ஸ்ரீ:
Forthcoming events at Srirangam
Kaisika Yekadasi – 08.12.19
Thirumangai mannan and Nampillai varusha satrumurai – 10.12.19
Thiruppanazhwar varusha satrumurai – 11.12.19
Koil Thirukkarthikai – 12.12.19
===================================
ஸ்ரீ காட்டழகிய சிங்கர் கோயிலின் ” மஹாசம்ரோசணம்” – 01.12.2019
—————————————————————
Sri Ranganayaki Thayar Unjal utsavam – 02.11.19 to 08.11.19
Pillailokachariar Varusha Satrumurai – 04.11.19
Mudalazhwargal Varusha Satrumurai – 07.11.19
——————————————————————————-
Sri Manavalamamunigal Thiru Avathara Utsavam – 23.10.19 to 01.11.19
Day 10 – 01.11.19 – Satrumurai
Purattathi – 11.10.2019 – Koil Kanthadaiannan varusha satrumurai
—————————————————————————————-
Sri Ranganayaki Thayar Navarathiri Utsavam – 29.09.19 to 07.10.19
Day 07 – Thiruvadi sevai – 05.10.19
Day 09 – Sarasvathi Pujai – Navarathiri utsava satrumurai – 07.10.19
Vijayadasami – Namperumal purapadu – 08.10.19
Morning – Pallakku
Aasthanam at Kattu azhagiyasingar sannathi
Evening – Kuthiraivaghanam
—————————————————————————–
Thirupavithra utsavam – 09.09.19 to 17.09.19
07th day – 15.09.19 – Namperumal Upayanachimarudan Purapadu – nel alavu
09th day – 17.09.19 – Satrumurai – Theerthavari at Chandrapushkarani
Koil Sri Jayanthi – 24.08.19
கொண்டல் வண்ணனைக் கோவலனாய், வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
Uriyadi- 25.08.19
Namperumal Purapadu to Uriyadi aasthana mandapam
மதியம் கோவிலில் இருந்து புறப்பட்டு அம்மாமண்டபம் ரோடு கிருஷ்ணா ஜெயந்தி மண்டபத்தில் 3.30 எழுந்தருளி பின்னர் மழை வந்த படியால் .. வீதி இல்லை என்று முடிவாகி ..
பெருமாள் மாலை 6.30 PM கோவிலுக்கு புறப்பாடு தாமதம் ஆகி 7.38 க்கு கிளம்பி வீதி சுற்றாமல் நேரே ரெங்க ரெங்கா கோபுறத்திற்கு முன் கோபுரத்தில் நின்று கொண்டு … கிருஷ்ணர் உரியடி மண்டபத்தின் முன்பாக எழுந்தருளி உரியடி கண்டருளினார்
Namperumal Uriyadi purapadu
Koil Erupathiettam (28) perukku – 13.08.19
நம்பெருமாள் ஆடி28- திருக்காவேரிக்கு எழுந்தருளல் (முதல் புறப்பாடு)
Kindly click the following link for photos :
—————————————————————————————————————————–
Mulam – 15/07/2019 – Monday
Srisailesa thanian avatharathinam
கோதைத் துதி-30
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 01.07.2019)
ஒரு பரிதாபீ வருடத்தில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார்..!
“நாளைமுதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்தில், பெரிய வண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய, திருவாய்மொழிப்பொருளை, ஈடுமுப்பத்தாறாயிரத்துடன் நடத்தும்”
என்று நியமித்தருளினார் நம்பெருமாள்..!
சொன்னதோடு மட்டுமின்றி, தம்முடைய ஒரு வருடத்தியத் திருநாட்களையெல்லாம் நிறுத்தி வைக்கின்றார்..!
