiram – 29.01.13
Namperumal Boopathy Thirunal Utsavam-18.01.13 to 26.01.13
For pictures, please click the following link
https://picasaweb.google.com/111085385486355286722/NamperumalBoopathyThirunalUtsavam180113To280113#
Pictures kind courtesy: Sri Prasanna Venkatesan swami
————————————————————————————–
For pictures, please click here:
https://picasaweb.google.com/111085385486355286722/NaperumalSankaranthi140113AndKanuParivettai150113#
———————————————————————————————-
Namperumal Thiru Adhyayana Utsavam-14/12/12 to 03.01.13
Pagal Pathu 14.12.12 to 23.12.12
————————————————————————————–
Namperumal Erapathu Utsavam – 24.12.12 to 02.01.13
For further pictures , please click the following link:
For pictures taken last year (2011), please click the following link:
https://picasaweb.google.com/105604527409987886250/VaikuntaEkadasi26122011Onwards?noredirect=1#
The following link gives the history of this utsavam and arayar sevai details
ATHYAYANA UTSAVA VAIBHAVAM – KOIL ATHAN FILE
———————————————————————————-
Namperumal Kaisiga Ekadasi – 24.11.2012
========================================
Sri Paramapathanathar Sannidhi, Srirangam
Nandana Varusham Sri Andal Margazi Matha Kontattam –
16.12.12 to 13.01.13
For Pictures, please click here:
–
——————————————————————————————-
Thirupaanaazhwar Avathara Utsavam at Uraiyur from 20th to 29th Nov 2012


The following link gives a rare collection of Thirumangai azhwar divya desa mangalasasana pasurangals. These pasurangals are taken out from Periya thirumozi, Thirukkurnthandagam, Thirunedunthandagam, Siriyathirumadal, Periyathirumadal.
Thirumangai azhwar mangalasasana pasurangals-koil athan file
==========================================================
=======================================================
MAMPAKKAM SRI ADIKESAVA PERUMAL VARUSHA UTSAVAM-07.10.12
Sri Yathirajavalli Sametha Sri Adikesava Perumal Thirukkoil, Mampakkam, Thirukazukundram Taluk, Kanchipuram Dt.
FOR PICTURES, PLEASE CLICK HERE
https://picasaweb.google.com/111085385486355286722/MAMPAKKAMSRIADIKESAVAPERUMALVARUSHAUTSAVAM071012#
=============================================
————————————————————————————————-
===================================
ஆண்டாளின் ஆடிப்பூர கொண்டாட்டம்
நேற்றைய தினம் திருவாடிப்பூர உற்சவத்தின் 7ம் திருநாள். ஆண்டாள் கணா காண்கின்றாள். மத்தளம் கொட்டி, வரிச்சங்கம் ஊதி, அரங்கன் அவளை கைப்பிடிப்பது போன்று. அந்த காட்சியினை தத்ரூபமாக அலங்கரித்துள்ள நயத்தினை கண்டு மகிழலாம் வாருங்கள். ஜோதிடத்தில் ஜாதக கட்டத்தில் 7மிடம் களத்திர ஸ்தானமாகும். இந்த உற்சவம் ஆரம்பித்து 7ம் திருநாள் அன்று ஆண்டாள் தம் தெய்வீக களத்திரனாகிய அரங்கனைக் காண்கின்றாள்.
திருவாடிப்பூரமாகட்டும் அல்லது ஆண்டாள் உகந்த மார்கழி மாதமாகட்டும், இந்த சந்நிதியிலுள்ள ஆண்டாள் தானே மாறுவேடமணிந்து அலங்கரித்துக் கொண்டாடும் அழகே தனி..! ஆண்டாள் என்றாலே ஆளுமை மிக்கவள் என்று ஒரு பொருள். இந்த ஆண்டாளோ மிக மிக ஆளுமை மிக்கவள். ஸ்ரீவேங்கடகிருஷ்ணனாய் இவள் நிற்கும் கம்பீரத்தினைப் பாருங்களேன். கிருஷ்ணன் கூட இப்படி நின்றிருப்பானோ என்பது சந்தேகமே..! எந்த எம்பெருமானின் வேடம் ஏற்றாலும் அந்த திவ்யதேச எம்பெருமானகவே மாறிவிடும் மாயாஜாலம் நம்மை வியக்கவைக்கின்றது. இந்தத் திருவாடிப்பூர வைபவத்தில் நம்மை மெய்மறக்க வைக்கும் காட்சிகள் சில காண்போம் வாரீர்…!