கலி 4533 பரீதாபீ வருஷம், ஆவணிமாதம் 31ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சுக்ல சதுர்த்தி, ஸ்வாதி நக்ஷத்ரம் (16-9-1432) ஈடு துடங்கி, ஸ்ரீசைலேச தனியன் அவதரித்த நாள்: கலி 4534 – பிரமாதீச வருஷம் ஆனி மாதம் பௌர்ணமி ஞாயிறு, மூலநக்ஷத்ரம் (9-7-1433) சாற்று முறையன்று அர்ச்சக குமாரனாகத் தோன்றினார் அரங்கன்..!
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்வணம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்”
என்று தனியன் சொல்லி, ”அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்” என்று வணங்கி நிற்கின்றார்..!
“பக்தைர் பாகவத ஸஹா” “பாகவத ப்ரியன்” என்று பரமபாகவதர்களுக்கு தோழனாகவும், உற்றவனாகவும் மட்டுமின்றி தாஸனாகவும், பரம சிஷ்யனாகவும் இருக்கின்றார் அந்த பரமாத்மா..!
————————————————————————
Kindly click the following links for Srisailesa vaibhavam and pasurams to be chanted on Aani thirumulam day ::
aani thirumulam – Koil Athan file
aani mulam – srisailesa vaibhavam – koil athan file
Aani Thirumulam – Pasurams anushtanam – Koil Athan File
Koil Srirama Navami – 13-05-2019
சேரகுலவல்லி தாயார் சேர்த்தி
Swami Emperumanar varusha thirunatchathiram – Chithirai – Thiruvathirai – 09.05.19
“வாழி யதிராசன்..!”
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 9.5.2017)
”வையம் தழைக்க, வைணவம் காக்க, வைகுண்டத்திலிருந்து வந்துதித்த உடையவரே….”
எம்பெருமானாரின் திரு அவதார தினமாகிய இன்று, அவரிடத்துப் பகவான் பேசிய சில தெய்வீக வார்த்தைகளைக் காண்போ்ம்..!
நம்பெருமாள்
”உபயவிபூதி ஐஸ்வர்யங்களையும் உமக்கேத் தந்தோம்..! நீர் உபயவிபூதிக்கும் இனி “உடையவர்”.
திருவேங்கடமுடையான்
”உமக்கும் உம்முடையார்க்கும் உபயவிபூதி ஐஸ்வர்யத்தையும் தெற்கு வீட்டில் தந்தோம்..!”
பேரருளாளர்
”யாதவ பிரகாசர் உம்மை பிரதக்ஷிணம் செய்து ஸந்யாசம் கொள்வார்..”
திருக்குறுங்குடி நம்பி
இராமானுசரை ஆசாரியாராக உடையோம்.
அழகர்
”நம் இராமனுசனை உடையவராயிருந்தும், நீங்கள் சிஷ்யராக நினைத்திரும்..”
திருநாராயணப் பெருமாள்
இராமனுசர் மடியில் தவழும் “செல்லப்பிள்ளை“யாகவே ஆனார்.
தாஸன் – முரளீ பட்டர்
———————————————-
ஸ்ரீயதிராஜரின் பாதயாத்திரை..!
(முரளீ பட்டர்)
நேற்று இரவு 1030 மணிக்கு மேலிருக்கும்..! தஞ்சாவூர் சாலையில் ஸ்ரீரங்கம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன்..! சிறு சிறு குழுக்களாக ஜனங்கள் பச்சைநிற வேஷ்டி அணிந்த வண்ணம் வெறும் காலுடன் வேகமாய் நடை போட்டு பயணித்து கொண்டிருந்தனர். அவர்கள் இந்த வேகத்தில் சென்றால் குறைந்தபட்சம் ஒரு இரவிற்குள் 50 கி.மீ துாரம் நடப்பார்கள்..! பல வசதிகள் நிறைந்த இந்த காலத்திலும் அவர்களது இந்த வேண்டுதல், அர்ப்பணிப்பு, நடைபயணம் …! அவர்களது யாத்திரை சுபமாய் அமைய மனதார பிரார்த்தித்தேன்..! அரங்கனை நமஸ்கரித்தேன்..!
ஸ்ரீரங்கம் எல்லையினை அடைந்தேன்..! என் எண்ணத்தில் உடையவரினைப் பற்றிய சிந்தனைத் தாக்கியது..! அடடா..! அவரளவு நடந்தவர் வைணவத்தில் எவரும் உண்டோ..? நடந்து நடந்தே நொந்த பாதங்கள் அன்றோ அவரது மலர்பாதங்கள்..!
ஸ்ரீரங்கஸ்ரீ பொறுப்பேற்ற உடையவர் பெரியநம்பிகளை ஆஸ்ரயித்து த்வய மந்த்ரத்தின் விரிவான அர்த்தங்களை உபதேசிக்கப்பெற்று மகிழ்ந்தார். பெரியநம்பிகள் ‘இதைக்காட்டிலும் இன்னமும் சில விசேஷ மந்த்ரங்களும், அர்த்த விசேஷங்களுமுண்டு. இவற்றினை ஆளவந்தாரின் அந்தரங்க சீடரான திருக்கோட்டியூர் நம்பி உபதேசிக்கப் பெறுவாய்’ என்றருளுகின்றார்.
முதன்முறை சென்று திருக்கோட்டியூர் நம்பிகளை பணிந்தபோது, நம்பிகள் உடையவரை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. ‘எவரிடத்தும் சொல்வதற்கில்லை” என்று உடையவரின் முகம் பாராமலேயே திருப்பியனுப்பி விட்டார். பின்னர் திருக்கோட்டியூர் நம்பிகள் ஒருமுறை ஸ்ரீரங்கம் வருகின்றார். அரங்கனைத் தொழுகின்றார். நம்பெருமாள் ”நம் இராமனுசனுக்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேசியும்” என்று அர்ச்சகர் மூலமாக பேசுகின்றார்.
அதற்கு நம்பிகள்,
”நா ஸம்வத்ஸரவாஸிநே ப்ரப்ரூயாத்”
ஒரு வருடமாவது குருவிற்கு பணிவிடை செய்யாதவனுக்கு உபதேசிக்கலாகாது.” எனவும்,
இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
நா சாஸூஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி
பரம ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை, தவம் புரியாதவனுக்குச் சொல்லலாகாது.
(தவமே புரிந்தவனாயினும் உன்னிடமும் என்னிடமும்) பக்தியில்லாதவனுக்கு ஒரு போதும் உபதேசிக்கக் கூடாது.
(தவமும் பக்தியுமிருந்தாலும்) குருவிற்கு பணிவிடை செய்யாதவனுக்கு கூறலாகாது.
(வேறு எத்தனை குணமிருந்தாலும்) என்னைக் குறித்து அஸூயை கொள்பவனுக்கு சொல்லவேக் கூடாது.
என்று பல சாஸ்திர மேற்கோள்களை அரங்கனிடத்துச் சுட்டிக் காண்பிக்கின்றார் நம்பிகள்.
அதற்கு அரங்கன்,
‘சரீரத்தையும், பொருளையும், அறிவையும், வஸிக்குமிடைத்தையும், செயல்களையும், குணங்களையும், பிராணனையும், ஆச்சார்யனுக்காகவே என்று எவன் இருக்கின்றானோ அவனே சிஷ்யனெனத் தக்கவன். வேறு விதமாகயிருப்பவன் சீடனல்ல. இந்த லக்ஷணங்களை பூர்த்தியாக உடைய உடையவருக்கு உபதேசிப்பதற்கு எந்த தோஷமுமில்லை”
என்று அருளுகின்றார்.