மேலும் நம்மை அயரவைக்கும் ஆண்டாளின் கொண்டாட்டத்திற்கு கிளிக் செய்வீர்
—————————————————————————————————-
FOR ARTICLE PLEASE CLICK HERE
KIND COURTESY : GOMADAM SRI.GOPALAKRISHNAN AZHAGIYAMANAVALAN SWAMI, SRIRANGAM
————————————————————————————————–
ஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012
—————————————————————————————————————-
—————————————————————————————————————-
”லோகா சமஸ்தா சுகினோ பவந்து…”
”லோகா சமஸ்தா சுகினோ பவந்து…” வைணவத்தின் ஒரு உன்னதமான, உண்மையான பிரார்த்தனை..! இதற்கு முன் வரும் பிரார்த்தனை என்னத் தெரியுமா..? ”அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ….! ” என்று தொடங்குவர். அரங்கநகரும், அரங்கனின் அடியார்களும் வைணவத்தின் ஆனிவேர். இங்கு அரங்கனும், அரங்கன் திருமுற்றத்து அடியார்களும் மகிழ்ந்து இருப்பாரானால் இந்த உலகும் மகிழும். மலர்ந்திருக்கும். ஏனென்றால் அரங்கன்தான் பிரும்மாக்களுக்கும், வேதசொரூபமாம் கருடனுக்கும் அதாவது வேதமனைத்திற்கும், வைகுண்டத்திற்கும், மூவுலகிற்கும், அகில லோகத்திறகும் இராஜா..! இந்த இராஜாவானவர்தான் ஸ்ரீரங்கத்திலும் நம் அனைவரது உள்ளத்திலும் பள்ளிக்கொண்டு, நம்மைக் கொள்ளைக் கொண்டுள்ளான். இதனை ஆதிசங்கரர்
“ப்ரும்ஹாதி ராஜே கருடாதி ராஜே வைகுண்ட ராஜே ஸூரராஜ ராஜே த்ரைலோக்யராஜே அகிலலோக ராஜே ஸ்ரீரங்கராஜ ரமதாம் மநோ மே..”
என மிக அழகாக வர்ணிக்கின்றார்.
ஸ்ரீரங்கம் – உலகமனைத்திற்கும் மையமாக விளங்கும் ஒரு உன்னதமான சக்தி. பரமபதம் முழுவதும் எப்படி இந்த உலகமானது கடலால் சூழப்பட்டுள்ளதோ அதைப்போன்று அமிர்தத்தினால் சூழப்பட்டுள்ளதாம். அந்த அம்ருதகடலானது, ஒரு சமயம் தளும்பி, ஒரு சில துளிகள் விழுந்த இடமே, ஸ்ரீரங்கம்…! காரணகாரியமில்லாமல் அரங்கன் எந்த ஒரு இடத்திலும் வந்து அமரமாட்டான். அரங்கன் எழுந்தருளினால் ஏதேனும் ஒரு மகத்துவம் ஒளிந்திருக்கும். ஸ்ரீரங்கம் முழுவதுமே வைகுண்டத்திற்கும் மேலானது. ஏன் தெரியுமா..? இங்கு அரங்கன் தரிசிப்பதற்கு சுலபமமானவானகவும், எளியவனாகவும் உள்ளான். இங்கு அவன் குளிர்ந்தால் உலகம் குளிர்கின்றது. இங்கு ஏதேனும் ஒரு மாறுதல் ஏற்படின் இந்நாடடிற்கோ அல்லது இராஜாவிற்கோ ஏதேனும் ஒரு மாற்றம் உண்டாகின்றது. இது உண்மை.