அரங்கன் வாக்கினால் திருப்தியடைந்த நம்பி, அங்கு இவர் ஏதும் கூறமாட்டாரோ? என்று பரிதவிப்புடன் காத்திருந்த உடையவரை நோக்கி, ”ஊருக்கு வாரும்” என்று கூறி புறப்பட்டார். ஆனந்தமுடன் இராமனுஜரும் திருக்கோட்டியூர் அடைய, ”இன்றைக்குப் போய் வாரும்” எனத் திருப்பி அனுப்பி விட்டார். இம்மாதிரி ஒரு முறை இரு முறை அல்ல. பதினெட்டு முறை அலைய விட்டார்.
இராமனுஜர் கண்களில் நீர் ததும்ப வெம்பிவிட்டார். அச்சமயம் திருக்கோட்டியூர்நம்பியின் சீடர் ஒருவர் அரங்கனைத் தரிசிக்க வருகின்றார். அவரிடத்து, ”பூந்துழாய் முடியார்க்கு தகவல்ல. பொன்னாழிக்கையார்க்குத் தகவல்ல” (திருத்துழாயையும், பூவினையும் தலையில் தரித்திருக்கும், சங்குசக்ரதாரியாகயிருக்கும் உங்கள் பெருமாளுக்கு இது நியாயம்தானா?)’ என்று வருத்தப்படுகின்றார்.
திருக்கோட்டியூர் சென்ற அந்த சீடர் தன் குருவிடத்து உடையவரின் ஏக்கத்தினைக்கூறி தாமும் வருத்தப்படுகின்றார். நம்பிகளுக்கு உடையவரிடத்தில் உபதேசிக்கலாம் என்ற நம்பிக்கை அப்போதுதான் வருகின்றது. மீண்டும் அவரையே ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி ‘தண்டும் பவித்ரமுமாக தாம் ஒருவர் மட்டுமே வருவது” என்று அழைக்கின்றார்.
உடையவர் தம் சீடர்களான முதலியாண்டன் மற்றும் கூரத்தாழ்வானுடனும் திருக்கோட்டியூர் சென்று நம்பிகளிடத்து தண்டன்சமர்ப்பிக்கின்றார். “உம்மை மட்டும்தானே வரச்சொன்னேன்? யார் இவர்கள்?” என நம்பி வினவ இவர்களைக் காட்டி இவர்கள்தாம் ”எம் தண்டும் பவித்ரமும்” என உரைக்கின்றார். இவர்கள் அனைவரிடத்தும் திருப்தியடைந்த நம்பிகள் ”இவ்வர்த்தத்தை நீங்கள் மற்ற யாருக்கும் உபதேசிக்கக் கூடாது” என பிரதிக்ஞை வாங்கிக்கொண்டு நலந்தரும் சொல்லான பெரிய திருமந்த்ரமான, எட்டு எழுத்தேக் கொண்ட அஷ்டாக்ஷரத்தினை , பதம் பதமாக பிரித்து விசாலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நாத்தழும்பேற அனுசந்திப்பதான நாராயண மந்திரத்தினை உபதேசிக்கின்றார்.
உபதேசிக்கப் பெற்ற உடையவர் அடுத்தநாள் திருக்கோட்டியூர் ஸந்நிதியில் அநேக ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தாம் பெற்ற திருமந்திரத்தினை பரமரஹஸ்யார்த்தத்தை உபதேசிக்கின்றார்.
இதனையறிந்த திருக்கோட்டியூர் நம்பி அதிர்ந்தார். வெகுண்டார். ‘ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று நியமித்த பிறகுதானே சொன்னோம். எந்த பலத்தில் அதனை மறந்து, மறுத்து உபதேசித்தீர்;” என்று கடுகடுக்க, ”ஆச்சார்ய நியமநத்தினை மறுத்த எனக்கு நரகம் உறுதி’ என்கிறார் பணிவாக. மேலும் தொடர்கின்றார், ”இந்த பாபத்தினால் அடியேன் ஒருவனேயன்றே நரகம் புகுவேன். தேவரீர் திருவடிகளை முன்னிட்டுச் சொன்னதினாலே இவ்வர்த்தத்தைக் கேட்ட, திருமந்திரத்தினை ஜபம் செய்கின்ற ஆத்மாக்கள் மேன்மையேயடையுமே” என்று கருதியே உபதேசித்தோம் என்று பணிவோடு நம்பிகள் திருவடி தொழுது கண்ணீரோடு உரைக்க, நம்பிகளுக்கு உள்ளுணர்வு உரைத்தது. இந்த உணர்வு, பரஸம்ருத்தி நமக்கு கூடிற்றில்லையே என்று வருத்தமுற்று கலங்குகின்றார். தம் திருவடிகளில் வீழ்ந்த உடையவரை தம்மோடு வாரியணைக்கின்றார். ‘எம்பெருமானாரே! வாரும்” என்று ஆரத் தழுவுகின்றார். இதுநாள் வரையில் இத்தர்ஸநம் (திருமந்திரப் பொருள்) பரம ரஹஸ்யமாக வைதீக சித்தாந்தமாகயிருந்தது. இன்று முதல் இது ‘இனி
”எம்பெருமானார் தர்ஸநம்” என்றே அழையுங்கள்’ என்று கூடியிருந்த அனைத்து வைணவர்களுக்கும் விண்ணப்பம் செய்தார்.
இந்த மண்ணுய்ய, மண்ணுலகிலுள்ள மனிதர்கள் உய்ய, இவ்வொரு வைபவத்திற்காக உடையவர் நடையாய் நடந்தது ஏறத்தாழ 3240 கி.மீட்டருக்கும் அதிகமாகத்தானிருக்கும்..!
தாஸன் – முரளீ பட்டர்
11.05.2014 தேதிப் பதிவு
————————————————————————
Namperumal Viruppan thirunaal – 25.04.19 to 05.05.19
Kindly click the following link for photos :
———————————————————————-
Chithira pournami – Gajendra moksham – 19.04.19
=======================================
Namperuaml Aadhi Brahmotsavam 13.03.19 to 23.03.19
Kindly click the following links for photos :
Namperumal Theppa thirunaal – Thirupallioota utsavam – 08.02.19 to 16.02.19
“மாசி கருடன்“
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 12.2.2019)
ஸப்த மோட்ச புரிகள் (முக்தி தரும் தலங்கள்) ஏழு. அவை
1) வாரணாசி 2) அயோத்தி 3) காஞ்சிபுரம் 4) மதுரா
5) துவாரகை 6) உஜ்ஜைன் 7) ஹரித்துவார்.
வாரணாசி, காசி என்றும் பனாரஸ் என்றும் அழைக்கப்படும். “வருணா” என்ற ஆறும் “அசி“ என்ற ஆறும் இங்கு பாயும் கங்கையில் கலப்பதால் வாரணாசி என்றானது.
காசி ஒரு சிறந்த முக்தி தாயகம்.
பௌண்டர வாசுதேவன் எனும் மன்னன், தன்னையே வாஸூதேவனாக எண்ணிக்கொண்டு, செயற்கையாக சங்கும் சக்ரமும் தரித்துக்கொண்டு, பகவான் கிருஷ்ணரைப் போருக்கு அழைத்தான்..!
(ஏற்கனவே நடந்த ஒரு போரில் இவன் பீமனிடம் தோற்று, பீமன் அவனிடமிருந்த “பௌண்டரம்“ என்னும் பெரிய சங்கினைப் பறித்துக்கொண்டான்..!, பாரதப்போர் துவங்கும் முன்னர், இந்த சங்கினால்தான் பீமன் விண்ணை முட்டும் அளவு “சங்கொலி“ எழுப்பினான்..!)
பௌண்ட்ர வாசுதேவனுக்கு ஆதரவாக, காசி ராஜனும் கிருஷ்ணருக்கு எதிராக போர் செய்தான்..! இருவரது தலையையும் பகவானின் சுதர்ஸன சக்ரம் கொய்தது..! சிவபெருமான் பிரார்த்தனைக்கிணங்க, காசியில், சுதர்ஸனர் நிலைப்பெற்று, இன்றளவும் அருள்பாலித்து வருகின்றார் அக்னி ரூபமாக..!