ஒரு சமயம் நம்பெருமாள் செங்கோலை வலதுபுறம் வைத்து புறப்படுவதற்கு பதில் இடதுபுறம் வைத்து புறப்பட்டு விட்டார். இது அர்ச்சகரின் கவனக்குறைவால் நடந்த செயல் என்று எடுத்துக்கொண்டாலும் – இது ஒரு ராஜாங்கத்தில் நடைபெறப் போகின்ற மாற்றத்தினை அறிவித்த, ஒரு நிமித்தமாகவே அமைந்தது. சில செயல்கள் நடைபெற்றன – ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. ஒரு சமயம் செங்கோல் புறப்பாட்டின் போது பயங்கரமாக ஆடியது. ஆட்சி கவிழ்ந்தது. இம்மாதிரி நம்பெருமாளின் செங்கோல் – ராஜாங்கத்தின் ஒரு அங்கமாக இன்றும் விளங்குகின்றது. இந்த செங்கோல் மாமன்னன், மஹாதபஸ்வி இஷ்வாகு மஹாராஜாவினால் அரங்கனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செங்கோலாகவே என் மனது என்றும் நினைக்கும். இதனை கையில் எடுக்கும்போதெல்லாம் எவ்வளவு மன்னர்களை இது பார்த்திருக்கும், அனுக்ரஹித்திருக்கும், பாதித்திருக்கும் என்ற எண்ணம் என்னுள் எழும். இம்மாதிரிதான் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒவ்வொரு இடமும் பொருளும் ஏதேனும் ஒரு முக்கியத்துவம் பெற்றிருக்கும்.
பலிபீடம் – இங்கு தம் பேராசைகளையும், பொறாமைகளையும் பலி கொடுத்து தாஸாதிதாஸனாய் உள்ளன்போடு அரங்கனை நெருங்குவோர் அனைவரும் ஏற்றம் பெறுவர்.
சுமார் 12 ஆண்டுகாலமாக நின்றுபோயிருந்த இந்த பலிபீட திருமஞ்சனம் மீண்டும் நடைபெற அரசாங்கத்திலிருந்து ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. நின்று போன திருமஞ்சனம் இந்த வருடம் தொடர்ந்தது. முதல் நாள் முதல் தமிழ்நாடு முழுவதுமே ஆங்காங்கு நல்ல மழையும், காற்றும், காற்றலை மூலமாக தடையில்லா மின்சாரமும் நம் தமிழ்நாட்டினை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
ஸ்ரீரங்கத்தினை இன்னும் நாமும், நமது அரசாங்கமும் முனைந்து, இந்த உலகினைப் பற்றிய அக்கறையோடும், பக்தியோடும், ஒருவருக்கொருவர் அகங்காரங்களோ, மமதையோயில்லாமல் சீர்செய்வோமாயின் அரங்கன் ஆசீர்வதிப்பான். அடியார்கள் வாழ்வர் – அரங்கநகர் வாழும் – லோகம் சுகம் பெறும்.
திருவரங்கத்தில்இன்று (30.04.2012) நடைபெற்றஆரவாரமில்லாதஒருஅற்புதசேர்த்திஉற்சவம்
(ஸ்ரீரங்கம்முரளீபட்டர்)
அரங்கனோடு அற்புதமாக கலந்தவர்கள் தாயார் ரங்கநாயகி, காவிரி, கமலவல்லி , சேரகுலவல்லி, ஆண்டாள், துலுக்கநாச்சியார் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர்.
இதில் அரங்கன் திருவரங்கத்திற்கு வரும் முன்னமேயே ரங்கநாயகித் தாயார் எழுந்தருளி அரங்கன் அமர்ந்தபின் வெளிப்பட்டவள். காவிரியும் அரங்கன் வருவதற்கு முன்னமேயே அவனுக்கு தன்னையே ஒரு மாலைப்போல் இட்டு ஒரு மணல்திட்டை ஏற்படுத்தியவள். இவர்களைத் தவிர ஏனையோர் அரங்கன் எழுந்தருளியபிறகு கலந்தவர்கள்.
இராமன் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார் . இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான ‘புனர்வசு’ அன்று அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது. இராமயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்திருக்கின்றார். சில கட்டங்களில் கொதித்தெழுந்து தன் சேனைகளுடன் இராவணனுடன் யுத்தம் செய்ய, காலக்ஷேபத்தில் மெய்மறந்து, புறப்பட்டிருக்கின்றார். இத்தனைக்கும் இவருக்கு ‘திடவ்ரதன்’ என்று பெயர்.. மாமன்னன்..! சோழ, பாண்டிய அரசுகள் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கின்றார்.