திருமங்கைமன்னன் படித்துறைப் போன்று, காசியிலும் மசான தோஷமில்லை..!
இங்குள்ள மசான அக்னியே சுதர்ஸன ஆழ்வாராகும்..!
அணையா அக்னி..!
ஈமக்ரியை செய்யும் போது, தனியே அக்னி எடுப்பதில்லை..! மசானத்திலுளள அக்னியையே எடுத்து, அதுவேதான் அடுத்து வரும் சவத்திற்கு அக்னி..!
“காசியாம்து மரணா முக்தி” – காசியில் மரணித்தால் முக்தி – “ஸ்ரீரங்கம்“ என்று நினைத்தாலே முக்தி..!
இங்கு ”பிந்து மாதவன்”தான் முக்தி நாயகன்..! – காசி முழுமைக்கும் நாயகன் இவனே..! சுயம்புவாக தோன்றிய சாலக்ராம மூர்த்தி இவர்..! சக்ராயுதத்தினையும், பாஞ்சஜன்யம் என்ற சங்கினையும், கௌமோதகி எனற கதையும், தாமரை மலரும், நான்கு திருக்கைகளில் ஏந்தி, ஒரு முறைப் பார்த்தாலே, ஜன்மம் முடியும் வரை தரிசிக்கவேண்டும் என்ற தாபத்தினை உண்டாக்கும் வகையில் பரிமளிக்கின்றார் இவர்..!
ஸ்ரீரங்கத்தினை, கி்பி. 1324ல், எப்படி மாலிக்காபூர் நிர்மூலமாக்கினானோ, அது போன்று, ஒரு காலத்தில் பிரும்மாண்டமாக விளங்கிய, பிந்து மாதவன் கோயில், 1669ம் வருடம் ஓளரங்கசீப்பினால் நிர்மூலமாக்கப்பட்டு, இத்திருக்கோயிலிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட கம்பங்கள், வேலைப்பாடுகள், கற்கள் யாவும் “அலம்ஷா“ எனும் மசூதிக்கட்ட பயன்படுத்தப்பட்டது..!
கி.பி. 1669 முதல் 1672 வரை, இத்தலத்தின் மூலவர் விக்ரஹத்தினை, கங்கை நதியின் நீரோட்டத்திற்கு அடியில் மறைத்து வைத்து, காப்பாற்றியுள்ளனர் இக்கோவிலார்கள்..! 1
1672ம் வருடம் சத்ரபதி சிவாஜி அவர்கள், இத்திருக்கோயிலை மீண்டும் நிர்மாணித்தார்..!
19வது நுாற்றாண்டில் மராட்டிய மன்னர் “பவன்ராவ்“ என்பவர், திருப்பணிகள் செய்து புனருத்தாரணம் செய்தார்..! இருந்தாலும் பழைய எழில் கொஞ்சும், பிரும்மாண்டமான கோயிலமைப்புப் போனது போனதுதான்..!
“ஜீன் பாப்டைஸ் டவார்னீர்” என்னும் யாத்ரீகர், இந்த கோவிலின் ஆறடி மூலவர் பற்றியும், வேலைப்பாடுகள் பற்றியும், நான்குத் திருக்கைகளின் திக்குகளில் எழும்பியிருந்த பிரும்மாண்ட கோபுரங்கள் பற்றியும், மூலவர் அணிந்திருந்த விலைமதிப்பில்லாத நகைகள் பற்றியு்ம் தமது குறிப்புகளில் குறித்துள்ளார்..!