‘இராம” என்னும் நாமம் இவரை மெய்மறக்க செய்திருக்கின்றது. அனைத்தையும் மறந்து, அவன் ஒருவனை மட்டுமே சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள். இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள். இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்றே அழைக்கப்படுகின்றது. இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும்! மற்ற ஆழ்வார்க்கு இல்லாத ‘பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப்பெருமான்! இவர் பாட ஆரம்பித்த முதல் பாடலே அரங்கனை முன்நிறுத்திதான்.
”இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த – அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும் அணிவிளங்கும் உயர்வெள்ளையணையை மேவி – திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் – கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணினைகள் என்று கொலோகளிக்கும் நாளே?”
(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ?) என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம். இந்த தாபமிருந்தால் போதும் – அவன் செயல்பட தொடங்கிடுவான்.
ராஜா குலசேகரருக்கு அரங்கனோடும் அவன்தம் அடியாரோடும் என்று பித்தாகி பிணைந்து நிற்போம் என்று மிக ஆசை. வைணவ குழாமோடு கூத்தாட ஆசை. அரச பொறுப்பு குறுக்கே நின்றது. அமைச்சர்களின் ஒரு சூழ்ச்சி, குலசேகர மன்னனின் அரசப் பற்றை அறுத்தது. அரங்கன் பற்று மிகுந்தது.
இதில் அமைச்சரின் சூழ்ச்சியெல்லாம் அரங்கனின் சித்தமே. இவர் அரங்கனுக்காக ஏங்கினார். . அவன் அதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தி அவராக எல்லாம் துறக்கும்படியாக செய்து அவனருகே இழுத்துக்கொண்டார். இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அரங்கனுக்கு நிகர் அரங்கனே..!
ஆழ்வாராதிகள் தொடங்கி பூர்வாச்சாரியர்கள் ஏன் இன்று வரை யாரை எப்படியெப்படி இழுத்துக் கொள்ள வேண்டுமோ அவர்களை அவர்களாகவே வரும்படி செய்வான் இந்த மாயவன்! யாராவது ”தான்தான்” ; என்று அகங்காரம் கொண்டால் அவர்களாகவே அவர்கள் கண்களைக் குத்திக்கொள்ளும்படியும் செய்வான்!.
அரங்கனை அனுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை. யாரை எண்ணி எண்ணி அவரும் அவரது மகளான குலசேகரவல்லியும் ஏங்கினார்களோ அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறுப்பெற்றார். அரங்கன் மனமுவந்து ஏற்ற அடியாள் இந்த குலசேகரவல்லி!. இந்த அரங்கனின் அடியாள் ஆண்டாளுக்கு முன்னோடி!. ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தான் அரங்கன்.! இன்றும் கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி! அரையர்கள் பெருமாள் திருமொழி ஸேவிக்க ஜனங்கள் மத்தியில் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று ஏகஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள் இருவரும்! அதிகம் ஆரவாரமில்லாத இந்த அற்புத சேர்த்தி உற்சவம் அர்ச்சுனன் மண்டபத்தில் இன்று 30.04.2012 நடைபெற்றது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் இந்த சேரகுலவல்லிக்கு பொன்னாலானத் திருமேனியே செய்து வைத்தான். இந்த விக்ரஹம் மிலேச்சர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் கோவிலார்கள் பஞ்சலோகத்தில் செய்துள்ளார்கள். குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!. இவரால் இயற்றப்பட்டதுதான் ‘முகுந்த மாலை” என்னும் அற்புத ஸமஸ்கிருத துதி!.
பல்லாண்டு பாடும் பாகவதர்கள் கூட்டத்தில் பாடுவதையும், ஆடுவதையும், அவர்களோடு மன்னன் என்ற பற்று அறுத்து பாகவதன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றார் குலசேகரப் பெருமான்..!
(இன்று (30.4.2012 நடைபெற்ற சேர்த்தி உற்சவத்திலிருந்து)
========================================================================================