ஸ்ரீவைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியானது, இங்கு ஸ்ரீரங்கத்தில் மூலஸ்தானத்தினை ஓட்டி, பெரியபெருமாளின் திருவடி வருடி வலமாக ஓடுகின்றது. விரஜா நதி மண்டபம் என்று ஒரு தனிமண்டபமே இங்கு உண்டு. —
காசியில் பிந்துமாதவனின் திருவடி கீழ், யமுனா, கங்கை, ஸரஸ்வதி, கீர்ணா, துத்பாப எனும் ஐந்து புண்யநதிகள் ஓடுவதாக ஐதீகம்..!
கார்த்திகை மாதம் பிரும்ம முஹூர்த்தத்தில் இந்தத் திருக்கோயில் அருகே அமைந்துள்ள பஞ்சகங்கை படித்துறையில் எவர் மூழ்கி நீராடுகின்றார்களோ, அவர்களது பாபம் யாவும், ஸ்ரீரங்கம் துலா மாத காவிரி ஸ்நானம் போன்று, ஸமஸ்த பாபங்களையும் போக்கக்கூடியதாம்..!
இப்படி பலவிதங்களில், காசிக்கும், ஸ்ரீரங்கத்திற்கும் பல ஒற்றுமைகள் இருப்பினும்,
காசியில் கருடன் பறக்காது..!
ஸ்ரீரங்கத்தில் கருடனுடன் சேர்ந்து பெருமாளே பயணிப்பார்..! நமக்குத் தரிசனம் தந்தருளுவார்..!
வேதத்தின் மீதேறி வேதத்தின் விழுப்பொருளே நமக்கு சேவை சாதித்தருளும் திவ்யமான ஸேவை.! அதுவும் ஒரு புண்யமான மாதத்தில்..! மிக மிக புண்யமான க்ஷேததிரத்தில்..!
அதனால்தான், “மாசி கருடன் ஸேவை – காசிக்குப் போனாலும் கிடைக்காது..!”.
மாசி எதனால் புண்யமான மாதம்…?
ஒரு ஸம்வத்ஸரத்தில் (வருடத்தில்), வானிலிருந்து இரண்டு துளிகள் நம் பாரத தேசத்தில் விழுகின்றன..!
ஒன்று அமிர்த பிந்து — ஒரு அம்ருத துளியானது, துலா(ஐப்பசி) மாதத்தில், காவிரியில் வீழ்கின்றது. இதனால்தான் துலா காவிரி ஸநானம் முக்யம்.
மற்றொன்று “க்ஷீர பிந்து” – திருப்பாற்கடலிலிருந்து விழும் இத்துளியானது, மாசி மாதம், கடலில் வீழ்கின்றது. அதனால்தான், மாசி கடலாடுதல் விசேஷம்..! மாசி மாத சமுத்ர ஸ்நானம் …!
இத்தகைய மாசி மாத கருட ஸேவை, காசிக்குப் போனாலும் கிடைக்காதுதானே…!
தாஸானு தாஸன்
முரளீ பட்டர்
Kindly click the following link for pictures :
———————————————————–
Namperumal Bhupathith Thirunaal – 12.01.19 to 22.01.19
Kindly click the following link for photos :
===========================================
Pictures/articles published in this page earlier have been moved to Gallery page.
===============================================================================================
Azhwargalum 108 divyadesamum The following link gives a chart showing a list of 108 divya desangals and who did mangalasasanam for each divya desam. This also gives total number of mangalasasana pasurams for each divya desam with azhwargalwise breakup. The details are taken out from Nalayara Divya Prabantha book published by Puthur swami. Event though everyone knows about this earlier, adiyen prepared this chart in a tabular format so that it will be easy for us to read.
Azhwargalum 108 Divya desamum – Koil Athan file
Correction in the above list: Sl.No.34 (Page 3) – Azhwar Thirunagari – Please read as follows : Namazhwar did mangalasasanam by 11 songs. By oversight it was mentioned as Thirunangaiazhwar.
==================================================
Kindly click the following links for photos taken during the festivals at Srirangam :
Namperumal Pagalpathu Utsavam – 14.12.12 to 23.12.12 Namperumal Erapathu Utsavam – 24.12.12 to 02.01.13 Sri Paramapathanathar Sannidhi, Sri Andal, Srirangam-16.12.12 to 13.01.13
Namperumal Boopathy Thirunal Utsavam – 18.01.13 to 28.01.13
Namperumal Theppa Thirunal Utsavam – 13.02.13 to 21.02.13 Namperumal Aathi Brahmothsavam -18.03.2013 to 27.03.2013
Viruppan Thirunaal utsavam – 29.04.13 to 09.05.13
==================================================
Pictures/articles published in this page have been moved to Gallery page.
==================================================
திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்,
வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும்,முகமும்
முறுவலும்,ஆஸநபத்மத்திலேயழுத்தின திருவடிகளுமாய்
நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்”
—————————————————————
ரஹச்யத்ரயம்:
திருமந்த்ரம்
திருவஷ்டாக்ஷரம் ஓம் நமோ நாராயணாய:
த்வய மந்த்ரம்
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே :
ஸ்ரீமதே நாராயணாய நம :
சரமச்லோகம்
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ / அஹம்த்வாசர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: //
ஸ்ரீவசன பூஷணத்தின் சாரார்த்தம்
ஆசார்ய அபிமானமே உத்தாரகம்
==================================================
SRI RANGANAYAGI THAYAR
———————————————————-
Thayar Muthangi sevai
Sri Kamalavali Thayar, Uriayur
Sri Maragadavalli Thayar, Thiruputkuzi
Sri Nilamangai Thayar, Thirukkadalmallai
Sri Vedavalli Thayar, Thiruvallikeni
Thayar muthangi sevai at various divyadesams
Picture kind courtesy: Sri.V.P.Ravi swami
Sri Pushpavalli Thaayaar, Poonamallee
Picture kind courtesy: Sri.E.Narayanan swami, Thiruvallikeni
Respected swamin,
request please advice for getting old print outs of pesum arangam
thanks and regards
Pattabiraman
IF I HAVE A NEXT JENMA, I WISH TO BORN IN SRIRENGAM AS AN AZHVAR
For Sr citizens, and physically handicapped Bhakthas, desirous of worshiping Divyadesa – Emberumans,, but deprived of their desire, are now able to have wonderful dharshan thro these channels to their immense pleasure, is something Great
can you please put this years thiruadhyayana utsav photos
dear swami
the link given in the wensite is relating to photos taken last year – 2011 which is
also mentioned in the events today page….dasan
the tiruvadanakramam link has failed pl re upload it
dear swami
the links have been rectified. now it is alright…dasan
thank u very much dasan
respected swamin,
your contribution, explanation on PESUM ARANGAM in respect of PADUKA SAHASRAM fantastic and it has created wonders in my life.
once again I suggest that to share all articles on PADUKA sahasram to enable to read, enjoy and understand better.
is it possible to get nalvaram tharum sri padukasahasram by your beloved respected father.
thanks and regareds
v pattabiraman
9003034416
can you upload this year viruppan thirunal photos pls
Sri U Ve Anna Murali Bhattar Thiruvadigale Saranam.
very nice
Namaskaram swami… Where is Swami NATHAMUNIGAL sannidhi inside srirangam temple, where Nathamunigal thirunakshatra satrumurai will take place?
Thanks swamini for this enquiry. Sriman Nathamunigal sannadhi is in Sri Rangavilaasam. This sannadhi is situated opposite to Sri Thondaradipodiyazhwar sannathi, next to yaanaiyethi mandapam. (Inside Sri Ranga Ranga Gopuram). In this sannadhi Sriman Nathamunigal varusha satrumurai will take place on 18.06.16 in the morning. ..adiyen
Thankyou swami…
Thanks so much for uploading the photos and videos. Its a rejuvenating experience for us devotees. Om Namo Narayanaya!